Published:Updated:

`பெண் பிள்ளைகளை அடக்க ஒடுக்கமா வளர்க்க நினைக்கிற மனநிலை மாறணும்!' - விஜி சந்திரசேகர் #VikatanPodcast

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை, தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் விஜி சந்திரசேகர்
#VikatanPodcast-ல் விஜி சந்திரசேகர்

'புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் பெண் குழந்தை' என்பார்கள் ஊர்க்கப்பக்கங்களில். அந்த வகையில் இரட்டைப் புண்ணியம் செய்திருக்கிறார் விஜி சந்திரசேகர்.

''பெண் பிள்ளைகள் நல்லவிதமா வளர்றதுல தாய்க்கு அதிகப்படியான பொறுப்பு இருக்கிறதா நான் நம்புறேன். அந்த வகையில் என் ரெண்டு பெண் பிள்ளைகளையும் நான் நல்லபடியாவே வளர்த்திருக்கேன். பெரியவ டாக்டர். சின்னவ மாஸ்டர் டிகிரி பண்ணிட்டிருக்கா. பெண்களுக்கு கல்வி முக்கியமானது என்பது, என் பேரன்டிங்கின் அடிநாதம்.

நம்ம பொண்ணுங்களுக்கு ஆயுள்வரை தன்னம்பிக்கை தர்ற அழியாத சொத்து அதுவாதான் இருக்க முடியும். சமூகத்தை தைரியமா எதிர்கொள்ளத் தேவையான அறிவையும், பொருளாதார பலத்தையும் அந்தக் கல்வி மூலமா அவங்க தேடிக்க வலியுறுத்தணும்.

''பெண்களின் வலியை உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சொல்லி வளருங்கள்'' நடிகை விஜி சந்திரசேகர் #HappyParenting #NewsRoom #VikatanPodcast தொகுப்பு: அய்யனார் ராஜன்

Posted by Vikatan EMagazine on Saturday, July 6, 2019
இன்னொரு விஷயம், 'பெண் பிள்ளைகளை அடக்க ஒடுக்கமா வளர்க்கணும்' என்ற பெற்றோரின் மனநிலை மாறணும். ஒழுக்கமா, நேர்மையா வளர்க்கிறது முக்கியம். ஆனா, பெண் என்ற ஒரே காரணத்துக்காக மத்தவங்ககிட்ட அவங்க அடங்கிப்போகணும்னு ஏன் சொல்லிக் கொடுக்கணும்?
விஜி சந்திரசேகர்

மாறா, நாம மகன்களுக்குத்தான் சில விஷயங்களைச் சொல்லித் தரணும். குறிப்பா, அவங்களோட அம்மாக்கள்தான் அதைச் செய்யணும். வயதுக்கு வர்றது முதல் பிரசவம், மெனோபாஸ்வரை பெண்கள் உடல்ரீதியாகச் சந்திக்கிற வலிகளும் பிரச்னைகளும் பையன்களுக்குப் புரியணும். அப்போதான் அவங்க பெண்களை மரியாதையோடு பார்ப்பாங்க.

Vikatan

தப்பான கண்ணோட்டம் அவங்க மனசுல வராது. நம்ம பெண்களுக்கும் பாதுகாப்பான சமுதாயம் கிடைக்கும்.''பெண் குழந்தை வளர்ப்பு குறித்த விஜி சந்திரசேகரின் கருத்துகளை விரிவாக #VikatanPodcast-ல் கேளுங்கள்!