Published:Updated:

புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation

புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation

சிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? 

புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation

சிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? 

Published:Updated:
புன்னகைக்க எல்லோராலும் முடியும், மனதார சிரிப்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்! #Motivation

கோடிக்கணக்கான மக்களில், உங்களின் இறுதி நாள் வரை உங்களுடனே பயணிக்கப்போவது என்னவோ ஒருவர் மட்டுமே. இளமை உள்ள வரை ஓடி ஓடி உழைத்து, சொத்து சேர்த்தும் சேராமலும் வைத்து (லோன் இருக்குமே), இறுதியில் ஓரளவுக்கு வங்கிக்கணக்கில் ஆறு டிஜிட் தொகை இருக்கும் நேரத்தில், அதை அனுபவிக்க முடியாமல் (குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா!) ஏங்கும் எத்தனையோ யூத்துகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தைச் சேர்த்துவைத்திருக்கும் தோழர்களே, உங்களில் எத்தனை பேர் உங்கள் அன்பென்னும் வங்கியில் குடும்பத்தாரின் பாசத்தையும், நண்பர்களின் நேசத்தையும், உறவினர்களின் ஆசியையும் சேமித்துவைத்திருக்கிறீர்கள்? இதன் முதலீடு `சிரிப்பு' என்பது உங்களுக்குத் தெரியுமா?

எல்லோராலும் புன்னகைக்க முடியும். ஆனால், சிரிக்க முடியாது. உங்களால் சிரிக்க முடியுமென்றால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் மனம்விட்டுச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆகின்றன என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா? சிலருக்கு `ஆண்டுகள்' ஆகியிருந்தாலும் ஆச்சர்யமில்லை! ஏற்றத்தாழ்வு நிறைந்ததுதான் வாழ்க்கை. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள், வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக்கொள்கின்றனர். பலர், பல நேரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், பிரச்னைகளை வளரவிட்டு அதன் தீர்வுக்கான வழி தெரியாமல் விழிக்கிறார்கள். ஆனால், `சிரிப்பு' என்பது உங்கள் வாழ்வின் வலிமையான ஆயுதம் என்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? 

வாய்விட்டுச் சிரித்தால் நோய் மட்டுமல்ல மற்ற துன்பங்களும் போய்விடும். உங்கள் எதிரியை வீழ்த்த கோபப்பட்டு முறைக்கிறீர்களே, சற்று நிதானமாக நின்று வெற்றியைக் கொண்டாடுபவர்களைப் பார்த்துச் சிரித்துப்பாருங்கள். உங்கள் சிறிய தோல்வி முன், உங்கள் எதிரி வலுவிழந்து காணப்படுவான். யாருக்குத் தெரியும் பிற்காலத்தில் அவர் உங்கள் நண்பராகக்கூட ஆகலாம். உங்களையும் மீறி உங்கள் மனதுக்கு வலு சேர்ப்பது சிரிப்பு மட்டுமே. அப்படிப்பட்ட வலிமையான ஆயுதத்தை, ஏன் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடாது? உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடல் நலத்துக்கும் இது மிகவும் நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த உறவாக இருந்தாலும் பிரச்னைகள் வருவது சகஜமான ஒன்று. பிரச்னை ஏற்படும்போது ஒருவர்மேல் ஒருவர் பழி சொல்லிக்கொள்ளாமல், பிரச்னைக்கான தூண்டுதலைப் பார்த்து சரிசெய்வதில்தான், உங்கள் உறவின் முதிர்ச்சி இருக்கிறது. அப்படிச் செய்யாமல், `உன்னாலதான் எல்லா பிரச்னையும்' என்று அர்த்தமற்ற வாக்குவாதம் செய்வதால் எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது. உறவு முக்கியமா, வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது முக்கியமா எனத் தீர்மானிக்கவேண்டியது நீங்கள்தான்.

நண்பர்களுடன் சிரித்துப் பேசும் பலர், வீட்டில் உள்ளவர்களிடம் சினம்கொண்ட சிங்கம்போல் கர்ஜிப்பார்கள். வெளியில் சிதறும் அதே சிரிப்பு, வீட்டிலும் சிதறினால் சந்தோஷமான வாழ்வு எளிதில் உங்களுடையதுதானே! மனம்விட்டுப் பேசி வாய்விட்டுச் சிரித்துப்பாருங்கள், உங்கள் உறவு மேலும் வலுவாகும். எந்தச் சமயத்திலும் உங்களைக் கைவிடாத உறவுக்கு உங்களின் அணுகுமுறை முக்கியக் காரணம். அதற்கு அங்கே மகிழ்ச்சியான தருணம் அவசியம்.

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத் தெரிந்தவன், எத்தனை கடினமான நிலையையும் சமாளிக்கத் தெரிந்தவன். இப்படிச் செய்தால், `பைத்தியக்காரன்' என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது பலரின் மனக்குரல். பிறர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை இதுபோன்ற சமயங்களில் எண்ணாதீர்கள். வேதனையைத் தோல்வியடைய செய்வதற்கு உங்களின் சிரிப்பால் மட்டுமே முடியும். அதேசமயம் எந்தக் காலகட்டத்திலும் `எதிர்மறையான' உணர்ச்சிக்கு அடிமையாகிவிடாதீர்கள். அதாவது, உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வது, தண்டித்துக்கொள்வது போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள். அதிகப்படியான கோபம், அழுகை, அழுத்தம் அனைத்தும் ஆபத்து. `நிதானம்' என்பது எல்லா நேரங்களிலும் அவசியம். பெரும்பாலான நேரங்களில் ஆண்களைவிட பெண்களே தங்களைத் தாழ்வாக நினைத்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில், பெண்களோடு உறுதுணையாக இருப்பது அவசியம்.

இக்கட்டான சூழ்நிலையில் தோள்கொடுத்து, அவர்களை கலகலகலவென சிரிக்கவைத்துப் பாருங்கள், முடிந்தால் கண்களில் நீர் வரும் அளவுக்குச் சிரிக்கவையுங்கள். ஆனால், நடிகர் விஜய்  சொல்வதுபோல், `மத்தவங்கள வேதனைப்படுத்துற ஒரு சின்ன ஸ்மைல்கூட தப்புதான்' என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.