Published:Updated:

`எப்படியிருந்தாலும் அவர்கள் உங்கள் பிள்ளைகள்தானே' பெற்றோர்களுக்கு அப்சரா ரெட்டியின் மெசேஜ்! #VikatanPodcast

இ.லோகேஷ்வரி

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் அப்சரா ரெட்டி
#VikatanPodcast-ல் அப்சரா ரெட்டி

திருநங்கைகளாக, திருநம்பிகளாக மாறுகிற குழந்தைகளும் இந்த சமூகத்தில் சாதிக்க, அவர்களின் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... தன் அனுபவங்களைப் பாடங்களாகப் பகிர்ந்துகொள்கிறார், மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரான அப்சரா ரெட்டி

உலகம் எங்களைப்போன்ற குழந்தைகளைப் பார்த்து, 'நீங்கள் மதிப்புக்குரியவர்கள் அல்ல' என்று கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கிறபோது, பெற்றோர்களின் அரவணைப்பு மட்டும்தான் எங்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே அருமருந்து.
அப்சரா ரெட்டி

இது கிடைத்தால்போதும், வீட்டை விட்டு வெளியே போகவேண்டிய அவசியம் வராது. எங்களைப்போன்ற குழந்தைகளும் நன்றாகப் படிக்கலாம், ஜெயிக்கலாம், சாதிக்கலாம். வீட்டார் எங்களைப் புறக்கணிக்கவில்லை என்றால், வீட்டுக்குரிய பொறுப்புகளையும் எல்லோரையும்போல நாங்களும் நிறைவேற்றலாம். திருநங்கைகளுக்கு மட்டுமல்ல, எல்ஜிபிடி கம்யூனிட்டி எல்லோருக்குமே பெற்றோர்களின் அரவணைப்பு தேவை.

என் வாழ்க்கையைப் பொறுத்தவரை, என் அம்மாதான் என் சூப்பர் ஹீரோ. நான் பெண்ணாக மாறவேண்டும் என்று நினைத்தபோது, அம்மாவும் நானும் நிறைய பேசினோம்; விவாதித்தோம்; அழுதோம்; டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்றோம். இதனால், எனக்கு உடலளவில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதுவரை வெளிப்படையாகப் பேசினோம். 'என்ன ஆனாலும் நீ என்னுடைய குழந்தை' என்றார் என் அம்மா. இந்த சப்போர்ட் என்னைப்போல எல்லா குழந்தைகளுக்கும் கிடைத்தால், அவர்களின் மனநலனும் நன்றாக இருக்கும். எந்தத் தவறான பாதையிலும் போகாமல், வீட்டைவிட்டு ஓடிப்போகாமல் இருப்பார்கள். மிகப்பெரிய சாதனைகளையும் செய்வார்கள். பல பேர் புறக்கணித்தபோதும் அருவருப்பு வரும்படி பேசியபோதும் நான் ஓடிவந்தது என் அம்மாவிடம்தான்."

அப்சரா ரெட்டியின் வார்த்தைகளில் தாயின் மீதான பாசமும் நன்றியும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அப்சராவின் உணர்வுகளை விரிவாக #VikatanPodcast-ல் கேளுங்கள்!

`பெண் பிள்ளைகளை அடக்க ஒடுக்கமா வளர்க்க நினைக்கிற மனநிலை மாறணும்!' - விஜி சந்திரசேகர் #VikatanPodcast