Published:Updated:

பிறந்தநாளில் சிறுவன் தவறவிட்ட பலூன்... 8,228 ரூபாய் அனுப்பி வாழ்த்தியவர்!

கசோன் ஜான்சன் ( Mountain Grove Elementary School )

ஹுய்லர் மரவேலை செய்பவர். புல்வெளியை வெட்டிக் கொண்டிருக்கையில், வேலியில் பலூன் சிக்கியிருப்பதை சில நாள்களுக்குப் பின்பு கவனிக்கிறார்.

பிறந்தநாள் பலூனை தவறவிட்ட சிறுவனுக்காக 8,228 ரூபாயை அந்நியர் ஒருவர் அனுப்பி உதவிய நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பிறந்தநாளில் சிறுவன் தவறவிட்ட பலூன்... 8,228 ரூபாய் அனுப்பி வாழ்த்தியவர்!
pixabay

அமெரிக்காவின் Missouri பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவன்தான், கசோன் ஜான்சன் (Kason Johnson). தன்னுடைய பிறந்தநாளின்போது, பள்ளியிருந்து திரும்புகையில், கைப்பிடியில் இருந்து பலூனை நழுவவிட, அந்த பலூன் 804 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று Tennesse நகரத்தில், டாட் ஹுய்லர் (Todd Huyler) என்பவரின் வீட்டில் விழுந்துள்ளது.

ஹுய்லர் மரவேலை செய்பவர். புல்வெளியை வெட்டிக் கொண்டிருக்கையில், வேலியில் பலூன் சிக்கியிருப்பதை சில நாள்களுக்குப் பின்பு கவனிக்கிறார். அந்த பலூனுடன் இணைக்கப்பட்ட உறையில், பலூனை விற்கும் வணிக நிறுவனத்தின் பெயரும், சிறுவன் பயிலும் `Mountain Grove Elementary School' என்ற பெயரும் இருந்துள்ளது.

அதைப் பார்த்தவர், கையால் செய்யப்பட்ட பரிசுகளையும், ஒரு பேஸ்பால் மட்டையையும் சிறுவனுக்கும், அவனின் ஆசிரியருக்கும் அனுப்பியுள்ளார். அதோடு சிறுவனுக்கு 100 டாலரையும் (8,228 ரூபாய்) வழங்கியுள்ளார். சிறுவனின் பெற்றோருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, அதில் தன்னுடைய புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

பிறந்தநாளில் சிறுவன் தவறவிட்ட பலூன்... 8,228 ரூபாய் அனுப்பி வாழ்த்தியவர்!

அதில், ``2-ம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு அவன் குடும்பம் பிறந்தநாளுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் எளிய பரிசு கொடுத்த செயல் என்னை வெகுவாக பாதித்தது. ஜான்சன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி, தன்னலமற்ற அன்பைக் காட்ட முயற்சி செய்யும் குடும்பத்தைப் பெற்றிருக்கிறான்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை பள்ளி, தங்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியதானது.