Published:Updated:

`9, 10-ம் வகுப்பு பிள்ளைகளையே போதைக் கும்பல் குறிவைக்கிறது!' - போலீஸ் சூப்பிரண்டு ஆனி

`9, 10-ம் வகுப்பு பிள்ளைகளையே போதைக் கும்பல் குறிவைக்கிறது!' - போலீஸ் சூப்பிரண்டு ஆனி
`9, 10-ம் வகுப்பு பிள்ளைகளையே போதைக் கும்பல் குறிவைக்கிறது!' - போலீஸ் சூப்பிரண்டு ஆனி

ன்று (ஜூன் 26) சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம். நம் வீட்டுப் பிள்ளைகளை போதை அரக்கன் பிடியில் சிக்காமல் இருக்க, பெற்றோர்கள் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என போதைப்பொருள் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஆனி விஜயா சொல்கிறார். 

`9, 10-ம் வகுப்பு பிள்ளைகளையே போதைக் கும்பல் குறிவைக்கிறது!' - போலீஸ் சூப்பிரண்டு ஆனி

`` பள்ளிக்கூட வாசல்களில் சாக்லேட்டுகளில் போதை மருந்தைக் கலந்து விற்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். அவர்களிடம் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் என்பதால், ஒரு காவல் துறை அதிகாரியாக மட்டுமல்லாமல், ஓர் அம்மாவாகவும் எல்லா பெற்றோர்களிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். 

உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூட வாசல்களை, அதன் சுற்றுப்புறங்களை கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள். பிள்ளைகளை பிக்கப், டிராப் செய்கிற நேரங்களில் மட்டுமல்லாமல் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள். பிள்ளைகளைப் போதைக்கு அடிமையாக்க நினைக்கிற கும்பல், அவர்கள் சாப்பிடுகிற பொருள்களின் வழியாகத்தான் இந்தக் கொடுமையைச் செய்து வருகிறது. அதனால், பள்ளிக்கூடங்களைச் சுற்றியுள்ள தின்பண்டக் கடைகளைக் கவனியுங்கள். உங்களுக்குச் சின்னதாக சந்தேகம் வந்தாலும், எங்களுக்கு 044 - 28511587 என்ற எண்ணில் தகவல் தெரிவித்துவிடுங்கள். 24 மணி நேரமும் இந்த எண் உபயோகத்தில் இருக்கும். நீங்கள் தகவல் தெரிவித்த அடுத்த நிமிடம் விஷயம் எனக்கு வந்து விடும். உங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. காவல்துறையுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், இன்ஃபார்மர்கள் என அத்தனை பேரும் கை கோத்தால்தான், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து நாம் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும். 

`9, 10-ம் வகுப்பு பிள்ளைகளையே போதைக் கும்பல் குறிவைக்கிறது!' - போலீஸ் சூப்பிரண்டு ஆனி

ஓர் அம்மாவாகப் பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு வீட்டுக்கு ஒரு பிள்ளைதான் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் மேல் நம்முடைய அத்தனை ஆசைகளையும் திணிக்கிறோம். அவர்களை பெஸ்ட்டாக உருவாக்குகிறோம் என்று நான்கு டியூஷன், ஆறு எக்ஸ்ட்ரா கரிக்குலர் கிளாஸ் அனுப்பினால், அந்தக் குழந்தைகளுக்கு 14 அல்லது 15 வயதிலேயே டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என எல்லாமும் வந்து விடுகிறது. அதனால்தான், போதைப் பொருள் விற்பனையாளர்களும் ஒன்பதாவது, பத்தாவது படிக்கிற பிள்ளைகளையே அதிகம் குறி வைக்கின்றனர். இதையும் கொஞ்சம் மனதில் வையுங்கள்'' என்ற எச்சரிக்கையுடன் தன் பேச்சை முடித்தார் ஆனி விஜயா.

Vikatan