Published:Updated:

விட்டுக்கொடுத்தலும் விருந்தோம்பலும் உங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றனவா? #HappyParenting

குழந்தைகளை இப்படியும் நடத்தலாமே பெற்றோர்களே! #Children'sDay

குழந்தைகளுக்கு அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல், நட்பு, சகிப்புத் தன்மை போன்ற குணங்களைக் கற்றுத்தருவது அவசியம்.

விட்டுக்கொடுத்தலும் விருந்தோம்பலும் உங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றனவா? #HappyParenting

குழந்தைகளுக்கு அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல், நட்பு, சகிப்புத் தன்மை போன்ற குணங்களைக் கற்றுத்தருவது அவசியம்.

Published:Updated:
குழந்தைகளை இப்படியும் நடத்தலாமே பெற்றோர்களே! #Children'sDay

குழந்தைகள் வளர்ச்சியில் வீட்டுச்சூழல் முக்கியம். சிதறிப் போய்விட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும் எதிர்காலத்தில் குழந்தைகளின் நல்ல இயல்புகளை மேலோங்க விடாமலே செய்து விடலாம். மற்றவர்களுக்குக் கொடுத்து உண்ணும் பழக்கத்தையும், உதவி செய்யும் பழக்கத்தையும் குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தை
குழந்தை

ஆனால், இன்ஸ்டிடியூஷனாக மாறிய குடும்பச் சூழ்நிலையில் வளரும் இந்தக் காலத்து குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்தல் மற்றும் விருந்தோம்பலைக் கற்றுக்கொடுக்காததால், பண்புகளை மறந்து சுயநலமாக வளர்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். எல்லோரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், மற்ற குழந்தைகளைப் பற்றிக் குறைசொல்லக் கூடாது, வெளி உலகத்தைக் காட்டாமலும், சக குழந்தைகளுடன் விளையாட விடாமல் வீட்டுக்குக்குள்ளேயே குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதும் தவறு என்று அறிவுறுத்துகிறார்கள் உளவியலாளர்கள்.

சிநேகா
சிநேகா
ச.வெங்கடேசன்

இதுபற்றி திருப்பத்தூரைச் சேர்ந்த சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான ம.ஆ.சிநேகா கூறுகையில், "குழந்தைகள் வளர்ப்பில் ஏற்படும் தவற்றுக்கு முழுக்க முழுக்க பெற்றோர் மட்டுமே காரணம் என்று நாம் சொல்லிவிட முடியாது. சமூகச் சூழலால் ஏற்படக்கூடிய மாற்றமாகவும் வீழ்ச்சியாகவும்தான் நான் இதைப் பார்க்கிறேன்.

ஏனெனில், நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வளர் இளம் பருவத்தினரை ஊக்குவிக்கக் கூடிய சில பயிற்சிகளை மாணவ, மாணவிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வழியாக சில கலாசார மாற்றங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, மிக மிக அதிர்ச்சியாகவே இருந்தது.

அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல், நட்பு, சகிப்புத் தன்மையை கற்றுத்தருவதோடு, இவற்றைச் செய்யும்படித் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
வழக்கறிஞர் சிநேகா

முன்பெல்லாம், அம்மாக்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து அனுப்பும்போது 'ஃபிரெண்ட்ஸ்க்கும் சேர்த்துவைம்மா' என்பார்கள் பிள்ளைகள். அம்மாக்கள், பகிர்ந்துண்டு சாப்பிட இன்னொரு பாக்ஸ் உணவையும் கொடுத்து அனுப்புவார்கள்.

இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், `கொடுக்கிறதை நீ மட்டும் சாப்பிடு. உனக்காகத்தான் ஆப்பிள் வைத்திருக்கிறேன். மாதுளை வைத்திருக்கிறேன். முட்டை இருக்கு, யாருக்கும் கொடுக்கக் கூடாது' என்று சொல்லி அனுப்புகிறார்கள்.

குழந்தைகளுடன் சிநேகா
குழந்தைகளுடன் சிநேகா
ச.வெங்கடேசன்

காரணம், தங்கள் குழந்தைகள் மட்டும் ஆரோக்கியமாகவும் புத்திசாலியாகவும் இருந்தால்போதும் என்று இன்றைய அம்மாக்கள் நினைக்கிறார்கள். இதனால், தனி உடைமை மனப்பான்மைக்குள் மெள்ள மெள்ளச் சென்றுவிடுவார்கள் பிள்ளைகள். அதற்கேற்ப அவர்களின் சிந்தனையும் மாறிவிடும்.

கூட்டுக்குடும்பமாக இருந்த காலங்களில் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வார்கள்; ஒரே தம்பதி நாலைந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டார்கள்; பிள்ளைகள் வளர்ப்பிலும் சரியாகக் கவனம் செலுத்துவார்கள்; கதை சொல்வது முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத்தருவது வரை பெற்றோர்களின் பங்களிப்பு எல்லாவற்றிலும் இருக்கும்.

விருந்தோம்பல் என்பது இன்வெஸ்ட் ஆஃப் அன்பு!
வழக்கறிஞர் சிநேகா

இந்தக் காலத்தில் ஒரே குழந்தையை பெற்றுக்கொண்டாலும் பண்புகளை கற்றுத்தருவதில்லை. விருந்தோம்பல் என்பதை `வேஸ்ட் ஆஃப் டைம்' என்று நினைக்கிறார்கள். அது இன்வெஸ்ட் ஆஃப் அன்பு என்பதை மறந்துவிட்டார்கள்.

முன்பெல்லாம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் வீட்டுக்கு மனதார அழைப்பார்கள். இப்போதெல்லாம் யாரையும் கூப்பிடும் பழக்கமில்லை. அளவாகச் சமைக்கும் பழக்கத்தால் ஒரு ஆள் எக்ஸ்ட்ரா வந்துவிட்டாலும் அவருக்கும் சேர்த்து சமைக்கணுமே என்று புலம்புகிறார்கள். பணம் இல்லையென்றால் ஒன்றுமே செய்யமுடியாதென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகள்

லாபம் சார்ந்த பொருளாதாரம் என்று மாற்றப்பட்ட இந்தச் சமூகத்தின் பிரதிபலிப்புதான் குட்டி நிறுவனமாகிவிட்ட குடும்பங்கள். அங்கு வளரும் குழந்தைகளும் அப்படித்தான் இருப்பார்கள். அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல், நட்பு, சகிப்புத் தன்மையைக் கற்றுத்தருவதோடு, குழந்தைகள் இவற்றைச் செய்யும்படிக்குத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது மட்டும்தான் இதற்குத் தீர்வு’’ என்று முடித்தார் சிநேகா.