Published:Updated:

`கேக் சாப்பிடும் போட்டி!' - ஆஸ்திரேலியா தினக் கொண்டாடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Celebrations
Celebrations ( Representational Image )

உண்ணும்போது தொண்டையில் சிக்காமல் இருக்கத் தண்ணீர் குவளைகளும் அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன. போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்கென்று தனி கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து இருக்கிறது.

தன்னிலை மறந்து சந்தோஷமாக விளையாடும் விளையாட்டுகூட சில நேரங்களில் வினையாகிவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் 'ஆஸ்திரேலியா தினம்' கொண்டாட்டத்தின்போது 'கேக்' உண்ணும் போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

போட்டியில் உயிரிழந்த ஆஸ்திரேலிய பெண்
போட்டியில் உயிரிழந்த ஆஸ்திரேலிய பெண்

நேற்று, அதாவது 27-ம் தேதி ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ் லேண்ட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 'ஆஸ்திரேலியா தினம்' கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக 'கேக்' சாப்பிடும் போட்டி நடந்தது. குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதிகமான கேக்குகளை சாப்பிடுவதே சவால். இதில் கலந்துகொண்ட 60 வயதுப் பெண் ஒருவருக்குப் போட்டியின் இடையே மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

CPR
CPR

இதைத் தொடர்ந்து, ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து, அவசர எண்ணுக்குத் தொடர்புகொண்டுள்ளனர். அவரின் அபாயமான நிலைமையைத் துணை மருத்துவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், உடனே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்வின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியைத் தந்தது. அதில், போட்டியாளர்கள் அனைவருக்கும் சாக்லேட் மற்றும் உலர்ந்த தேங்காய்த் துருவல் கொண்டு மூடப்பட்ட கேக்குகள் தரப்பட்டிருக்கின்றன. உண்ணும்போது தொண்டையில் சிக்காமல் இருக்கத் தண்ணீர் குவளைகளும் அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன. போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்கென்று தனி கூட்டமும் அவர்களைச் சூழ்ந்து இருக்கிறது.

Cake
Cake
பாமாயில் நல்லதா, கெட்டதா? ஆயில் அரசியலும் அதன் பின்னணியும்

போட்டியின்போது தற்செயலாக அவர் உலர்ந்த தேங்காய்த் துருவலைச் சுவாசித்ததால்தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது என்று சில பார்வையாளர்கள் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். மேலும், ``போட்டி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் உற்சாகமாய் இருந்தவர் திடீரென இப்படி மயங்கி இறந்துவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நிகழ்வு மிகவும் வேதனையளிக்கிறது" என்று அவருடன் பங்கேற்றவர்கள் தங்களின் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

பின் செல்ல