Published:Updated:

Miss Universe: "உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்!"- பட்டம் வென்ற இந்தியப் பெண் ஹர்னாஸ் சாந்து!

Miss Universe ஹர்னாஸ் கவுர் சாந்து
News
Miss Universe ஹர்னாஸ் கவுர் சாந்து

கடந்த 20 வருடங்களாக எந்த இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி, பிரஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. லாரா தத்தா கடைசியாக 2001 -ம் ஆண்டு Miss Universe பட்டம் வென்றார். அதன்பிறகு, கடந்த 20 வருடங்களாக எந்த இந்தியப் பெண்களுக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவில்லை.

ஹர்னாஸ் கவுர் சாந்து
ஹர்னாஸ் கவுர் சாந்து

இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றிருக்கிறார். இவருக்கு வயது 21. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

இஸ்ரேலின் எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டியில் பங்கேற்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகர் எனும் பட்டம் பெற்றார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார். இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா, ஹர்னாஸ் கவுர் சாந்துவிற்கு வாகையை சூட்டினார்.

ஹர்னாஸ் கவுர் சாந்து
ஹர்னாஸ் கவுர் சாந்து
AP

சக போட்டியாளர்கள் ஷர்னாஸிடம், "நீங்கள் இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் பெண்களுக்கு அவர்கள் சந்திக்க கூடிய மன அழுத்தங்களுக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு ஹர்னாஸ் "இன்றைய இளம் தலைமுறையினர் முதலில் தன்னைதானே நம்ப வேண்டும். எப்போது அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று நம்புகிறார்களோ அப்பொழுதே அவர்கள் அழகாக மாறிடுவார்கள். உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை, உங்களுக்காக நீங்கள்தான் வெளியே வந்து பேச வேண்டும். ஏனெனில் நீங்கள்தான் உங்களுக்குத் தலைவி. நமக்காக நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். அதனால்தான் நான் இன்று இந்த இடத்தை அடைந்துள்ளேன்" என்றார்.

வாழ்த்துகள் ஹர்னாஸ் கவுர் சாந்து!