சாடர்னினோ கார்சியா (Saturnino de la Fuente Garcia) என்பவர்தான் உலகிலேயே மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 112 வயதான இவர் பிப்ரவரி 11, 1909-ல் ஸ்பெயின் நாட்டிலுள்ள லியோனில் பிறந்தவர். இவர் 1933-ல் ஆண்டனியோ பாரியோ (Antonina Barrio) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஏழு மகள்களும் 14 பேரக் குழந்தைகளும் 22 கொள்ளுப்பேரன்களும் உள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஷூ தயாரிப்பவராக தனது வாழ்வைத் தொடங்கிய இவர் கால்பந்தாட்ட விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். 1927-ல் Puente Castro கால்பந்து கிளப்பில் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1937-ல் டிசம்பர் 23-ல் இவரின் வீட்டில் விமான விபத்து ஒன்று நடந்தது. அந்த விபத்திலிருந்து தப்பினார். பின்னர் 2019-ல் ஸ்பெயினில் நடைபெற்ற பொது தேர்தலிலும் தன் வாக்கைத் தவறாமல் செலுத்தினர் சாடர்னினோ.

இவரின் வயதை ஒத்தவராக இருந்த விசென்டா பிரிட்டோ சான்டோஸ் (Vicenta Prieto Santos) என்பவர் தனது 110 வயதில் மறைந்த நிலையில், 2021 செப்டம்பரில் சாடர்னினோ கார்சியா தான் உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தார். தற்போது 2022 பிப்ரவரி 11-ல் 113 வயதை பூர்த்திசெய்ய இருந்த இவர், தனது 112 வயதில் காலமானார். இவர் மொத்தம் 112 ஆண்டுகள் 341 நாள்கள் வாழ்ந்துள்ளார். இவரின் வாழ்நாள் காலத்தைப் பார்த்து வியந்து சமூக வலைதளங்களில் பலர் இவரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.