Published:Updated:

"மகள்களும் மகனும்தான் எனக்கு மறுவாழ்வு தந்தாங்க!"-பிள்ளைவளர்ப்பு அனுபவம் பகிரும் பார்த்திபன் #VikatanPodcast

அய்யனார் ராஜன்

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை, தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

தன் அனுபவம் பகிரும்  பார்த்திபன்
தன் அனுபவம் பகிரும் பார்த்திபன்

சிங்கிள் பேரன்ட்டாக இருப்பது, அதிக பொறுப்புகளையும் சவால்களையும் உள்ளடக்கியது. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில், ஓர் அம்மாவால் அப்பாவுக்கான கடமைகளையும் செய்ய முடிகிறது. ஆனால் ஓர் அப்பா, அம்மாவுமாக இருப்பது நிச்சயம் அதைவிட சவாலானது. அதை எப்படி எதிர்கொண்டார் பார்த்திபன்?

"பிள்ளைங்ககிட்ட நீங்க நடிக்கவே முடியாது!" தன் பிள்ளைவளர்ப்பு அனுபவம் பகிரும் இயக்குநர் பார்த்திபன் #HappyParenting #NewsRoom #VikatanPodcast தொகுப்பு: அய்யனார் ராஜன்

Posted by Vikatan EMagazine on Friday, July 5, 2019
``காதலிக்கிறோம். அப்ப ஒரு கருத்து வேறுபாடு வருது. பிரச்னை இல்ல. சுமுகமா பிரிஞ்சுடலாம். ஆனா அந்த ஜோடியே அப்பா, அம்மா ஆகிட்டாங்கன்னா? 'சட்'டுனு முடிவெடுத்துட முடியாது. குழந்தைகள் பாதிக்கப்படுவாங்க. சரி, அந்த ஒரு காரணத்துக்காகவே எல்லாத்தையும் அட்ஜஸ்ட் செய்துட்டுப் போகணுமா?
- இயக்குநர் பார்த்திபன்

என்னுடைய முதல் வாழ்க்கை முடிந்து போன விஷயம். மகள்களும் மகனுமே மறுவாழ்வு தந்தாங்க. பதிலுக்கு அவங்களுக்கு நான் செய்யணுமில்லையா? கூடுதலா செல்லம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துல நான் இருந்தேன். பொதுவா எந்தவொரு வீட்டுலயும் அப்பா, அம்மா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் செல்லம் தருவாங்க, ஒருத்தர் கண்டிப்பானவங்களா இருப்பாங்க. ரெண்டு ரோலையும் பண்ண வேண்டிய ஆளா நான் இருந்தேன். செல்லமும் கொடுத்தாகணும், கண்டிப்பும் காட்டணும். பேலன்ஸ் பண்றது எனக்கு பெரிய போராட்டமா இருந்தது.

Vikatan

கீர்த்தனா பிறந்தப்போ, பெரிய பங்களாவுல பிறந்தா. எங்க விவாகரத்துக்குப் பிறகு அந்த பங்களாவை விற்க வேண்டிய கட்டாயம். பிறகு சாதாரண ஒரு வீட்டுல என் பிள்ளைகளை வளர்க்க வேண்டி வந்தது. தொடர்ந்து சென்னையில் பத்து வாடகை வீடு மாறியிருப்போம். அப்போவெல்லாம், 'குழந்தைகளைச் சிரமப்படுத்துறோமே'ன்னு நினைப்பேன்.''

பார்த்திபன் தன் சிங்கிள் பேரன்டிங் டாஸ்க்கை எப்படி வெற்றிகரமாக முன்னெடுத்தார் என்பதை விரிவாக அவர் குரலிலேயே கேளுங்கள்! #VikatanPodcast