Published:Updated:

மேகன் - ஹாரி பற்ற வைத்த நெருப்பு... நேர்காணலுக்கு இங்கிலாந்து அரண்மனையின் பதில் என்ன?

Oprah with Meghan and Harry
Oprah with Meghan and Harry ( Joe Pugliese/Harpo Productions via AP )

`நிறத்தின் அடிப்படையில் மனிதர்களைக் கணிக்கும் அவலம் எப்போது நீங்கும்?’ என்கிற கேள்வியை நிற வேற்றுமைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மக்கள் பொதுவெளியில் இப்போது இன்னும் தீவிரத்துடன் வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன் மனைவி மேகன் மார்கெல்லுடன் இணைந்து சிபிஎஸ் (CBS) என்கிற அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சமீபத்தில் கொடுத்த பேட்டி உலகம் முழுக்கப் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தனிமை மற்றும் தனித்து விடப்பட்டதன் காரணமாகத் தனக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டன என்றும், ஆனால் தான் உதவி கோரிய பிறகும் தன்னுடைய இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரண்மனை எவ்விதத்திலும் முன்வரவில்லை என்றும் மேகன் மார்கெல் அப்பேட்டியில் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தான் கருவுற்றிருந்தபோது தனக்குப் பிறக்குப் போகும் குழந்தை கறுப்பு நிறத்துடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரண்மனையில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதைக் கேள்வியுற்று தான் வேதனையுற்றதாக மேகன் கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `நிறத்தின் அடிப்படையில் மனிதர்களைக் கணிக்கும் அவலம் எப்போது நீங்கும்?’ என்கிற கேள்வியை நிற வேற்றுமைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மக்கள் பொதுவெளியில் இப்போது இன்னும் தீவிரத்துடன் வைக்க ஆரம்பித்துள்ளனர்.

Britain's Prince Harry and Meghan, Duchess of Sussex
Britain's Prince Harry and Meghan, Duchess of Sussex
Photo: AP / Henk Kruger

இந்நிலையில் இந்த நேர்காணல் வந்து கிட்டத்தட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு இங்கிலாந்து அரண்மனை முதன்முதலாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளது. குறிப்பாக, தன் மகனின் நிறம் குறித்து அரண்மனையில் எழுந்த விவாதங்களைப் பற்றி மேகன் அந்தப் பேட்டியில் சொன்னதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பதில்வினை ஆற்றியிருக்கிறார்.

கடந்த சில வருடங்கள் ஹாரிக்கும் மேகனுக்கும் எத்தனை சவால்கள் நிறைந்ததாக இருந்திருக்கின்றன என்பதை நினைக்கையில், தான் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பமும் மிகவும் வருத்தமடைந்திருப்பதாக ராணி எலிசபெத் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, குழந்தையின் நிறம் குறித்து எழுந்த விவாதங்கள், அதனால் மேகனுக்கு ஏற்பட்ட வேதனை போன்றவை அக்கறையுடன் கவனிக்கப்படும் என்று சொல்லியிருக்கும் ராணி எலிசபெத், அதே நேரத்தில் ஹாரியும் மேகனும் எழுப்பிய வேறு சில பிரச்னைகள் அவரவர் பார்வைக்கு ஏற்ப மாறுபடும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், இவை பெர்சனலாகக் குடும்பத்தில் விவாதிக்கப்படும் என்றும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஹாரியையும் மேகனையும் ஒட்டுமொத்தக் குடும்பமும் நேசிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Buckingham Palace
Buckingham Palace
AP Photo/Matt Dunham
`அவர்கள் பேசியது கேட்டு அதிர்ந்து போனேன்!' - மேகன் - ஹாரி தம்பதி பகிர்ந்த அரண்மனை அதிர்ச்சிகள்

இந்நிலையில், தன் மகளுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றியபோது அதிலிருந்து அவள் வெளிவர அரண்மனை எந்தவோர் உதவியையும் செய்யவில்லை என்று மேகன் மார்கெல்லின் பெற்றோரும் சொல்லியிருக்கின்றனர்.

இந்த நேர்காணலைப் பார்த்த மக்களில் கிட்டத்தட்ட 5,000 பேரிடம் கருத்துக் கணிப்பு ஒன்று நடந்திருக்கிறது. அதில் 32% பேர் ஹாரியும் மேகனும் நியாயமின்றி நடத்தப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அதே 32% பேர் இருவருக்கும் எதிராகப் பேசியுள்ளனர். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த வயதான மக்களின் ஆதரவு, அரண்மனைக்கே இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.

அரச மௌனங்கள் உடைபடட்டும்!

அடுத்த கட்டுரைக்கு