'எல்லா வகுப்பறைகளும் நான்கு சுவர்களுடன் இருப்பதில்லை' என்பதுண்டு. வகுப்பறைக்கு வெளியே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய வாழ்வியல் என்ன? விளக்குகிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.
``வகுப்பறை என்பது கல்வியின் சிறிய பகுதி. கல்விக் கூடங்களையும் புற உலகத்தையும் எந்த அளவுக்கு சரிவிகிதத்தில் ஒருங்கிணைக்கிறோமோ, அந்தப் புள்ளியில்தான் உண்மையான கல்வி உருவாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுற்றுச்சூழல் கல்வி என்பது வெறுமனே பாடப் புத்தங்களுடன் தொடர்புடையதல்ல. பூச்சிகள், உயிரினங்கள், ஆறுகள், வனங்கள், நீர்நிலைகளைப் பற்றி குழந்தைகள் தகவல்களாக அல்லாமல், அக்கறையின் அடிப்படையில் தெரிந்துகொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் கல்விதான் எதிர்கால பூமியை பாதுகாப்பதற்கான அடித்தளம்.
பொதுவாக, பள்ளிகளுக்கு வெளியே பிள்ளைகள் எதிர்மறையான பல விஷயங்களைத் தாங்களாக கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சமூகத்தையும் அதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், தனிமனித உரிமைகளையும், வாழ்வியல் சார்ந்த அடிப்படையான பிரச்னைகளை எதிர்கொள்வது பற்றியும் ஏன் அவர்கள் தாங்களாகக் கற்றுக்கொள்வதில்லை? கிராமப்புறங்களுக்கு சேவை செய்வது, சமூக நீதி, பாலின சமத்துவம், மனவலிமை உள்ளிட்ட நிறைய செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். வகுப்பறைக்கு வெளியே இருக்கும் உலகம்தான் மிகப்பெரிய கல்விக்கூடம்!’’இதுகுறித்து, மனுஷ்யபுத்திரன் இன்னும் விரிவாகப் பேசுகிறார் இந்த Podcast-ல்!