Published:Updated:

குடிநீர் பஞ்சம் முதல் நீட் தேர்வு வரை - அனைத்தையும் பேசுகிறார்கள் தமிழ்நாட்டுக் குழந்தைகள்! #HappyParenting

பள்ளி குழந்தைகள்

குடிநீர் பஞ்சமா, நீட் தேர்வா... என்ன கேட்டாலும் அறிந்து வைத்திருக்கிறார்கள் இன்றைய குழந்தைகள்.

குடிநீர் பஞ்சம் முதல் நீட் தேர்வு வரை - அனைத்தையும் பேசுகிறார்கள் தமிழ்நாட்டுக் குழந்தைகள்! #HappyParenting

குடிநீர் பஞ்சமா, நீட் தேர்வா... என்ன கேட்டாலும் அறிந்து வைத்திருக்கிறார்கள் இன்றைய குழந்தைகள்.

Published:Updated:
பள்ளி குழந்தைகள்

குழந்தைகளுக்கு எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் அதிகம். வளர் இளம் பருவத்தில் சமூக வலைதளங்களே கதியென மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு சமூகத்தைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருக்காது என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உள்ளூர் நடப்புகள் முதல் உலக நிகழ்வுகள் வரை ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ரஜினி தொடங்கி மோடி வரையிலான அப்டேட்டுகளை டக் டக்கென சொல்கிறார்கள்.

பள்ளி குழந்தைகள்
பள்ளி குழந்தைகள்

சமூகத்தின் மீதான பார்வையும், சிந்தனையும் எப்படி இருக்கிறது என்பதை அறிய பள்ளி செல்லும் குழந்தைகள் சிலரிடம் ஆய்வுசெய்தோம். சமூக நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் பேசியது வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. குடிநீர் பஞ்சம் மற்றும் அதற்கான காரணம், நீட் தேர்வு மற்றும் அதற்கான எதிர்ப்பு, ஸ்டெர்லைட் பிரச்னை போன்றவற்றை பள்ளிக் குழந்தைகள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான்சி, 10-ம் வகுப்பு (நெல்லை மாவட்டம் கூடங்குளம்):

"அணு உலைக்கு எதிராக ரெண்டு வருஷமாகப் போராட்டம் நடைபெற்ற இடிந்தகரை கிராமம்தான் என்னோட சொந்த ஊர். கண்ணுக்கெட்டிய தொலைவில் இருக்குற அணு உலைகளை பாக்குறப்போ பயமா இருக்கும். அணு உலை வேண்டாம்னு போராட்டம் செய்தவங்கள்ல நானும் ஒருத்தி. அணுக் கழிவுகளையும் எங்க ஊர்லேயே கொட்டப் போறதா சொல்றாங்க. அணுக் கழிவுகளை, கர்நாடகாவின் கோலார் தங்கவயலில் கைவிடப்பட்ட சுரங்கத்துக்குள் கொட்டுவதற்கு அந்த மாநிலம் எதிர்த்தது.

நான்சி, நெல்லை.
நான்சி, நெல்லை.

குஜராத் மாநிலத்தில் எந்த அழிவுத் திட்டங்களையும் அனுமதிக்கமாட்டோம்னு அங்க இருக்கிற முதல்வர் சொல்கிறார். இதனால எல்லா அழிவுத் திட்டங்களையும் தமிழகத்துக்கு கொண்டு வர்றாங்க. அணுக் கழிவு மையத்தால எங்களுடைய கடல் வளமும், விவசாயமும் பாதிக்கும்னு தோணுது. எங்களுக்கு அணு உலைகள் வேண்டாம்.’’

ஹரீஸ் ராகவ், 5-ம் வகுப்பு மாணவன் (தேனி):

"எனக்கு டாக்டராகணும்னு ஆசை. அதுக்கு ஏதோ, புதுசா `நீட்’ தேர்வு கொண்டுவந்திருக்காங்க. அந்தப் பரீட்சையை எழுதினாதான் டாக்டருக்கே படிக்க முடியுமாம். நீட் தேர்வுக்காக எனக்குத் தெரிஞ்ச அக்கா, அண்ணா எல்லாம் படிக்கிறாங்க.

ஹரீஸ் ராகவ், தேனி.
ஹரீஸ் ராகவ், தேனி.

அவுங்ககிட்ட கேட்டப்போ, `நீட் ரொம்பக் கஷ்டமா இருக்கு. அந்தத் தேர்வு இல்லைனா நல்லாயிருக்கும்'னு சொன்னாங்க. அவுங்க சொல்வதைவச்சு பார்க்கும்போது நீட் எக்ஸாம் வேண்டாம்னுதான் எனக்கும் தோணுது.’’

மோகனப்பிரியா, 7-ம் வகுப்பு (தஞ்சை):

"தமிழ்நாட்டுல தண்ணீர் பிரச்னை அதிகமாயிருக்கு. குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுறாங்க. ஒவ்வொருத்தரும் தண்ணீரை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.

மோகனப்பிரியா, தஞ்சை.
மோகனப்பிரியா, தஞ்சை.

ஆறு, ஏரி குளங்களை தூர்வாராததினால் மழைநீர் வீணாக கடல்ல போய் கலக்குது. மழைநீர் சேகரிப்பில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. பணத்தைப் போல தண்ணீரையும் சேமிக்கணும். நம்மை நாமே காத்துக்கொள்வதற்கான கட்டாயத்தில் இருக்கிறோம்.’’

அஸ்விந்த், ப்ளஸ் ஒன் (நெய்வேலி):

"தூத்துக்குடியில் இருக்கிற ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையால், அங்க இருக்கிற மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திகிட்டு இருக்காங்க.

அஸ்விந்த், நெய்வேலி.
அஸ்விந்த், நெய்வேலி.

அந்த ஆலையால் நிறைய பாதிப்பு வரும்னு சொல்றாங்க. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பல திட்டங்களும் தமிழ்நாட்டுக்கு வருதாம். இதனால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு வருமோனு பயமா இருக்குது.’’

தேஜஸ்வினி, 6-ம் வகுப்பு (தேனி பங்களாமேடு):

"நியூட்ரினோ திட்டத்தைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனா, அந்தத் திட்டத்தைக் கொண்டு வர்றதுனால விவசாயம் பாதிக்கப்படும். விவசாயிங்க கஷ்டப்படுவாங்கனு சொல்றாங்க. இந்தத் திட்டத்தை எங்க ஊர்ல செயல்படுத்தாமல் வேற ஊருக்கு கொண்டு போங்க.’’

அன்பழகன், கரூர்.
அன்பழகன், கரூர்.

அன்பழகன், 10-ம் வகுப்பு (கரூர்):

"எங்க கரூர் எம்.பி தொகுதியில் ஜோதிமணி ஜெயிச்சிருக்காங்க. மத்தியில் மீண்டும் மோடி வந்திருக்காரு. நான் ராஜீவ்காந்தி ஜெயிக்கணும்னு நெனச்சேன். சாரி, ராகுல்காந்தினு சொல்லவந்தேன். காவிரி ஆத்துல தண்ணீர் ஓடல. சாக்கடைதான் ஓடுது. இதெல்லாம் யார் சரி பண்ண போறாங்க?''