Published:Updated:

`நிஜ காலைப் போலவே மடக்க முடியும்!' வந்துவிட்டது புதிய செயற்கை கால்

செயற்கை கால் அறிமுக நிகழ்ச்சி

"இந்த முழங்காலைப் பயன்படுத்துவோர், வண்டி ஓட்டுவது, தரையில் உட்காருவது, 160 டிகிரியில் காலை மடக்குவது, பிறர் துணையின்றி பொதுப்போக்குவரத்தை மேற்கொள்வது உள்ளிட்ட வழக்கமான வேலைகளைச் சிரமமின்றி செய்யலாம்."

`நிஜ காலைப் போலவே மடக்க முடியும்!' வந்துவிட்டது புதிய செயற்கை கால்

"இந்த முழங்காலைப் பயன்படுத்துவோர், வண்டி ஓட்டுவது, தரையில் உட்காருவது, 160 டிகிரியில் காலை மடக்குவது, பிறர் துணையின்றி பொதுப்போக்குவரத்தை மேற்கொள்வது உள்ளிட்ட வழக்கமான வேலைகளைச் சிரமமின்றி செய்யலாம்."

Published:Updated:
செயற்கை கால் அறிமுக நிகழ்ச்சி

விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கால்கள் ஊன்றுகோலாக உதவுகின்றன. தற்போது புழக்கத்திலிருக்கும் இந்த உபகரணங்கள் அண்டைநாடுகளிலேயே பெருமளவில் தயாரிக்கப்படுவதுடன், அவை நம் நாட்டினர் பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருப்பதில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டிருக்கிறது, சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி). இதன் ஆராய்ச்சியாளர்களால் 'கதம்' என்ற பெயரில் இந்தியாவின் முதல் பன்மைய செயற்கை முழங்கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செயற்கை கால்
செயற்கை கால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தலைமையில், ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. விழா முடிந்த பிறகு, இந்தச் செயற்கை முழங்காலின் பயன்பாடுகள் குறித்து, ஐ.ஐ.டி பேராசிரியரும், ஐ.ஐ.டி-யின் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான மையத் தலைவருமான சுஜாதா ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ 'கதம்' என்பது ஒரு பன்மைய செயற்கை முழங்கால். விபத்தினால் முழங்காலின் மேல்பகுதி வரை இழந்தவர்கள் எளிதாக நடப்பதற்கு உதவும் இந்தத் தயாரிப்பு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். தற்போது புழக்கத்திலிருக்கும் செயற்கை கால்களை, நம் நாட்டினர் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், அவற்றைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பலரும் சில அசெளகர்யங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், இந்திய மக்களின் தேவைகளை மனதில் வைத்து, மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, உருவாக்கப்பட்டதுதான் 'கதம்'.

செயற்கை கால் அறிமுக நிகழ்ச்சி
செயற்கை கால் அறிமுக நிகழ்ச்சி

இந்த முழங்காலைப் பயன்படுத்துவோர், வண்டி ஓட்டுவது, தரையில் உட்காருவது, 160 டிகிரியில் காலை மடக்குவது, பிறர் துணையின்றி பொதுப்போக்குவரத்தை மேற்கொள்வது உள்ளிட்ட வழக்கமான வேலைகளைச் சிரமமின்றி செய்யலாம்" என்றவரிடம், இந்தச் செயற்கை கால் சாமானியர்களுக்கும் சென்றடைவதற்கான சாத்தியக்கூறுகள் முதல் விற்பனை வாய்ப்புகள் வரையிலான சில கேள்விகளை முன்வைத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"செலவு குறைப்பை மட்டுமே மனதில் கொண்டு 'கதம்' உருவாக்கப்படவில்லை. குறைந்த விலையுடன், அதிக செயல்திறனுடன், இதனைப் பயன்படுத்துபவர்கள் சுதந்திரமாகவும் சிரமமின்றியும் வழக்கமான செயல்களைச் செய்யும் வகையில் இதனை வடிவமைக்கவே நாங்கள் விரும்பினோம். எங்கள் இலக்கில் ஓரளவுக்கு வெற்றிகண்டிருப்பதாக நம்புகிறோம். வெளிநாடுகளில் தயாராகும் செயற்கை கால்களை ஒப்பிடும்போது, 'கதம்' செயற்கை காலை ஐந்து மடங்கு குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும். எனவே, சாமானியர்களாலும் இதனை எளிதாக வாங்க முடியும்" என்றார்.  

செயற்கை கால் அறிமுக நிகழ்ச்சி
செயற்கை கால் அறிமுக நிகழ்ச்சி

இந்தச் செயற்கை கால் தயாரிப்பில் ஏற்பட்ட சவால்களை முன்வைத்த சுஜாதா, “எந்தெந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இந்தத் தயாரிப்பு பயன்படும் என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருந்தது. தவிர, ஆராய்ச்சிக்குத் தேவையான நிதியுதவி கிடைப்பதிலும் சவால்கள் இருந்தன. இந்த மாதிரியான நுட்பமான பொருள்களைக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்க முடியும் என்பதால், இந்தத் துறையிலுள்ள உற்பத்தியாளர்கள் சிலர் புதிய வடிவமைப்புடன் கூடிய செயற்கை கால்களை உற்பத்தி செய்வதில் தயக்கம் காட்டுவார்கள். 'கதம்' செயற்கை காலை வாங்கியுள்ள 'மொபிலிட்டி இந்தியா (Mobility India)' நிறுவனத்துக்குப் பங்குதாரர் ஒருவர் கிடைத்துவிட்டால், 'கதம்' சீக்கிரமே விற்பனைக்கு வரும். கூடிய விரைவில் எங்கள் தயாரிப்பு பலருக்கும் உபயோகமானதாக மாறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism