என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: பெண்களின் உலகம்... ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

தாட்சாயிணி காளிதாஸ்

பெண்களின் உளவியல் எப்போதுமே புரிந்துகொள்ள முடியாத நுட்ப மானது என்ற கருத்து ஆண்களிடம் உள்ளது. அதிகமான பேச்சு, மென்மை, ஷாப்பிங் ஆர்வம், அச்சமூட்டும் கனவுகள் எனப் பெண்களின் சில இயல்புக்கான உளவியல் காரணங்களை விளக்குகிறார் சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் ராகிதா ராதாகிருஷ்ணன்.
ராகிதா ராதாகிருஷ்ணன்
ராகிதா ராதாகிருஷ்ணன்

ஞாபகசக்தியைப் பொறுத்தமட்டில் ஆண்களைவிட பெண்கள் ஷார்ப்பாக இருக்கிறார்கள். ஒருவர் கூறிய வார்த்தை... அது கூறப்பட்ட நாள், நேரம்வரை நினைவடுக்குகளிலிருந்து சர்வ சாதாரணமாக எடுக்கிறார்களா... எப்படி?

மூளையில் நினைவுகளைச் சேகரித்து வைக்கும் `எபிசோடிக் நினைவகம்' (Episodic Memory) பகுதி பெண்களுக்கு ஆண்களைவிட நன்றாகச் செயல்படும். அதுமட்டுமல்லாமல் ஆண்கள் அனைத்து விஷயங்களையும் லாஜிக் காகப் பார்ப்பார்கள். பெண்கள் தாங்கள் பெறும் அனைத்து தகவல்களையும் உணர்வுரீதியாக தங் களுக்குள் தொடர்பு படுத்தி நினைவில் வைத்துக்கொள்வார்கள். எனவே, பெண்களுக்கு குறிப்பாக யார், என்ன பேசினார்கள் என்பது குறித்த நினைவுகள் பலமாக இருக்கும்.

மென்மை... பெண்களின் அடையாளமாக இருப்பது ஏன்?

எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு மனிதன் சமுதாயத்தில் இருந்து தெரிந்துகொள்கிறான். உடல்ரீதியாக முரட்டுத்தனமாக நடந்துகொள்வது ஆண்களுடைய இயல்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதுவே, ஒரு பெண் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் இச்சமுதாயம் அவளை ஏற்பதில்லை. மேலும், நியூரோ சயின்ஸின் கூற்றுப்படி, `டெஸ்டோஸ்டிரோன்' மற்றும் `கார்டிசோல்' ஹார்மோன்கள் பெண்களுக்குக் குறைவாகச் சுரப்பதால் அவர்களிடம் முரட்டுத்தனம் வெளிப்படுவதில்லை. இவை ஆண்களுக்கு அதிகம் சுரப்பதால், முரட்டுத்தனம் அதிகமாக உள்ளது.

இருபாலினத்தவர் படிக்கும் கல்வி நிலையங்களில் பெண்களுக்குக் கிடைக்கும் உளவியல் நன்மைகள்...

ஒரு பெண், மகளிர் பள்ளியில்/கல்லூரியில் மட்டுமே படித்திருந்தால் அவருக்கு ஆண்களின் உலகத்தை, உணர்வு களைப் புரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போகலாம். மேலும், பள்ளி, கல்லூரி முடித்து பணியிடத்துக்கு நகரும்போது எதிர்கொள்ளும் ஆண்களை அவர்களால் இயல்பாக, தைரியமாக எதிர்கொள்ள முடியாமல் போகலாம். உதாரணமாக ஆண்களைப் பார்த்தால் பயப்படுவது, திரும்பிக்கொண்டு செல்வது, ஒதுங்கி நிற்பது, அவர்களின் செயல்பாடுகள், உணர்வுகளைத் தவறாகப் புரிந்துகொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதுவே இருபாலினத்தவர் படிக்கும் கல்வி நிலையங் களில் ஆண்களுடன் பயின்று, பழகி வளரும் பெண்கள், சமூக வாழ்க்கையில் ஆண்களை எளிதாகக் கையாளக் கற்றுக்கொள்வார்கள்.

பயமுறுத்தும் மற்றும் உணர்வு ரீதியான கனவுகள் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வருமா?

ஆம். ஆண்களுக்கு அத்தகைய கனவுகள் வராது என்பது அர்த்தமல்ல. ஆனால், ஒப்பீட்டளவில் பெண்களைவிட அவர் களுக்குக் குறைவாகவே வரும். இதற்கு முக்கிய காரணம், பதற்ற கோளாறுகள் என்று சொல்லலாம். ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் பதற்றப் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு உயிரியல் ரீதியான காரணங்களுடன் சமூக ரீதியான காரணங்களும் உண்டு. ஒரு பெண் எந்த அளவுக்குப் பதற்றம் அடைகிறாரோ அந்தளவுக்கு அவருடைய கனவுகள் அதைப் பிரதிபலிக்கும்.

2K kids: பெண்களின் உலகம்... ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!

பெண்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்; மற்றவர்களின் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களே... காரணம்?

இயற்கையாகவே உணர்வு களை வார்த்தைகளாக வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள் பெண்கள். ஆண்கள் அந்தளவுக்கு வெளிப்படுத்த மாட்டார்கள். மேலும், பெண்கள் அதிக மாகப் பேசுவது அவர்களின் இயல்பு என்று கருதப்படுகிறது. ஆண்கள் வேலைக்குச் செல்வது, நண்பர்களுடன் விளையாடுவது, சினிமா, அவுட்டிங் என்று பொழுதுபோக்குவது என ஏதேனும் ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்குப் பேசும் வாய்ப்புகள் குறைகின்றன. மாறாக, ஒரே இடத்தில் இருக்கும் பெண் களுக்கு அந்த இடத்திலிருந்தே நேரத்தை செலவழிக்க மற்றவரிடம் பேசுவதையே சிறப்பான வழியாக எண்ணுகிறார்கள். வெளியே செல்ல அனுமதியில்லாத பெண்களுக்கும், வேலை குறைவாக உள்ள பெண் களுக்கும் பேசுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உருவாக்கப்படலாம். மற்றவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பெண்கள் ஆர்வம் காட்டவும், மேலே சொன்ன சூழலே காரணம்.

ஷாப்பிங்கில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வது ஏன்?

ஓர் ஆண் மீண்டும் மீண்டும் ஓர் உடையை அணிந்தால், அது பெரிதாகக் கவனிக்கப்படாது. அதுவே ஒரு பெண் ஓர் உடையை வாரத்தின் இரண்டு நாள்களில் உடுத்தினால், அது கவனிக்கப்பட்டு பேச்சாகும். எனவே, ஆடையில் அதிக கவனம் காட்ட வேண்டும், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிய வேண்டும் என்ற ஆர்வத்தை சமுதாயம் பெண்களுக்குத் தூண்டு கிறது. ஆண்களுக்கு நீலம் என்றால் நீலம். அதுவே பெண்களுக்கு ராயல் நீலம், ராமர் நீலம் என்று அடுக்குவார்கள். காரணம், பெண்கள் சிறந்த ஆடையை வாங்கும் ஆர்வத்தில் அது குறித்த பல விஷயங்களை அறிந்துகொள்கிறார்கள். மிக முக்கிய மாக, தினசரி வேலையை விட்டு கடைவீதிகளுக்குச் செல்லும்போது பெண்களுக்கு அது ஒரு வகையான கொண்டாட்டமாக இருக்கிறது. எனவே, அதை அவர்கள் மகிழ்ச்சி யுடன் செய்கிறார்கள். ஆண்களுக்கு நண்பர்கள், அவுட்டிங் என்று பிற பல கொண்டாட்டங்கள் இருப்பதால், ஷாப்பிங்கில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.

தேர்வில் பெண்கள் ஆண்களைவிட அதிக மதிப்பெண் வாங்க காரணம்...

ஓர் ஆண் குறைந்த மதிப்பெண் எடுத்தால்கூட மேலே படிக்க, வேலை பார்க்க அவருக்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு, தாங்கள் மேலே படிக்க, வேலைக்குச் செல்ல மதிப்பெண்தான் துடுப்பாகிறது. இதனால் பெண்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், எல்லா வீடுகளிலும் ஆண் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் கட்டுப்பாடுகள் இருப்பதில்லை. அதுவே, கட்டுப்பாடுகளுடனே வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள் படிப்பிலும் அதைப் பின்பற்றி நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள்.

ஆண்களைவிட பெண்கள் அழுகையை அதிகம் வெளிப்படுத்துகின்றனரே...

ஆண்களை அழக் கூடாது என்று இந்தச் சமுதாயம் பழக்கப் படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு அழுகையை ஓர் இயல்பாக்கி வைத்திருக்கிறது. உண்மையில், அழுகை ஒரு நல்ல வடிகால். பெண்கள் தங்கள் கவலைகளை, பிரச்னைகளை ஓர் அழுகையில் கொட்டித் தீர்த்துவிடுகிறார்கள். பிறகு, ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு அவ்வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதே உண்மை.

ரிஸ்க் எடுப்பதில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் இறங்குவதில்லையே...

பொருளாதார ரீதியாக மற்றொருவரை சார்ந்திருக்கும் பெண் களால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை. ஓர் ஆண் தன் முடிவால் நஷ்டமடைந் தால் அவனுக்கு ஏற்படும் நெருக் கடியைவிட பல மடங்கு நெருக் கடியை இதே சூழலில் ஒரு பெண் சந்திக்க வேண்டியிருக்கும். அதுவே பெரும்பாலான பெண்களை எல்லையைத் தாண்டி யோசிக்க விடுவதில்லை.