`இந்தப் பொழப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது’ என பாரம்பர்ய உணவுகளை அந்தந்த இடங்களுக்கே சென்று உண்பவர்களின் எண்ணிக்கை அதிகம். எங்கு சென்றால் என்ன உணவுகளைச் சாப்பிடலாம், எந்தெந்த நாடுகளின் பாரம்பர்ய உணவுகள் அசத்தாலானவை போன்றவற்றை பயனாளர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிட்டுள்ளது ’டேஸ்ட்அட்லாஸ்’ (Taste Atlas) என்ற உணவு ஆர்வலர்களுக்கான இணையதளம்.

அந்த மதிப்பெண்களின் அடிப்படையில், 2022-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த உணவுகளை கொண்ட 95 நாடுகளை (World's Best Cuisines) குறிப்பிட்டு இருந்தது. அந்தப் பட்டியலில் 4.54 மதிப்பெண்கள் பெற்று இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தாலி முதலிடத்திலும், கிரீஸ் இரண்டாம் இடத்திலும், ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும், ஜப்பான் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.
மெக்ஸிகோ, துருக்கி, அமெரிக்கா, பிரான்ஸ், பெரு, சீனா போன்ற நாடுகள் முறையே ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தியாவில் சிறப்பாக மதிப்பிடப்பட்ட 460 உணவுகளையும் குறிப்பிட்டுள்ளது ’டேஸ்ட்அட்லாஸ்’. அதில் ரொட்டி, நாண், சட்னி, பிரியாணி, தால், தந்தூரி போன்றவை இடம் பெற்றுள்ளன. அதோடு எந்தக் கடைகளில் என்ன உணவுகள் புகழ்பெற்றவை என 450 இடங்கள் குறிப்பிட்டுள்ளன.

மும்பையின் ஸ்ரீ தாக்கர் போஜனலே உணவகத்தின் கிச்சடி, பெங்களுர் கரவல்லி உணவகத்தின் ஆப்பம், டெல்லி புகாரா உணவகத்தின் தந்தூரி சிக்கன், சென்னை அன்னலக்ஷ்மி உணவகத்தின் குல்சா, மலாய் கோஃப்தா, பாலக் பன்னீர் போன்றவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியல் ’டேஸ்ட்அட்லாஸ்’ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. நெட்டிசன்கள் பலரின் கவனத்தை இந்த பதிவு பெற்றாலும், மொராக்கோ, எத்தியோப்பியா, மியான்மர் போன்ற பல நாடுகளின் சிறந்த உணவுகள் இதில் குறிப்பிடப்படாமல் இருக்கின்றன என்று பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.