Published:Updated:

பிள்ளைகளுக்கு சரியான அறிவியலைச் சொல்லித்தருவது எப்படி? - குழந்தைகள் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் #VikatanPodcast

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை, தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் ஆயிஷா நடராஜன்
#VikatanPodcast-ல் ஆயிஷா நடராஜன்

இன்றைய அறிவியல்தான் நாளைய தொழில்நுட்பம். இன்று தாங்கள் கற்கும் அறிவியலை நாளை தொழில்நுட்பமாக மாற்றவிருக்கும் படைப்பாளிகள், குழந்தைகள்தாம். அப்படியிருக்க, சரியான அறிவியலை அவர்களுக்கு சொல்லித்தருவது எப்படி? சொல்கிறார், குழந்தைகளுக்கான எழுத்தாளர் ஆயிஷா நடராஜன்.

`வகுப்பறைக்கு வெளியே குழந்தைகள் என்னவெல்லாம் கற்கலாம்?'- எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் #VikatanPodcast

“அறிவியலைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது குறித்து பலரும் உலகளவில் எழுதியிருக்கிறார்கள். குழந்தைகள் விஷயத்தில் அறிவியலை பாடப் புத்தகங்கள் மூலம் மட்டுமே எடுத்துச்செல்கிற வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. ஆனால், பாடப்புத்தகம் மட்டுமே அதற்கான வழியல்ல, அது போதுமானதும் அல்ல. இன்றைய உலகம் மாறியிருக்கிறது. நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் என்பது பாடப்புத்தகத்தில் வருகிற இறந்தகால விஷயம் அல்ல. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விஷயம். எனவே, அதன் வேகத்துடனேயே குழந்தைகளையும் பயணிக்க வைக்க வேண்டும். உடனே கம்ப்யூட்டர், கேட்ஜெட்ஸ் என்று யோசிக்கக் கூடாது.

சிறு வயதிலேயே குழந்தையின் கையில் செல்போன் கொடுக்கப்படுகிறது. இதன் வழியே தேடி குழந்தைகள் பெறும் அறிவியல் தகவல்கள் குறித்த இரண்டு கேள்விகள் எனக்கு உண்டு. ஒன்று, இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் தகவல்கள் அவர்களது வயதுக்கேற்ப அறிந்துகொள்ளும் தகவல்களா? இரண்டாவது, இணைய வீதி எங்கும் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை?
ஆயிஷா நடராஜன்

உண்மையான அறிவியலைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிற எளிய வழி, `நூலக முறை’. இதனை உலகளவிலுள்ள அறிஞர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த லேட்டஸ்ட் புத்தகங்களைக் குழந்தைகள் வாசிப்பதில் பள்ளி நூலகங்கள் பெரும்பங்கு வகிக்க முடியும். வாசிப்பின் மூலம் அறிவியலை அவர்கள் எடுத்துச்செல்ல முடியும். இதற்குக் குழந்தைகள் மத்தியில் `ரீடர்ஸ் கிளப்' ஏற்படுத்தப்பட வேண்டும்.” குழந்தைகளிடம் அறிவியலை எப்படிச் சேர்க்க வேண்டும் என்பது பற்றி ஆயிஷா நடராஜன் பேசியதை #VikatanPodcast-ல் கேளுங்கள்!