Published:Updated:

குழந்தைகள் தவறிழைத்தால் பெற்றோர்களுக்கு தண்டனை; சீனாவில் புது சட்டம்!

குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்ட வரைவை ஆராய்ந்த தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடவும், ஓய்வெடுக்கவும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவும் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

குழந்தைகள் சட்ட விரோதமான செயல்களில் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடும் போது அதற்காகப் பெற்றோரைத் தண்டிக்க சட்டம் கொண்டுவர சீன நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டத்தின் படி, பெற்றோரின் பாதுகாப்பில் வளரும் குழந்தை தவறு செய்யும் போது அக்குழந்தையின் பெற்றோர் தண்டிக்கப்படுவர். குடும்பக் கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய நாடாளுமன்ற விவகார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் டைவே (தேசிய மக்கள் காங்கிரஸ்), ``இளம் பருவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் அடிப்படையானது குடும்பக் கல்வி இல்லாதது" என்று கூறியிருக்கிறார்.

Chinese family (representational image)
Chinese family (representational image)
Image by Peggy und Marco Lachmann-Anke from Pixabay
`இனி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்!' - சீனாவின் முடிவுக்கு காரணம் என்ன?

குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்ட வரைவை ஆராய்ந்த தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடவும், ஓய்வெடுக்கவும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவும் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருப்பது, `ஆன்மிக அபின்' எனச் சொல்லுமளவு கடவுள் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது, இணைய பிரபலங்களைக் குருட்டுத்தனமாக வழிபடுவது போன்றவற்ற பதின் வயதுக் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, பெற்றோர்களைப் பயன்படுத்த இந்த ஆண்டு தொடக்கம் முதல் பெய்ஜிங் நடவடிக்கை எடுத்துவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், குழந்தைகள் ஆன்லைனில் விளையாடும் நேரத்தைக் குறைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒரு மணி நேரம் விளையாடக் கல்வி அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. மேலும் மாலை வேளையிலும், விடுமுறை நாள்களிலும் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்கள் வழங்கவும் தடை விதித்தது. இந்த நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு குடும்பக் கல்வியை ஊக்குவிக்கவும் செய்தன. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஒன்றாகக் கழிக்கும் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் குடும்பக் கல்வியை வளர்க்க சீனா திட்டமிட்டுச் செயல்பட்டும் வருகிறது.

Children playing with their Parents
Children playing with their Parents
AP Photo/Andy Wong
`இனி குழந்தைகளுக்கு வாரத்துக்கு 3 மணி நேரம்தான் ஆன்லைன் கேம்ஸ்' - சீன அரசு உத்தரவு; என்ன காரணம்?

ஒரு குழந்தையின் எதிர்காலம் அதற்குக் கிடைக்கும் பால்யத்தின் மூலம்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வளமான பால்யத்தை அமைக்க சீன அரசு மெனக்கெடுவது பாராட்டுக்குரியது. ஆனாலும் குழந்தைகள் செய்யும் தவற்றுக்குப் பெற்றோர்களைத் தண்டிப்பது அர்த்தப்படுமா என்ற கேள்வியை ஒரு தரப்பினர் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் சீன அரசு சிறுவர்களுக்குக் கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு