தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அந்தப் புடவையில் ஆயிரம் நினைவுகள்!

மீனா சுதிர்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனா சுதிர்

அம்மாவும் நானும்

எல்லோருக்கும் போலவே எனக்கும் அம்மாதான் ரொம்ப ஸ்பெஷல். எனக்கு 96-ல் கல்யாணமாச்சு. `என்னை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும்' - அம்மா வுக்கு இந்த ஓர் ஆசை மட்டும்தான் இருந்தது.

எனக்குக் கல்யாணமான ஆறாவது நாள் என்னை அழைத்துக்கொண்டு வந்து மாமனார் வீட்ல விட வந்தவங்க அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. மூளையில ஏற்பட்ட நோய்தான் அம்மாவை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்குன்னு தெரிஞ்சது. ஐசியூல பேச்சு மூச்சு இல்லாம இருந்த அம்மாவுக்கு ஒவ்வோர் உறுப்பா செயல் இழக்க ஆரம்பிச்சது. ஒரு வெஜிடபிள் மாதிரிதான் அம்மா இருந்தாங்க. எனக்குக் கல்யாணம் ஆன புதுசு. அதையெல்லாம் நினைக்கக்கூட நேரம் இல்லாத மாதிரி ஹாஸ்பிடல், அம்மா, புகுந்த வீடு... இப்படியே என்னோட 100 நாள்களும் கழிஞ்சது. அப்புறம் அப்பாவோட பிறந்த நாள் அன்னிக்கு அம்மா தவறிட்டாங்க. அம்மா இறந்து 24 வருஷங்கள் ஆகுது.

அந்தப் புடவையில் ஆயிரம் நினைவுகள்!

அம்மா இறக்கிறதுக்கு முன்னாடி உடுத்தி மடிச்சு வெச்ச சேலையை சமீபத்தில் எடுத்துக் கட்டினேன். சொன்னா நம்ப மாட்டீங்க... அப்படியே எமோஷனல் ஆகிட்டேன். அந்த புடவைல அம்மாவோட கைரேகை இருக்கும்ல. அதை அப்படியே பத்திரமா கட்டிட்டு மடிச்சு பீரோல வெச்சிருக்கேன்.

அம்மா பயன்படுத்திய முக்கியமான பொருள்களை, நான் இவ்வளவு நாளா உபயோகிக்காம இருந்தது தப்புன்னு புரியுது. நானும் உபயோகிக்காம போயிட்டா என் பொண்ணுக்கு அந்தப் பொருள்களோட அருமை தெரியாமலே போயிடுமே. அம்மா வோட சில பொருள்களை என் யூடியூப் சேனல் நிகழ்ச்சிகள்ல இப்போ பயன்படுத்தறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மீனா சுதிர்
மீனா சுதிர்

இவ்வளவு நல்லா சமைக்கிற நான், என் அம்மா அப்பான்னு யாருக்கும் சமைச்சு போடலையேன்னு வருத்தமா இருக்கு. என் பொண்ணு ரொம்ப மெச்சூர்ட். சைக்காலஜி படிக்கிறா. என் அம்மாவோட அத்தனை குணமும் அவகிட்ட இருக்கு. அவதான் என் அம்மா!

மீனா சுதிர், சென்னை-40