Published:Updated:

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது தெரியுமா?

மொழி
News
மொழி

மனித குலம் தோன்றிய காலத்தில் சைகை மொழி, குரல் எழுப்புதல் என இருந்த இணைப்புக்கான சங்கிலி இன்று அற்புதமான இணைப்புக்கான சங்கிலியாக உருமாறி உள்ளது. சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும் போது, கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும் போது புன்னகை தவழ்கிறது.

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது தெரியுமா?

மனித குலம் தோன்றிய காலத்தில் சைகை மொழி, குரல் எழுப்புதல் என இருந்த இணைப்புக்கான சங்கிலி இன்று அற்புதமான இணைப்புக்கான சங்கிலியாக உருமாறி உள்ளது. சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும் போது, கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும் போது புன்னகை தவழ்கிறது.

Published:Updated:
மொழி
News
மொழி

உலகின் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை எண்ணற்ற கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டு பிடித்துள்ளான். பழைய கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம், நவீன காலம் என காலச் சக்கரம் சுழன்று கொண்டே உள்ளது. காலச் சக்கரம் என்று கூறும் நாம் மறக்க முடியாத ஒன்று மனித கண்டுபிடிப்புகளில் சக்கரம். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு இன்று வரை சக்கர வேகத்தில் மனித கண்டு பிடிப்புகள் சென்று கொணடு உள்ளன என்றால் அது மிகையாகது. ஆம், மனித குலத்தின் இணைப்பு சங்கிலியாக உள்ளது இந்த மொழிதான் என்றால் அது மிகையல்ல.

இதோ இந்த கட்டுரையை எழுதிக் கொண்டு, வாசித்துக் கொண்டுள்ள அலைபேசி, கணிணி என நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளால் இந்த உலகமே கையளவு அலைபேசிக்குள் அடக்கமென மாறி விட்ட இந்த நிலையில், அனைவரையுமே இணைத்துக் கொண்டுள்ள அற்புதம் மொழி என்பதே உண்மை.

சார்பியல் தத்துவம், புவியீர்ப்பு விசை, நியூட்டன் விதிகள், பாஸ்கல் விதிகள், ஆர்க்கிமிடீஸ் கோட்பாடுகள், பால் வீதி மண்டலம், ஒளி ஆண்டுகள் இப்படியான எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வெவ்வேறு மனிதர்கள் கண்டறிந்தவை என்றாலும் உலகிலுள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள, பயன்படுத்த, அறிந்து கொள்ள உதவும் ஓர் அற்புதம் மொழி என்பதே யாராலும் மறுக்க முடியாத உண்மை.

language
language

உலகில் உள்ள மனித மொழிகளின் எண்ணிக்கையின் மதிப்பீடுகள் 5,000 முதல் 7,000 வரை வேறுபடுகின்றன. துல்லியமான மதிப்பீடுகள் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளுக்கு இடையே நிறுவப்பட்ட தன்னிச்சையான வேறுபாட்டை (இருவகை) சார்ந்துள்ளது . இயற்கை மொழிகள் பேசப்படுகின்றன , கையொப்பமிடப்பட்டவை , அல்லது இரண்டும்; இருப்பினும், எந்த மொழியும் செவிப்புலன், காட்சி அல்லது தொட்டுணரக்கூடிய தூண்டுதல்களைப் பயன்படுத்தி இரண்டாம் நிலை ஊடகத்தில் குறியாக்கம் செய்யப்படலாம் - எடுத்துக்காட்டாக, எழுதுதல், விசில் அடித்தல், கையொப்பமிடுதல் அல்லது பிரெய்லி . வேறு வார்த்தைகளில் கூறுவதானால் , மனித மொழி என்பது சுதந்திரமானது, ஆனால் எழுதப்பட்ட அல்லது சைகை மொழி என்பது மனிதனின் இயல்பான பேச்சு அல்லது சைகைகளை பொறிக்க அல்லது குறியாக்குவதற்கான வழியாகும்.

மனித குலம் தோன்றிய காலத்தில் சைகை மொழி, குரல் எழுப்புதல் என இருந்த இணைப்புக்கான சங்கிலி இன்று அற்புதமான இணைப்புக்கான சங்கிலியாக உருமாறி உள்ளது. சிலருடைய எழுத்துகளை வாசிக்கும் போது, கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும் போது புன்னகை தவழ்கிறது. இப்படியான ஒப்பற்ற உணர்வுக் கடத்தியாக மொழி உருமாறி போனது என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை.

இதோ இன்றும் நம்முடன் வாழ்ந்து வரும் நரிக்குறவர்கள் எனும் இன மக்கள் பேசும் மொழியானது வாக்ரி போலி மொழி என கூறப்படுகிறது. அவர்களுடைய இந்த மொழிக்கு இந்த நொடி வரை பேச்சு ஒலி வடிவம் மட்டுமே உள்ளது. இதற்கு எந்த விதமான எழுத்து வடிவமும் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனித குலத்தின் ஆரம்ப காலத்தில் இப்படியான எழுத்து வடிவமே இல்லாத மொழி உருவாக்கத்திற்கு முன்பாக சைகை மொழி, உதட்டு அசைவு என்ற மொழிகளே தொடக்கம். இன்று சில வரிகளை படித்ததும், சில பாடல் வரிகளை கேட்டதும் கண்களில் நீர் திரள்வது முதல், ஒலியின் திசைவேகம், ஒளியின் திசைவேகம், எண்ணற்ற விதிமுறைகள், கணக்கியல் தேற்றங்கள் என இந்த உலகமே மொழி என்ற கருவியை கண்களால் கண்டு, செவிகளால் கேட்டு படித்து, மனனம் செய்து, தான் கற்றவற்றை அறிந்தவற்றை மற்றவர்களுக்கும் கூறி அவர்களும் உணர அறிந்து கொள்ள ஓர் அற்புதமான இணைப்பு கருவியாக விளங்குவது மொழிதானே? மனிதன் இன்னும் எண்ணற்றவற்றை கண்டிப்பாக கண்டறியக் கூடும். ஆனால், தான் கண்டறிந்தவற்றை உலகிலுள்ள சக மனிதர்களுக்கு கூறிட விளக்கிட ஒரு கருவி அவசியமான ஒன்றாக உள்ளது. அந்த அற்புதமான கருவிதான் மொழி.

உலகில் பழமையான மொழி, இலக்கணம், இலக்கியம் செய்யுள், உரைநடை, புதினம், கதை, கவிதை, ஹைக்கூ என எத்தனை அவதாரங்களாக இந்த மொழி மனிதர்களிடே உலவுகிறது, அறிந்து கொள்ள, புறிந்து கொள்ள மொழி என்ற கருவியே உள்ளது. இன்று உலகம் முழுக்க உள்ள கி.மு., கி.பி, என்ற யேசு கிறிஸ்து கூறியதாக உள்ள பைபிள் எனும் நூல்தான் இப்போதைய உலகில் உள்ள மொழிகளில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளாதாம். இரண்டாவது இடத்தில் யேசு கிறிஸ்த்து தோன்றுவதற்கு முன்பாக 31 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த திருவள்ளுவருடைய திருக்குறள்தான் நூறு மொழிகளுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்கு பெருமை, நமது தமிழுக்கு பெருமை. சிறந்த மொழி பெயர்ப்பாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு சாகித்ய அகாதமி என்ற பெயரிலான விருதால் கெளரவம் செய்கிறோம். ஒரு மனிதர் எத்தனை மொழிகளை கற்றுக்கொள்கிறாரோ அவர் அத்தனை மனிதர்களுக்கு சமமானவர் .

இதோ முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் தொடங்கி இந்திய சீன எல்லை போர் கார்கில் போர் என பயணித்து இன்றைய ரஷ்ய உக்ரைன் போர் வரை ஏன் இப்படி என ஆராய்ந்தால் நிலப்பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்திற்கு உட்ப்படுத்தி தங்களுடைய வசப்படுத்தும் நோக்கமே அடிப்படையாக இருக்கும். இதனை விட ஒரு எளிய வழிமுறை ஒன்று உண்டென கூறப்படுவதுண்டு. அது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழாகக் கொண்டு வர வேண்டுமெனில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பேசும் மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை அழிக்க வேண்டும். தங்களுடைய மொழியை அவர்களுடைய மொழியாக மாற்றிவிட்டால் அந்த பகுதியில் வாழும் மக்களே இவர்களில் ஒருவராகி போவார்கள். அவ்வாறான மறைமுகமாக போர் மொழிப் போர். மொழியை காக்கும் பொருட்டு தங்களுடைய உயிரை கூட துறக்க துணிந்த வரலாற்றுக்கு சொந்தமானவர்கள் நாம். எழுதியும், பேசியும் ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைத்த வரலாற்றுக்கு சொந்தமானவர்கள் நாம்.

உலக அளவில் தற்போது ஏறக்குறைய 7 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒருபுறம் மக்கள் தொகை அதிகரித்து வந்தாலும், மொழிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாகவும் ஒர் ஆய்வு தெரிவிக்கிறது.

பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி தினமாக 1999-ம் ஆண்டு அறிவித்தது ஐநா சபை. 1952-ம் ஆண்டு தாய்மொழிக்கான போராட்டத்தில் உயிர்நீத்த வங்கதேச போராளிகளின் நினைவாகவும், அழிந்து வரும் மொழிகளைக் காப்பாற்றும் நோக்கத்திலும் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் தற்போது ஏறக்குறைய 7 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒருபுறம் மக்கள் தொகை அதிகரித்து வந்தாலும், மொழிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்திய அளவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாகவும் ஒர் ஆய்வு தெரிவிக்கிறது.

பிற மொழிச் சொற்கள் கலந்து பேசுவது, தாய்மொழியில் அறிவியல் தொழில்நுட்ப சொற்களை பயன்படுத்தாதது உள்ளிட்டவை மொழி அழிவதற்கு காரணங்களாக இருக்கின்றன.

ஓர் இனத்தின் பண்பாட்டிற்கு அடிப்படை ஆதாரமே அந்த மக்களின் தாய்மொழிதான். தமிழ் வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது காலத்தின் கட்டாயம் என்றும், அன்றாட நடவடிக்கைகளில் தமிழின் பயன்பாட்டைத் தவிர்க்காமல் இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்றும் சான்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்புள்ள 25 மொழிகள் என்று சில ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளவற்றில் தமிழ்மொழி 8-வது இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியையும், அடுத்த கட்ட ஆய்வு தேவை என்பதையும் ஆணித்தரமாக உணர்த்துகிறது.

மனித குலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் உச்சபட்சமான கண்டுபிடிப்பு மொழி என்பதே என்பதை உணர்ந்து, ’மொழியை நமது விழி போல் பாதுகாப்போம்’ நாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism