Published:Updated:

இந்த லாக்டெளன் நேரத்தில் உங்கள் சிறப்புக் குழந்தைக்கு இதையெல்லாம் கத்துக்கொடுங்க! #VikatanGuidance

சிறப்புக் குழந்தைகள்
News
சிறப்புக் குழந்தைகள்

வீட்டிலேயே சிறப்புக் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், அவர்களுக்குப் பிடித்தமான வகையிலும் கையாள்வதைப் பற்றியதே இந்தக் கட்டுரை.

ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். பரபரவென இயங்கிக்கொண்டிருந்த நகரங்கள், ஆசுவாசப்பட்டு அமைதியாக இருக்கிறது. லாக்டெளன் நாள்களில் பலருக்கும் வீட்டுக்குள் முடங்கியிருப்பது ஒருவித அசெளகர்யத்தைக் கொடுக்கும். அதற்கான சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போம். குழந்தைகளுக்கும் இந்த 'லாக்டெளன்' காலகட்டம் ஒருவித மனசோர்வைக் கொடுக்கும். சிறப்புக் குழந்தைகளுக்கு இந்த லாக்டெளன் காலம் சற்று தொய்வாக உணரவைக்கும். சிறப்புக் குழந்தைகளை வெளியில் அழைத்துச்செல்வதும், பள்ளிக்கு அனுப்புவதும் அவர்களுக்கான மகிழ்ச்சியைக் கொடுக்கும். தற்போது, அதற்கான சாதகமான சூழ்நிலைகள் இல்லை. வீட்டிலேயே சிறப்புக் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், அவர்களுக்குப் பிடித்தமான வகையிலும் கையாள்வதைப் பற்றியதே இந்தக் கட்டுரை.

இயல்பான குழந்தைங்கள் நாம் சொல்லும் விஷயங்களைப் புரிந்துகொள்வார்கள். அதிகப்படியாக சேட்டை செய்யும்போது, கோபத்தில் ஒரு அடி அடித்தால் சொல்பேச்சைக் கேட்பார்கள். (அப்படி அடிப்பது சரியான வழிமுறை அல்ல) ஆனால், சிறப்புக் குழந்தைகள் அப்படி அல்ல.

சிறப்புக் குழந்தைகள்! #SpecialChildren
சிறப்புக் குழந்தைகள்! #SpecialChildren
அவர்களை கன்ட்ரோல் செய்வது, ரொம்ப சவாலான விஷயம் என்றும் அவர்களுக்கு எப்போதும் தெரபிகள் (therapies) கொடுத்துக்கொண்டே வரவேண்டும் என்றும் பொதுவான ஓர் எண்ணம் உண்டு. இப்படியாக இந்த லாக்டௌன் நாள்களில் சிறப்புக் குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல சந்தேகங்கள் அனைவரிடமும் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதிக சேட்டைகள் செய்யும் பட்சத்தில் கோபத்தில் நார்மல் குழந்தைகளைக் கையாள்வது போல ஹார்ஷாக நடந்துகொண்டால், அது அவர்கள் மனத்தை ஆழமாக பாதித்துவிடுமோ என்னும் பயத்தை ஸ்பெஷல் கிட்ஸ் பெற்றோர்களிடம் அதிகமாகக் காணலாம். இவற்றின் உண்மைகளையும் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தெரப்பிகளைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியர் ரூபியிடம் பேசியபோது, "சிறப்பு குழந்தைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். உடற்குறைபாடு உடையோர். வளர்ச்சி குறைபாடு உடையோர். நடத்தை குறைபாடு உடையோர். புலன்களின் செயல்பாடுகளில் குறைபாடு உடையோர் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

சிறப்புக் குழந்தைகள்
சிறப்புக் குழந்தைகள்
For Representation Only

இவ்வளவு வித்தியாசங்கள் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்கு பொதுவா ஒரே மாதிரியான பயிற்சிகள் (Therapies) தான் என்கிற புரிதல் தவறானது. சிறப்புக் குழந்தைகளை, இயல்பாக வைத்திருத்தல் தொடங்கி, பாடம் கற்க வைப்பதுவரை வெவ்வேறு வகையான பயிற்சிகள் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நண்பர்கள், ஆசிரியர்கள் எனத் தங்களுக்கான உலகம் என்று சிறப்புக் குழந்தைகள் உணர்வது அவர்களுக்கென அமைக்கப்பட்ட பள்ளிகள்தாம். அங்கு, படிப்போடு பயிற்சிகளும் தெரபிகளும் பள்ளி விடுமுறை நாள்களிலும் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த லாக்டெளனில், தங்களோட உலகத்தையே மிஸ் பண்ணுவதோடு மட்டுமில்லாமல், அவங்களுக்கு ரொம்ப அவசியமான பயிற்சிகளையும் தெரப்பிகளையுமே தவறவிடுகிறார்கள். இதனால், உணர்வுரீதியான சவால்களையும் சந்திக்க நேர்கிறது" என்றார்.

ப்ரியசகி
ப்ரியசகி

லாக்டௌன் காலத்தில் சிறப்பு குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?

பள்ளி ஆசிரியை மற்றும் 'நிறைவகம்' குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் தலைவராக உள்ள ப்ரியசகியிடம் பேசினோம், "நடுத்தர, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் சிறப்புக் குழந்தைகளை வெளியில் அழைத்துச்செல்வதால், பரிதாபமான அல்லது கிண்டலான பார்வைக்குள்ளாவது இன்றும் மாறவில்லை. சிறப்புக் குழந்தைகள் நிம்மதியாக உணரக்கூடிய இடம், சிறப்புப் பள்ளிக்கூடங்கள்தான். ஆனால், லாக்டௌனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், வேறெங்கும் செல்ல முடியாத நிலையில் குழந்தைகள் உள்ளனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், சிறப்புக் குழந்தைகளின் மன நலனைப் பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளின்மீது கவனம் செலுத்தி அவர்களைக் கண்காணித்து, அவர்களை மன அழுத்தத்திற்கு சென்றுவிடாதவாறு இந்தக் காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்."

வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு குழந்தைகள் சிந்திக்க, விளையாடவைக்க சில விளையாட்டுகள்.

தொடர்ந்து பேசியவர், "தினக்கூலி, வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்... இப்படி விளிம்பு நிலையில் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் காலத்தில் பார்த்துக்கொள்வது சிரமமான காரியம். தண்டையார்பேட்டையில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் தினக்கூலி, வீட்டுவேலை செய்து குழந்தையை காப்பாற்றக்கூடியவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள். குறைபாடுள்ள குழந்தையைக் கைவிட்டுச் செல்லும் கணவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள்முன் தன் குழந்தையைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வைராக்கியத்துடன் வீட்டு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்மணிகளை எனக்குத் தெரியும். கொரேனாவால் வீட்டு வேலையும் பரிபோய், சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் இந்தக் காலத்தில், வீட்டில் உள்ள குழந்தையையும் பார்த்துக்கொள்வது மிகக் கடினம். இந்தச் சூழ்நிலை மிகவும் மன அழுத்தத்தை தரக்கூடியவை. தன்னார்வலர்கள் சிலர் செய்யக்கூடிய உதவி நம்பிக்கையளிக்கிறது.

சிறப்புக் குழந்தைகள்
சிறப்புக் குழந்தைகள்

இருந்தாலும், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த லாக்டௌனில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறப்பு குழந்தைகளை அன்பால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான மனச் சிக்கல், உடல் சிக்கல் இருக்கும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆர்வம் எதில் உள்ளது என்று கண்டறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, கதை சொல்லுவது, செய்தித்தாளில் குறிப்பிட்ட எழுத்துகளை குறிக்கச் சொல்வது போன்று அவர்களை உற்சாகப்படுத்தலாம்" என்றார்