Published:Updated:

மோடி, ட்ரம்ப்... முகநூலில் தலைவர்களைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! -என்ன காரணம்?

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

கொரோனா வைரஸ்குறித்த நம்பத்தகுந்த தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு, அரசியல் தலைவர்களை முகநூலில் பின் தொடர்கின்றனர்.

கொரோனா வைரஸ் உலக வழக்கை நிலைகுலையச் செய்துள்ளதோடு, மக்களின் அன்றாட வாழ்க்கைச்சுழற்சியை மாற்றி அமைத்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் அடங்கிய தேசிய அளவிலான ஊரடங்கால், பெரும்பாலானோர் தங்களது பொழுதுபோக்காக சமூக வலைதளங்களையே கருதுகின்றனர். இதனால், சமூக வலைதளங்களில் அதிகப்படியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

சமூகவலைதளங்கள்
சமூகவலைதளங்கள்

இவ்வாறு பகிரப்படும் செய்திகளில் போலிச் செய்திகள் அதிக அளவில் பரவி, பல்வேறு விதமான எதிர்வினைகளை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அதிக அளவிலான பயனர்களை தன்வசப்படுத்தியுள்ள சமூக வலைதள நிறுவனங்கள், தற்போது நிலவிவரும் பெருந்தொற்றுக் காலங்களில் சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும் விதமாக அரசுகளுடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் பரவுவது ஒருபுறம் இருந்தாலும், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் சமயத்தில் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் வழங்கிவரும் தகவல்கள், அறிவுரைகள், அவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள், மக்களையும் பத்திரிகையாளர்களையும் சென்றடையும் முதன்மை செய்திக் கடத்திகளாக அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களே இருக்கின்றன.

சமூக வலைத் தளம்
சமூக வலைத் தளம்

குறிப்பாக, பெரும்பாலான நாடுகளின் அரசியல் தலைவர்களை அவர்களது ஆதரவாளர்களும், பொதுமக்களும் முகநூல் பக்கங்களால் அதிக அளவில் பின் தொடர்ந்துவருகின்றனர். பெரும்பாலான சமூக வலைதளப் பயனாளர்கள், அதிகாரபூர்வ செய்திகளைப் பெறுவதற்காகவே அரசியல் பிரபலங்களைப் பின் தொடர்கின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், மக்களுடனான தொடர்பைப் பேணும் விதமாகவும், அரசின் செயல்பாடுகளை விளக்கும் விதமாகவும், பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் முகநூல் பக்கங்களில் நேரலை மூலமாகத் தோன்றி உரை நிகழ்த்திவருகின்றனர். உலகத் தலைவர்களின் முகநூல் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தி, 'முகநூலில் உலகத் தலைவர்கள்' என்ற தலைப்பில் தரவரிசைப் பட்டியலை பர்சன் கோன் மற்றும் வோல்ஃப் எனும் உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகத் தலைவர்களின் 721 முகநூல் பக்கங்களை ஆய்வுசெய்த இந்நிறுவனம், மார்ச் மாத கால கட்டத்தில் மட்டும் இந்தப் பக்கங்களுக்கு 13 மில்லியன் பேர் புதிதாக விரும்பம் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய லைக்குகள், கடந்த 12 மாத காலங்களில் அரசியல் தலைவர்களின் ஃபேஸ்புக் பக்கங்கள் பெற்ற லைக்குகளைவிட 3.7% அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இந்த நிறுவனத்தின் தரவரிசைப் பட்டியலின்படி, முகநூல் பயனாளர்களால் அதிகமாக பின் தொடரப்படும் உலகத், தலைவர்களில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட பக்கத்தில், 44.7 மில்லியனுக்கு அதிகமானோர் லைக் செய்துள்ளதோடு, அவரது அலுவலக முகநூல் பக்கத்தில் 13.7 மில்லியனுக்கு அதிகமானோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதிவுகள் சராசரியாக 1.7 மில்லியன் மக்களை ஃபேஸ்புக் மூலம் சென்றடைகிறது. இது, அவரை பிந்தொடர்வோரில் 3.8 சதவிகிதமாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தரவரிசைப் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 26 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்ற இரண்டாவது உலகத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதிபர் ட்ரம்ப்பை பின்தொடர்வோரில் 3.3 சதவிகிதம், அதாவது 8,77,000 பேரை முகநூல் வாயிலாக அவர் சென்றடைகிறார்.

பிரதமர் மோடி, முகநூல் பக்கத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற உலகத் தலைவராக விளங்கினாலும், முகநூலில் பதிவிடுதல், விருப்பங்களைத் தெரிவித்தல், செய்திகளைப் பகிர்தல் போன்ற செயல்பாடுகளை குறைந்த அளவிலேயே மேற்கொண்டுள்ளார். முகநூலில் அதிகப்படியான செயல்பாடுகளை மேற்கொண்ட உலக அரசியல் தலைவராக டொனால்டு ட்ரம்ப் விளங்குகிறார்.

மோடி -ட்ரம்ப்
மோடி -ட்ரம்ப்

இதனிடையே, உலகத் தலைவர்களின் முகநூல் பக்கங்கள் பெற்ற லைக்குகளைவிட 4 மடங்கு அதிகம் பெற்றுள்ளவராக விளங்கும் பிரதமர் மோடி, முகநூலில் சுமார் 84 மில்லியன் செயல்பாடுகளுடன் 3-ம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ஆனால், தனது முகநூல் பக்கத்தில் 10 மில்லியனுக்கு அதிகமான லைக்குகளை மட்டுமே பெற்றுள்ள பிரேஸில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ 205 மில்லியன் செயல்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக, செயல்பாடுகள் அடிப்படையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆய்வை மேற்கொண்ட பர்சன் கோன் மற்றும் வோல்ஃப் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளுள் ஒருவரான சாட் லாட்ஸ், “ஃபேஸ்புக்கில் உலக அரசியல் தலைவர்களைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். கொரோனா வைரஸ் குறித்த நம்பத்தகுந்த தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்போடு, அரசியல் தலைவர்களை முகநூலில் பின் தொடர்கின்றனர். மேலும், இந்த தொற்றுநோயைக் கையாளுவதில் அவர்கள் நாட்டின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளும் விளைவாகத் தற்போது இந்த விகிதம் உயர்ந்திருக்கிறது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

ஆனால், எங்கள் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள், கொரோனா குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு 36 சதவிகிதத்திற்கும் அதிகமாக இணையம் வழியாகவே தகவல்களைப் பெறுகின்றனர், 20 சதவிகிதத்துக்கு மேல் ஃபேஸ்புக் மூலமாகப் பெறுகின்றனர்” என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு