Published:Updated:

உங்கள் பிள்ளை வளர்ப்பு சரிதானா?! இந்த 11 கேள்விகளில் இருக்கிறது விடை #VikatanQuiz

ஞா.சுதாகர்

இந்த 11 கேள்விகளையும் உங்களிடமே கேட்டுக்கொள்வதன் மூலம், உங்களின் பிள்ளை வளர்ப்பு சரியா தவறா என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

எதிர்காலத்தில், குழந்தைகள் நினைத்துப் பெருமைப்படும் பெற்றோராக இருக்கத்தான் அனைவருக்கும் ஆசை. ஆனால், குழந்தைகள் மீது எத்தனை அன்பு வைத்திருந்தாலும்கூட, இந்த வரம் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. காரணம், குழந்தை வளர்ப்பில் தெரிந்தோ, தெரியாமலோ பெற்றோர் செய்கிற தவறுகள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இன்று கடைப்பிடிக்கும் விஷயங்கள்தான், நாளை அவர்களின் எதிர்காலத்திலும் எதிரொலிக்கும். எனவே அந்தப் பிழைகளை அறிந்துகொண்டு உடனடியாகத் தம்மை திருத்திக்கொள்வது அவசியம். அப்படிப்பட்ட தவறுகள் உங்களிடமும் இருக்கிறதா, அந்தப் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா எனத் தெரிந்துகொள்ளவே இந்த Quiz.