Published:Updated:

`அரச பட்டமும் வேண்டாம்; நிதியுதவியும் வேண்டாம்!' - காதலுக்காக துறந்த ஜப்பான் இளவரசி மகோ

மகோவின் திருமணம் அக்டோபரில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின் அவர்கள் அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தன் கல்லூரிக்கால காதலனை திருமணம் செய்வதற்காக ஜப்பானிய இளவரசி தனது அரச பட்டத்தை துறந்து, இழப்பீட்டுப் பணத்தையும் மறுத்த நிகழ்வு உலகெங்கும் நெகிழ்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்தியான மகோ, 2012-ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நண்பருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.

கீ கோமுரோ
கீ கோமுரோ
(AP Photo/Eugene Hoshiko)
107 வயதைத் தொட்ட ஜப்பான் இரட்டை சகோதரிகள்; அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்களில் கின்னஸ் சாதனை!

திருமணம் அறிவித்தது முதல் திருமண தாமதத்திற்கான காரணங்கள் சர்ச்சைகளாகக் கிளம்ப, மகோவும் கீ கோமுரோவும், உடனடியாக திருமணம் செய்து கொள்வதை விட தங்களுக்கு வாழ்வைத் திட்டமிட காலம் தேவைப்படுவதாகக் கூறினர். 2020-ம் ஆண்டு நவம்பரில் இம்பீரியல் ஹவுஸ் ஹோல்ட் ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையில் இளவரசி மகோ, ``நாங்கள் திருமணம் செய்து கொள்வதுதான் எங்கள் இதயங்கள் மதிப்புடன் வாழ்வதற்கு சிறந்த தேர்வு. எங்களில் ஒருவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. மகிழ்ச்சியான நேரங்களிலும் மகிழ்ச்சியற்ற நேரங்களிலும் ஒருவருக்கொருவர் தோள் சாய்ந்து கொள்வோம்" என்று கூறினார்.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரசு நிதியுதவியும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார் இளவரசி. இது, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதால் தனக்கு கொடுக்கப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நிராகரித்துள்ளார் மகோ.

மகோவின் திருமணம் அக்டோபரில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின் அவர்கள் அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் இளவரசி மகோ
ஜப்பான் இளவரசி மகோ
கைநழுவிய வரலாற்றுச் சாதனை; `பெண்கள் பெரும்பான்மை நாடாளுமன்றம்' என்ற வாய்ப்பை இழந்த ஐஸ்லாந்து!

அரச விதிமுறைகளின்படி ஆண் வாரிசுகள் மட்டுமே அரியணை ஏற முடியும் என்பதால் தற்போது 14 வயதாகும் ஹிசாஹிடோ ஜப்பானின் இளவரசராக இருப்பார். காலம் இத்தனை மாறிய பின்னும் அரச விதிமுறைகள் காதலனை கரம் பிடிக்கும் இளவரசியை பட்டத்தை விட்டு வெளியனுப்புவதாக இருப்பதை உலக மக்கள் விமர்சித்து வருகிறார்கள். எனினும் மகோவின் காதலும் அதற்காக அவர் செய்த தியாகமும் எல்லாருடைய மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு