Published:Updated:

`குழந்தைகள் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை' என சொல்லும் பெற்றோர்: ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!

குழந்தை தொழிலாளர்

இந்திய பெற்றோர்களில் பாதி பேர் தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட வேலைக்குச் செல்வது பரவாயில்லை என தெரிவித்துள்ளனர். குழந்தை தொழிலாளர்கள் மிகவும் முரட்டுத்தனத்துடன் இருப்பதாக 74 சதவிகிதம் பேர் நம்புகின்றனர்.

`குழந்தைகள் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை' என சொல்லும் பெற்றோர்: ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!

இந்திய பெற்றோர்களில் பாதி பேர் தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட வேலைக்குச் செல்வது பரவாயில்லை என தெரிவித்துள்ளனர். குழந்தை தொழிலாளர்கள் மிகவும் முரட்டுத்தனத்துடன் இருப்பதாக 74 சதவிகிதம் பேர் நம்புகின்றனர்.

Published:Updated:
குழந்தை தொழிலாளர்

புத்தகம் சுமக்கும் தோள்களில் மூட்டைகளையும், குடும்ப பாரங்களையும் சுமக்கும் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள். இக்குழந்தைகளின் உரிமையை மீட்டெடுக்கும் வகையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்துவது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கப்பட்டது. சட்டம், இதனை குற்றம் எனக் கூறினாலும், முழுமையாக இக்கொடுமை ஒழிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறிதான்.

சட்டம் - சித்தரிப்பு படம்
சட்டம் - சித்தரிப்பு படம்

குழந்தைகளுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் ஒருபுறம் என்றாலும், பெற்றோர்களே குழந்தைகளை வேலையில் தள்ளும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. வறுமை, பொருளாதார நெருக்கடி என பெற்றோர்கள் அதற்குப் பல காரணங்களைக் கூறினாலும், இந்திய பெற்றோர்களில் பாதி பேர் தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட வேலைக்குச் செல்வது பரவாயில்லை என தெரிவித்துள்ளனர்.

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள் (Child Rights and You) என்ற தன்னார்வல அமைப்பு, குழந்தை தொழிலாளர்களை குறித்த சமூகத்தின் பார்வை என்னவென்று அறிய ஆய்வினை மேற்கொண்டது. 18 வயதுக்கு மேற்பட்ட 3770 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆய்வின் முடிவுகள்,...

*45 சதவிகிதத்தினர் குழந்தைகள் பள்ளி செல்லும் வரை, தங்கள் குடும்பத்திற்கு உதவியாக வேலைக்குச் செல்வது பரவாயில்லை என தெரிவித்துள்ளனர்.

*45 சதவிகிதத்தினர் குடும்ப தொழிலிலோ, கால்நடை பராமரிப்பிலோ, விவசாயத்திலோ குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை விரும்பவில்லை.

*37 சதவிகிதத்தினர் குடும்பத்தை நடத்த குழந்தைகள் ஈட்டும் பணத்தை அத்தியாவசியமாகக் கருதுகின்றனர்.

*கோவிட் தொற்றுக்குப் பின் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக 86 சதவிகிதத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

*17 சதவிகித பேருக்கு குழந்தை தொழிலாளர்கள் குறித்து யாரிடம் முறையிடுவது எனத் தெரியவில்லை.

*79 சதவிகிதத்தினருக்கு என். ஜி. ஒ அல்லது அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என தெரிகிறது.

*பெரியவர்களாக மாறும்போது, குழந்தைகள் வேலைக்குச் செல்லலாம் என 90 சதவிகிதத்தினர் நம்புகின்றனர்.

*பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக 87 சதவிகிதத்தினர் நம்புகின்றனர்.

*குழந்தை தொழிலாளர்கள் மிகவும் முரட்டுத்தனத்துடன் இருப்பதாக 74 சதவிகிதம் பேர் நம்புகின்றனர்.

`குழந்தைகள் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை' என சொல்லும் பெற்றோர்: ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!

2011 ல் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் 5 லிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை முறையே 259.6 மில்லியன். இவர்களில் 10.1 மில்லியன் குழந்தைகள் வேலை செய்து வருகின்றனர்.

“குழந்தை தொழிலாளர் குறித்து இந்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட பதில்கள், நல்ல ஆரோக்கியமான சிந்தனையை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதும் சில தகவல்கள் சிந்திக்கத் தூண்டுபவையாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளன” என இவ்வமைப்பின் இயக்குநர் திரினா சக்ரபர்தி தெரிவித்துள்ளார்.