அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 30 வயதாகும் கைல் கோர்டி (Kyle Cordy), எட்டு வருடங்களுக்கு முன்பிருந்து விந்தணு தானம் (ஸ்பெர்ம் டோனேஷன்) செய்து வருகிறார். இன்று வரை சுமார் 1,000 பெண்களுக்கு இதன் மூலம் உதவி உள்ளார். உலகம் முழுக்க 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் தந்தை. இன்னும் 10 குழந்தைகள் விரைவில் இந்த உலகுக்கு வர உள்ளனர்.
கைல் கோர்டியால் விந்தணு தானம் செய்யும் வழக்கத்தை நிறுத்த முடியவில்லை என்பதால், வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து வருவதாகக் கூறுகிறார். இவரிடம் பழகும் பெண்கள், இவருடன் நிதந்தர ரிலேஷன்ஷிப்பை விரும்புவதில்லை. இதனால் அவர்களுடனான டேட்டிங் வாழ்க்கை சிறப்பானதாக இல்லை, நீண்ட கால உறவு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உறவு எதுவும் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் கைல்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், ``நான் விந்தணு தானம் செய்வது பற்றி, ரிலேஷன்ஷிப்பின் ஆரம்ப நிலையிலேயே என் இணையிடம் அலோசித்துவிடுவது சிறந்ததாக இருக்கும். அப்போதுதான் அவரால் என் நிலையை சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். என் இந்த வேலை என் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியபோதும், பல பெண்கள் தங்கள் குடும்பத்தைத் தொடங்க உதவியதை நினைத்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன்'' என கோர்டி தெரிவித்துள்ளார்.