Published:Updated:

அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!

அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!

புதிய பகுதி 1

அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!

புதிய பகுதி 1

Published:Updated:
அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!
அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!

தியாகராயநகர் ரங்கநாதன் தெரு என்றாலே தெரு முழுக்க ஷாப்பிங் செய்யும் மக்கள் தலைகள்தான் நம் மனதில் காட்சிகளாக விரியும். சென்னையின் மிக முக்கியமான வியாபாரக் கேந்திரம் என்றால் அது ரங்கநாதன் தெருதான். தமிழகமெங்கும் கிளை பரப்பியுள்ள சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் போன்ற வியாபார நிறுவனங்களின் தொடக்கம், இந்த ரங்கநாதன் தெருதான்.    

அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தெருவில் நடைபெறும் ஒருநாள் வியாபாரம் சுமார் 25 கோடி ரூபாயை எட்டும் என்ற புள்ளிவிவரத்தை வைத்தே ரங்கநாதன் தெருவின் பிசினஸ் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ரங்கநாதன் அக்ரஹாரம்

ரங்கநாத அய்யங்கார், ராமச்சந்திர அய்யர் ஆகிய இருவரால் விலைக்கு வாங்கப்பட்டு, வீட்டுமனைகளாக மாற்றப்பட்ட தெருக்கள்தான் தற்போதைய ரங்கநாதன் தெருவும், நடேசன் தெருவும். இந்தத் தெருக்கள் முதலில் ரங்கநாத அய்யங்கார் தெரு, நடேச அய்யர் தெரு என்றே அழைக்கப் பட்டன. ரங்கநாதன் தெரு, முதலில் ஓர் அக்ரஹாரமாகத்தான் உருவெடுத்தது.

இந்தத் தெருவில் வீட்டுமனை வடிவமைப்பு வருவதற்கு முன்பு, அந்த இடம் விவசாயக் கிணறுகளுடன் கூடிய கீரைத் தோட்டமாக இருந்தது. அருகிலிருந்த கிராமங்களில் கீரை, காய்கறி விவசாயம் செய்த மக்கள், மின்சார ரயில் மூலம் மாம்பலம் வந்து, ரங்கநாதன் தெருவின் முன்பகுதியில் வியாபாரம் செய்யத் தொடங்கினர்.   

காலப்போக்கில் அக்ரஹாரத்தில் வசித்த பலர் வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைத்து வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் வந்தது. அந்த வீடுகளில் மற்றவர்கள் குடியேறத் தொடங்கினார்கள். அப்போது வீடுகளில் காலியாகக் கிடந்த கார் ஷெட்டுகளில் கடை போட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள்.

அன்று தெற்கு, இன்று வடக்கு

தொடக்கத்தில் தென் தமிழ்நாட்டிலிருந்துதான் பலரும் இங்குள்ள கடைகளில் வேலை பார்த்தனர். ஆனால், அதிகமாக வேலையாட்கள் தேவைப்படுவதால், வடதமிழகத்தில் உள்ள நகரங்களிலிருந்து  தற்போது அதிக அளவில் ஆட்கள் எடுக்கப்படுகின்றனர்.

எல்லாம் கிடைக்கும்

ரங்கநாதன் தெருவில் உள்ளே நுழைந்து விட்டால், கிடைக்காத பொருள்களே இருக்காது. ஜவுளி வகைகள், சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், எழுதுசாதனப் பொருள்கள், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், தங்க நகைகள் என எந்தப் பொருள் சந்தைக்கு வந்தாலும், அடுத்த சில நாள்களிலேயே அதை ரங்கநாதன் தெருவில் நம்மால் வாங்கிவிட முடியும்.

இந்தத் தெருவில் சுடிதார் துணிகளை வாங்கினால், அங்கேயே டெய்லர்களிடம் கொடுத்துத் தைத்து எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். 

இரவிலும் நடமாட்டம்

பகலில் மட்டுமல்ல, இரவிலும் இந்தத் தெரு சுறுசுறுப்பாகத்தான் இருக்கும். இந்தத் தெரு மிகவும் குறுகியது என்பதால், பகல் நேரத்தில் கடைகளுக்கான பொருள்களைக் கொண்டுவரும் லாரிகள் உள்ளே நுழைய முடியாது. எனவே, இரவு 9 மணிக்கு மேல்தான் இந்தத் தெருவில் வண்டிகள் உள்ளே நுழையும். கடைகளுக்குப் பெருமளவில் பொருள்கள் தேவைப்படுவதால், இரவில் இந்தத் தெருவில் வாகனங்கள் வந்து சரக்கை இறக்கிச் செல்லும். எத்தனை லாரிகள் வந்தாலும், காலை 9 மணிக்குள் இந்தத் தெருவை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும் என்பது இங்குள்ள எல்லோருமே பின்பற்றிவரும் நடைமுறை.

ஜி.எஸ்.டி-க்குப் பிறகு

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி-க்குப் பிறகு பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதைக் காண முடிகிறது. முன்பைவிட வியாபாரம் குறைந்துள்ளது. "அடிக்கடி மாற்றப்படும் வரி விகிதத்தால் மொத்தக் கொள்முதல் செய்து விற்கும் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அடித்தட்டு மக்கள், கடைகளுக்கு வருவதே குறைந்து விட்டது’’ என்கிறார்கள் வியாபாரிகள்.

ஆனாலும், தமிழகத்திலேயே ஷாப்பிங்குக்குப் பெயர்பெற்ற ரங்கநாதன் தெரு  எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை!

- தெ.சு.கவுதமன்


படம்: வீ.நாகமணி

அங்காடித் தெரு! - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்!

ரங்கநாதன் தெருவின் முதல் கடை!

'க
ல்யாணம் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் முதன்முதலில் ஒரு ஜவுளிக்கடைதான் ரங்கநாதன் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தெருவில் சிறிய கடையாகத் தொடங்கி, தற்போது தமிழகமெங்கும் 18 கிளைகளோடு இயங்கிவரும் ரத்னா ஸ்டோர் நிறுவனத்தின் நிறுவனர் ரத்னம், இங்குள்ள ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக 27 ஆண்டுகள் பொறுப்பு வகித்திருக்கிறார்.

இந்தத் தெருவின் வளர்ச்சி குறித்து பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரத்னம். ``என் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள மூலக்கரை கிராமம். 12 வயது சிறுவனாக இருந்தபோது சென்னைக்கு வந்து, முதன்முதலில் ரங்கநாதன் தெருவிலிருந்த கல்யாணம் ஜவுளி ஸ்டோர்ஸில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு எனது 17-வது வயதில் ரத்னா ஸ்டோர் என்ற பெயரில் அலுமினியப் பாத்திரக் கடையைத் தொடங்கினேன். என் கடையில் வியாபாரம் நல்லபடியாக நடந்ததால் கடையை விரிவுபடுத்தினேன். எனக்கு அடுத்து சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர்கள் வந்தார்கள். இருவருமே என் உறவினர்கள்தான். நாளடைவில், வியாபாரம் பெருகப் பெருக, இந்தத் தெருவில் உள்ள அக்ரஹார வீடுகள் அனைத்தும் அடுக்குமாடிக் கடைகளாக மாற்றம் பெற்றன.

இந்தத் தெரு மிகவும் குறுகலானது. இந்தத் தெருவில் பிளாட்பாரம் என்பதே கிடையாது. சாலையைக் கொஞ்சம் அகலப்படுத்த எங்கள் தரப்பிலிருந்து சில கடைகளைக் காலி செய்து இடவசதியெல்லாம் ஏற்படுத்தித் தர உறுதியளித்தோம். இருந்தும் இன்று வரை சாலை அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இந்தத் தெரு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அதேபோல, குடிநீர் வசதியும் கழிவுநீர் அகற்றும் வசதியும் இங்கு முறையாகக் கிடையாது. இந்த வசதிகளை நாங்களேதான் செய்துகொள்கிறோம்’’ எனத் தன்னுடைய  நீண்ட கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism