Election bannerElection banner
Published:Updated:

கம்போடியா: சூர்யவர்மன் கட்டிய அங்கோர்வாட் கோயிலும், சோழ மன்னர்களும்! நாடுகளின் கதை - 3

நாடுகளின் கதை 3- கம்போடியா
நாடுகளின் கதை 3- கம்போடியா

சூர்யவர்மன் - பண்டைய மன்னர்களில் மிகச்சிறந்தவன் என்று வரலாற்றில் போற்றப்படக் கூடியவன். சோழ மன்னர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவன். ஏன் அவனும் ஒரு தமிழ் மன்னன்தான் என்று கூறுவோரும் உண்டு...

”உலகின் எட்டாவது அதிசயம்” அப்படித்தான் சொல்கிறார்கள். அது, உண்மையோ, இல்லையோ!

ஆனால், உலகின் மிகப்பெரிய கோயில், அதைப் பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. அவ்வளவு, பிரமாண்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாசார அமைப்பான யுனெஸ்கோவினால் ‘உலக பண்பாட்டுச் சின்னம்’ என்ற சிறப்புக்குரிய தகுதி பெற்ற வழிபாட்டுத்தலம் இது.

இந்த மாபெரும், கோயிலின் பரப்பு 400 ஏக்கருக்கும் அதிகம். கி.பி 1113 தொடங்கி 1150 வரை, ஏறத்தாள 37 ஆண்டுகள் கட்டப்பட்ட இந்தக் கோயில் ஒரு விஷ்ணு கோயில்!

கம்போடியா  அங்கோர்வாட் | Cambodia | Angkor wat
கம்போடியா அங்கோர்வாட் | Cambodia | Angkor wat
கத்தார்: பாரசீக வளைகுடாவில் ஓர் இந்திய மாநிலம் - நாடுகளின் கதை! - பகுதி 2

இதைக் கட்டியவன் இரண்டாம் சூர்ய வர்மன். இந்தக் கோயிலின் பெயர்தான் அங்கோர்வாட். இது அமைந்துள்ள நகரம் அங்கோர் நகரம். நாடு கம்போடியா. இது ஒரு பௌத்த நாடு; கம்யூனிஸ அரசு! ஆமாம்!

சூர்யவர்மன் - பண்டைய மன்னர்களில் மிகச்சிறந்தவன் என்று வரலாற்றில் போற்றப்படக் கூடியவன். சோழ மன்னர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவன். ஏன் அவனும் ஒரு தமிழ் மன்னன்தான் என்று கூறுவோரும் உண்டு.

சூர்யவர்மன் - ராஜேந்திர சோழன் நட்பு

பத்தாம் நூற்றாண்டில் கம்புதேசத்து பேரரசன் முதலாம் சூர்யவர்மன், தாம்பரலிங்கா நாட்டின் மீது போர்த்தொடுக்க நினைத்தான். அப்போது, தாம்பரலிங்கா (மலேசியா) அரசனுக்கு உதவியாக கடாரத்து மன்னன் (மியான்மர்) சங்கரம விஜயதுங்கவர்மன் வந்தான். அந்தச் சூழலில்தான், தன் நண்பனும், சோழப் பேரரசருமான ராஜேந்திர சோழனை உதவிக்கு அழைத்தான் முதலாம் சூர்யவர்மன். நண்பனின், கோரிக்கையை ஏற்று, ஏறத்தாழ ஆயிரம் கப்பல்களில், ஒருலட்சம் போர்வீரர்களை கடாரத்தின் மீது ஏவி போர் நடத்தினான் ராஜேந்திரன். ஒரே நாளில் ஏழு துறைமுகத்தை அடித்துக் காலிசெய்து, போரில், கடாரத்தையும், அதன் கடைசி மன்னனான சங்கரமன விஜயேந்திரனையும் அடிமைப்படுத்தினான் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

கம்போடிய அரசும் இந்தத் தமிழ் உறவை அங்கீகரித்து ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழையும் கற்று தருகிறது.

எங்கு உள்ளது?
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் நாடுகளை எல்லையாகக் கொண்டு அமைந்த நாடுதான் கம்போடியா. பிரான்ஸிடமிருந்து 1953ல் சுதந்திரம் பெற்ற இந்த நாட்டின் மக்கள் தொகை 1 கோடியே 65 லட்சம். பரப்பு 1,81,035 சதுர கி.மீக்கள்.

பௌத்த நாட்டில் மாபெரும் இந்துக் கோயிலா?

அங்கோர்வாட்

அங்கோர்வாட் கோயில் இந்து மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டப்பட்டது. விஷ்ணுவிற்காக அர்பணிக்கப்பட்டது.

65 மீட்டர் உயரம் கொண்ட மூன்று நிலைகளை உடைய கோபுரம், அதனைச் சுற்றிலும் நான்கு சிறிய கோபுரங்கள்; இரண்டு சிங்க சிலைகளைக் காவலாகக் கொண்ட நுழைவுவாயில்!

அந்த நுழைவு வாயில் வழியே கோயிலின் உள்ளே சென்றதும் விதவிதமான சிற்பங்கள், வித்தியாசமான சன்னல்கள், கதவுகள், மிக நீண்ட பிரகாரங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல தோற்றங்களில் தேவ மங்கையரின் சிலைகள், பொற்றாமரைக் குளம்.

கோபுர நுழைவாயில் பகுதியில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணக் காட்சிகள் அத்துடன் இரண்டாம் சூர்ய வர்மணின் அரசவைக் காட்சிகள் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டுள்ளன.

அனைத்துமே இந்துக் கோயில் என்பதற்கான சாட்சியங்கள்.

அப்படியானால் இது எப்படி புத்தமதக் கோயிலானது?!

விஷ்ணுக்கோயில் - பெளத்த கோயில்

பண்டையக் காலத்தில் கம்போஜம் என்றழைக்கப்பட்ட கம்போடியாவை எட்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இந்திய வம்சாவளி மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

பெளத்த துறவிகள்
பெளத்த துறவிகள்
Pexels

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாம் யசோவர்மன் என்ற மன்னன் யசோதராபுரம் என்ற நகரை உருவாக்கி பின்னர், அங்கோர் என அறிவித்து தலைநகராக மாற்றினார். அதுவே, அங்கோர்வாட் என்றழைக்கப்படுகிறது.

யசோவர்மனுக்கு பின் ஆட்சி செய்த கெமர் பேரரசு மன்னர்கள் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் பர்மா நாடுகளின் சில பகுதிகளை இணைத்தும் சிதறிக்கிடந்த கம்போடியா பகுதிகளை ஒருங்கிணைத்தும் 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.

கம்போடிய வரலாற்றில் பொற்காலமாக வர்ணிக்கப்படும் கெமர் பேரரசு ஆட்சியின் மன்னர்கள் சைவ, வைணவத்தை பின்பற்றி வாழ்ந்தனர். சில மன்னர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினர்.

இவர்கள் அங்கோர் நகரிலும், அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் பல இந்து, பௌத்த கோயில்களை உருவாக்கினர். அவை இன்றும் தலைசிறந்த பாரம்பர்ய பண்பாட்டுச் சின்னமாக உள்ளன.

இப்படி இந்து, பௌத்த மதங்களை மாறி மாறிப் பின்பற்றிய அமைச்சர்கள் அங்கோர்வாட் கோயிலில் எட்டு கைகளுடன் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலையை வைத்துள்ளனர்.

அந்த சிலை நீண்ட காதுகள், உயரமான கொண்டையுடன் புத்தரைப் போன்று உள்ளதால் நாளடைவில் இது புத்த கோயிலாகவே மாறிவிட்டது.

ஏழ்மை நாடு; சுற்றுலாவே பிரதானம்!

தென்கிழக்காசியாவின் 4வது ஏழ்மை நாடு எனக் கருதப்படும் கம்போடியாவில் அங்கோர்வாட் கோயில்களை பார்வையிடவரும் சுற்றுலா பயணிகளின் வருகையே இந்த நாட்டின் வருவாயில் முக்கிய பங்களிக்கிறது. அந்த வருவாய்தான், இக்கோயிலை பாதுகாக்கவும் பெரிதும் உதவியது.

இந்துக் கோயில் என்பதால் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலை புதுப்பித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

20 லட்சம் பேர் படுகொலையா?!

1975 முதல் 1979-ம் ஆண்டு வரை கம்போடியாவில் போல்பாட் என்பவரின் ஆட்சி இருந்தது. கம்யூனிஸ அரசு என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட இந்த அரசு, நகரத்தில் வசிப்பவர்கள் பணத்துக்காக வணிகம் செய்பவர்களை விரும்பவில்லை. எனவே, நகரத்தில் இருந்தவர்களை, கிராமத்துக்கு விரட்டி வயலில் இறங்கி வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படனர்.

அரசை எதிர்த்தால் மரணம்தான் என்ற வகையில், லட்சக்கணக்காணோர் கொன்று குவிக்கப்பட்டு, அவர்களின் மண்டை ஓடுகள் மலைப் போல குவிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எல்லாவற்றிக்கும் மேலாக, 10-20 லட்சம் மக்கள் கம்போடியாவிற்குப் போதும். எனவே, இரண்டாம் தர குடிமக்கள் வாழ்வாதாரத்தை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தது.

நாடுகளின் கதை 3- கம்போடியா
நாடுகளின் கதை 3- கம்போடியா
Pexels
"உங்களை வைத்திருப்பதால் எந்த நன்மையும் இல்லை, உங்களை அழிப்பதால் எந்த நஷ்டமும் இல்லை" ("To Keep you is no benefit; to destroy you is no loss"). என்ற கொள்கையை அரசு கையிலெடுத்தது.

இரண்டாம் தர மக்களை கொல்ல குண்டுகளை வீணடிப்பதா என்று 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிருடன் புதைத்தது போல்பாட் இராணுவம். சுயமரியாதை பாதிக்கும் என்று ஏழை மக்களுக்காக வெளிநாட்டில் இருந்து வந்த உதவிகளையும் மறுத்தது. பின், அந்நாட்டில் பசி, பட்டினிக் கொடுமைகள், வன்முறை தலைவிரித்தாடின.

இந்த நவீன காலத்தில் கூட, கம்போடிய நாட்டில் 70 சதவீத மக்களுக்கு மின் இணைப்பு இல்லை. 30 சதவீத மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. அங்குள்ள மருத்துவமனைகளும் சரியான பாதுகாப்புடன் இல்லாத காரணத்தால் 70 சதவீத மக்களுக்குப் போதுமான சுகாதாரம் கிடைப்பதில்லை.

கொரோனாவால் பெரிதும் பாதிக்காத நாடாக இருந்தாலும், லாக்டௌனால் பொருளாதாரமாக மிகவும் மோசமான நிலைக்கு சென்ற கம்போடியாவிற்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை நரேந்திர மோடி தலைமையிலான நம் அரசு அனுப்பி வைத்தது.

நாடுகளின் கதை 3- கம்போடியா
நாடுகளின் கதை 3- கம்போடியா
Pexels

2500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நாட்டைப் பற்றி நாம் பேச வேண்டிய முக்கிய காரணம், நம் கலாசாரத்தை பெரிதும் கொண்ட நாடு அது. எல்லா நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அங்கோர்வாட் கோயிலை பார்க்க திரள்கிறார்கள். ஆனால், இந்தியர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவு தானாம்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது நாமும் பாரம்பர்ய அங்கோர்வாட் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கோயில் மணியை ஒரு முறை அடித்துவிட வேண்டும். சரி, இவ்வளவு பெரிய கோயிலில் மணி எவ்வளவு பெரியதாக இருக்கும்?!

பயணிப்போம்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு