Published:Updated:

பிறவியிலேயே `பேட்மேன் மாஸ்க்!' - சோஷியல் மீடியா கொண்டாடும் `வைரல் குழந்தை' லூனா

நெட்டிசன்கள் லூனாவை நிஜ சூப்பர் ஹீரோவாகக் கொண்டாடி வருகின்றனர்.

லூனா
லூனா ( instagram.com )

சரும நிறமிக் குறைபாட்டால் பிறக்கும்போதே `பேட்மேன் மாஸ்க்' போன்ற பர்த்மார்க்குடன் (birthmark) பிறந்த குழந்தை, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறாள். எட்டு மாதப் பெண் குழந்தையான லூனாதான் இப்போது இன்டர்நெட்டின் செல்லம்!

லூனா
லூனா
instagram.com

அமெரிக்காவைச் சேர்ந்த லூனாவுக்கு மெலனோசைடிக் நெவஸ் எனப்படும் சரும நிறமிக் குறைபாட்டால் முகத்தில் நெற்றியிலும், கண்களைச் சுற்றியும் தோலின் நிறம் அடர்ந்த கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. மெலனின் எனப்படும் நிறமி இந்த இடங்களில் அடர்ந்து காணப்படுவதால் லூனாவுக்கு இப்படி உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குழந்தைக்கு நிறமிக் குறைபாட்டால் முகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தோற்றம், கற்பனைக் கதாபாத்திரமான `பேட்மேன்' அணியும் மாஸ்க் போல் உள்ளது. இதனால் நெட்டிசன்கள் லூனாவை நிஜ சூப்பர் ஹீரோவாகக் கொண்டாடி வருகின்றனர்.

லூனா
லூனா
instagram.com

லூனாவின் தாயான கரோல் ஃபென்னர், இந்த சூப்பர் ஹீரோ குழந்தைக்கு என இன்ஸ்டாகிராமில் luna.love.hope என்ற பக்கத்தை ஆரம்பித்து, லூனாவின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அவற்றை ரசித்து, வாழ்த்தி வருகிறார்கள் உலகெங்கிலும் இருந்து பலர்.

``அதை ஏற்றுக்கொள்ள முதலில் மிகவும் சிரமப்பட்டேன்"- மனம் திறந்த இலியானா டி'க்ரூஸ்!

இது குறித்து கரோல் ஃபென்னர் கூறும்போது, ``லூனா பிறந்தபோது உண்மையில் நாங்கள் அதிர்ச்சியாகிவிட்டோம். மருத்துவர்களுக்கு, இது என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்கவே பல நாள்கள் ஆகிவிட்டன. ஆனாலும் லூனாவை எல்லாருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. பலரும், அவளின் முகத்தில் உள்ள இந்த நிற மாறுபாடு பேட்மேன் மாஸ்க்போல உள்ளது என்று கூறி அவளை நிஜ பேட்மேன் எனக் கொண்டாடுகின்றனர். இதனாலேயே அவளுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

லூனா
லூனா
instagram.com

எனினும், இந்த நிறமிக் குறைபாடு பின்னாளில் அவளுக்குப் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது என்று கூறப்படுவதால் இதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முயன்று வருகிறோம். தற்போது முதல் கட்டமாக அவளின் நெற்றியில் உள்ள நிற மாறுபாட்டை வலியில்லாத அறுவை சிசிக்சை மூலம் நீக்கிவிட்டோம். அவளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை" என்கிறார்.