Published:Updated:

ஜெர்மனியின் `ஜிகு ஜிகு' கிறிஸ்துமஸ் மார்க்கெட்! #MyVikatan

14-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நகரின் பல முக்கிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக `டென்ட்' கடைகள்தான் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட்.

Representational Image
Representational Image

கார்த்திகை மாத மழையில் முளைக்கும் காளானுக்கு சுவை அதிகம். அது மாதிரி ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இன்று உலகின் பல நாடுகளில் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட் காணப்பட்டாலும் இதற்கு முன்னோடி என்னவோ ஜெர்மனிதான்.

Representational Image
Representational Image

14-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நகரின் பல முக்கிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக `டென்ட்' கடைகள்தான் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட். 12-ம் நூற்றாண்டின் இறுதியில் டிசம்பர் மார்க்கெட் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடைகள், அதன்பின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஆனது. நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும் இந்தக் கடைகளில் பெரும்பாலும் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், இந்த சீஸனின் பிரத்யேக பிஸ்கட்கள், ஒயின் மற்றும் ஹாட் டாக் போன்ற இதர உணவுகள் இங்கு கிடைக்கிறது.

சீனப் பொருளாதாரத்தை வீழ்த்திய `திருட்டு' தேநீர்! - வாசகர் பகிர்வு #MyVikatan

ஆனால், வருமானமோ மிக அதிகம். ஜெர்மனியில் டோர்ட்முண்ட், கொலோன், டிரெஸ்டன், பெர்லின், மூன்சென், ஸ்ட்டுட்கார்டு, பிராங்பேர்ட், லைப்சிக் போன்ற நகரங்களின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் மிகவும் பிரபலம்.

Representational Image
Representational Image

2017-ம் ஆண்டு, டோர்ட்முண்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த 45 மீட்டர் (147 அடி) உயரமுடைய கிறிஸ்துமஸ் மரம்தான் உலகிலேயே மிகப்பெரியது. 40 டன் எடைகொண்ட இந்த `கிறிஸ்துமஸ் ட்ரீ' செய்ய 1,700 பர் (Fir) மரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வருடத்தில் மட்டும் அமைந்த 300 கடைகளை ஏறத்தாழ மூன்றரை மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Representational Image
Representational Image

பிராங்ஃபர்ட் நகரைப் பொறுத்தவரையில் சராசரியாக 3 மில்லியன் மக்கள் வருடந்தோறும் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு விஜயம் செய்கின்றனர். Zeil ல் ஆரம்பித்து ரோமர் பிளாட்ஸ் வரையிலும் நீண்டிருக்கும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்கு மாலையில் சென்றால் எங்கும் பகல் போல வண்ண விளக்குகளுடன் கண்களுக்கு மட்டுமல்ல நாவுக்கு விருந்து கிடைக்கும். மாலை நாலரை மணிக்கெல்லாம் இருட்டி விடுவதால் கடை முழுவதும் வண்ண LED விளக்குகள் ஒளிர்ந்து நம்மை பரவசப்படுத்துகிறது. என்ன, ஜெர்மனிக்கு கிளம்பிவிட்டீர்களா!

-ஜே.ஞா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஜெர்மனியின் `ஜிகு ஜிகு' கிறிஸ்துமஸ் மார்க்கெட்! #MyVikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/