Published:Updated:

`கொரோனா வைரஸை வென்ற காதல்..!’- பாரம்பர்ய முறைப்படி சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர்

சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர்
சீனப் பெண்ணை மணம் முடித்த இந்தியர் ( HT Photo )

கனடாவில் படிக்கும்போது, ஷிகோ வாங்குடன் சத்யார்த் மிஷ்ராவுக்கு காதல் மலர்ந்தது. பெற்றோர் ஒப்புதலுடன் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய காதலரை சீனப் பெண் ஒருவர் மணமுடித்துள்ளார். இவர்களின் திருமணம் மத்தியபிரதேசத்திலுள்ள, மாண்டசாரில் நடைபெற்றது. திருமணத்துக்காகக் கடந்த புதன்கிழமை மணமகள் ஷிகோ வாங் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். மத்தியப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் மணமகள் குடும்பத்தினர் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய சீன காதல் ஜோடி
இந்திய சீன காதல் ஜோடி

பரிசோதனையில் இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. எனினும், தினசரி அவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு மணமகள் குடும்பத்தார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணத்தில் பங்கேற்க மணமகளின் பெற்றோர் மற்றும் இரு உறவினர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பயம் காரணமாக, மேலும் சில உறவினர்களுக்கு விசா வழங்குவதற்கு இந்தியா மறுத்துவிட்டது.

`நிறைவேறிய கோரிக்கை!' - கிராமத்துக்கு வந்த முதல் பேருந்தை வரவேற்ற மதுரை சிறுமி சஹானா #NowAtVikatan

மணமகன் பெயர் சத்யார்த் மிஷ்ரா. கனடாவில் படிக்கும்போது, ஷிகோ வாங்குடன் சத்யார்த்துக்குக் காதல் மலர்ந்தது. பெற்றோர் ஒப்புதலுடன் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். தொடர்ந்து , இவர்களின் திருமணம் இந்திய பாரம்பர்ய முறைப்படி நேற்று நடந்தது. உற்றார், உறவினர்கள் முன்னிலையில், மணமகள் கழுத்தில் சத்யார்த் மிஷ்ரா தாலி கட்டினார்.

கொரோனா வைரஸ் மருத்துவமனை
கொரோனா வைரஸ் மருத்துவமனை

சீனாவில் வரவேற்பு விழா நடக்க இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதற்குத் இந்தத் தம்பதி முடிவு செய்துள்ளனர். இன்னும், சில நாள்களில் மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாயகம் திரும்புகின்றனர். புதுமணத் தம்பதியும் விரைவில் கனடாவில் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்க உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு