Published:Updated:

புத்தம் புது காலை : புதைத்து வைக்கவா புத்தகங்கள்? சில நிகழ்வுகளும், மனிதர்களும், பதிவும்! #6AMClub

World book day
News
World book day

"ஒரு எழுத்தாளராக நானே புத்தகங்களை மதிக்கவில்லை என்றால், வேறு யார் தான் புத்தகங்கள் எனும் பொக்கிஷங்களை மதிப்பார்கள்?"

புத்தக தினத்தன்று பொதுவாக நாம் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி அல்லது எழுத்தாளரைப் பற்றித்தானே எழுதுவோம். இங்கு ஒரு நாடு, ஒரு மணப்பெண், ஒரு நண்பர் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா?

"இன்று ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும், டிக்கெட் இலவசம்'' என்கிறது நெதர்லாந்து அரசு.

World book day
World book day

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"இளைய சமுதாயத்தை புத்தகங்கள் பக்கம் திருப்பவே இந்த நடவடிக்கை'' என்று உலக நாடுகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது இந்நாட்டு அரசாங்கம். 'நைலா ஷமல்' என்ற பாகிஸ்தானிய மணப்பெண் தனது திருமணத்திற்கு சீதனமாக வழங்கப்படும் பொன் பொருளுக்கு பதிலாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார். "ஒரு எழுத்தாளராக நானே புத்தகங்களை மதிக்கவில்லை என்றால், வேறு யார் தான் புத்தகங்கள் எனும் பொக்கிஷங்களை மதிப்பார்கள்?" என்று இவர் எழுப்பிய கேள்வி, மற்ற எழுத்தாளர்களையெல்லாம் சிந்திக்க வைத்தது.

ட்விட்டர் மற்றும் முகநூலில் மினிமீன்ஸ் என்ற பெயரிலும், விகடனில் சாய்மீரா என்ற பெயரிலும் எழுதிவரும் மீனாட்சிசுந்தரத்தின் புத்தக தின வரிகள் இவை!

"இத்தனை வருடங்களாகச் சேமித்த புத்தகங்களைக் காலி செய்தபின், இப்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹை ஸ்கூல் படிக்கும்போது காலையில் பள்ளிக்கு பஸ்ஸில் செல்லும் நான் மாலையில் திரும்பும்போது நடந்துவந்து, தினசரி மிச்சமாகும் நாலணாவைச் சேர்த்து, ரத்னபாலா, அம்புலிமாமா, முத்துக்காமிக்ஸ் என வாங்கி அடுக்கி அழகு பார்க்க ஆரம்பித்து, பிற்பாடு அது ஒரு வியாதியாகவே மாற ஆரம்பித்து விட்டது.

கல்லூரி காலங்களில் என் புத்தக ஷெல்ஃபை நிரப்புவதற்காக விலைகொடுத்து வாங்கிய புத்தகங்கள் தவிர, இரவல் வாங்கிய புத்தகங்கள், ஏன் சில சமயங்களில் லைப்ரரியில் திருடிய புத்தகங்கள் என்றெல்லாம் என்னுடைய புத்தக ஷெல்ஃபை நிரப்ப ஆரம்பித்தேன்.

உலக புத்தக தினம்
உலக புத்தக தினம்

முதலில் அப்பா, அம்மா, திருமணத்திற்குப் பிறகு மனைவி என எல்லோரும் எனது புத்தக செலவைத் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். இப்படி, பார்த்துப்பார்த்து சேர்த்த புத்தகங்கள் எதுவும் இல்லாமல் என் ஷெல்ஃப் காலியாக இருப்பது கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான். அதற்குக் காரணம் அஷ்ரஃப்.

சிறுவயதில் பக்கத்து வீட்டில் இருந்தவன் அஷ்ரஃப். என்னைப்போலவே புத்தகங்கள் படிப்பவன் என்றாலும் படித்து முடித்ததும், "வீட்ல வெச்சா வாப்பா திட்டுவாரு. புத்தகத்தை நீ வெச்சுக்க... நான் என்னிக்காவது வாங்கிக்கறேன்!" என்றபடி என்னிடம் கொடுத்து விடுவான். ஆனால், இப்போதும் புத்தகங்கள் படிக்கும் அவன், அவனுடைய வாப்பா இறந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆன பிறகுகூட ஒருநாளும் என்னிடம் வந்து 'நான் கொடுத்த புத்தகத்தைக் கொடு' என்று ஒரு புத்தகத்தையும் திருப்பிக் கேட்டதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலையின்றி குறைந்த சம்பளத்தில் சிரமப்படும் அவன் ரெண்டு வருடம் முன்பு, 'மாப்ள... ஆயிரம் ரூவான்றாங்கடா அந்த புக்கு. வாங்க காசில்ல... நீ வாங்கின தான? கொடேன்... படிச்சுட்டுத் தாரேன்' என்று கேட்கும்போது தான்... 'வாங்கிப் படித்த புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது எவ்வளவு பெரிய பாவம்' என்பது உறைத்தது.

புதைத்து வைக்கவா புத்தகம்?

விரித்து பரப்புதல் அல்லவா அதன் குணம் என்று யோசித்தவன் அன்று அவனுக்கு அந்தப் புத்தகத்துடன் இன்னும் சில புத்தகங்களைக் கொடுத்து, 'நீ படித்தவுடன் அடுத்து படிக்க விரும்புபவருக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க வேண்டும்' என்ற வேண்டுதலோடு கொடுத்தவன் எனது மற்ற புத்தகங்களையும் நண்பர்கள், பள்ளி, லைப்ரரி என்று தொடர்ந்து அவ்வாறே கொடுத்து வருகிறேன்.

உலக புத்தக தினம்
உலக புத்தக தினம்

ஆனால், முன்பு நிரம்பி வழிந்த என் ஷெல்ஃபை விட, இந்த புத்தகங்கள் இல்லாத காலி ஷெல்ஃப்தான் எனக்கு மிகப் பெரிய பெருமையாய் இருக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார் மீனாட்சி சுந்தரம்.

சில புத்தகங்கள் மட்டுமல்ல, இதுபோன்ற சில நிகழ்வுகளும், பதிவுகளும் நம்மைத் திருப்பிப் போட்டுவிடும் என்பதே உண்மை.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தக தின நல்வாழ்த்துகள்!