Published:Updated:

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

Published:Updated:
அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

னி மார்க்கெட் என்றதும் ஏதோ பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும் இடம் என்று எண்ணிவிட வேண்டாம். பிறந்த குழந்தைக்கு உடுத்தும் மெல்லிய உடை முதல், பெரியவர்கள் அணியும் வேட்டி, சேலைகள் வரை அனைத்தும் கிடைக்கக்கூடிய ஈரோட்டின் பிரபல ஜவுளி வியாபார மையம்தான் இந்த கனி மார்க்கெட்.   

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

தமிழகத்தில் நெசவு மற்றும் பின்னலாடை துறைக்குப் பெயர் பெற்ற கொங்கு மண்டலத்தின், மிக முக்கிய வியாபார கேந்திரம் இதுதான் என்பதற்கு இந்தியா முழுவதுமிருந்து திரண்டு வரும் வியாபாரிகளே மிகச் சரியான சாட்சி எனலாம்.

 ஏன் கனி மார்க்கெட்?

மிகப் பிரமாண்டமான ஜவுளி அதிபர்கள் என்று இல்லாமல், தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறு ஜவுளி வியாபாரிகளின் மிக முக்கியக் கொள்முதல் தளமாக விளங்குகிறது கனி மார்க்கெட்.
35 ஆண்டுகளுக்கு முன்புவரை, இங்குள்ள சிறு வியாபாரிகள் மணிக்கூண்டு, ரயில் நிலையம் உள்ளிட்ட ஈரோட்டின் பல்வேறு மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே தங்களின் ஜவுளி ரகங்களை வைத்து வியாபாரம் நடத்தி வந்திருக்கிறார்கள். தற்போது மார்க்கெட் உள்ள இந்த இடமோ அரசு மருத்துவ மனைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

பின்னர் மருத்துவமனைக்கான இடம் மாற்றியமைக்கப்பட, இங்கு குதிரை வண்டிகள் நிறுத்தி வைப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள் பொதுமக்கள். அப்போது சில ஜவுளி வியாபாரி கள் ஒன்றிணைந்து, அன்றைய மாநகராட்சி சேர்மன் இ.கே.எம் அப்துல் கனி என்பவரிடம் சென்று, இந்த இடத்தை ஜவுளி வியாபாரிகள் கடையமைத்து வியாபாரம் நடத்திக்கொள்ள ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்திருக் கிறார்கள். அவரும் உடனடியாக அந்தக் கோரிக்கையை ஏற்று, சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை ஜவுளி வியாபாரத்துக் கென மாற்ற மாநகராட்சியின் மூலம் நட வடிக்கை எடுத்து வழங்கி யிருக்கிறார். அந்த இடமே இன்று தமிழகத்தின் பிரதான ஜவுளி மார்க்கெட்டாக திகழ்ந்து வருகிறது. எனவே, இ.கே.எம் அப்துல் கனியின் நினைவாகவே இந்த இடத்துக்கு கனி மார்க்கெட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

 வியாபாரிகளின் கூடுதலம்

திருப்பூர், கரூர் பகுதிகளிலிருந்து பின்னலாடைகள், குமாரபாளையத்திலிருந்து லுங்கிகள், பவானியிலிருந்து கம்பளி வகைகள், சென்னிமலையிலிருந்து பெட்ஷீட் வகைகள், சேலம் சுற்றுவட்டாரத்திலிருந்து துண்டுகள், மேலும் குஜராத், மும்பை, கல்கத்தா, சூரத் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி ரகங்கள் என அனைத்தும் இந்த கனி மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த சிறு ஜவுளி வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களைக் கொள்முதல் செய்யத் தேர்ந்தெடுக்கும் முக்கிய இடமாக கனி மார்க்கெட் திகழ்கிறது.

  இரவில் கூடும் சந்தை

இந்த கனி மார்க்கெட்டில், தினசரி கடைகள் மற்றும் வாரச் சந்தை கடைகள் என  இரண்டு வகையான தொழில் நடைமுறைகள் இருக்கின்றன. தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தினசரி கடைகள் இயங்கிக்கொண்டிருக்க, வாரம் ஒருமுறை திங்கள்கிழமையன்று மட்டும் வாரச் சந்தை கூடுகிறது.  இந்தச் சந்தை இரவு 9 மணிக்கு மேல் தொடங்குகிறது. இப்படி வாரம் ஒருநாள் மட்டும் இரவில் கூடும் வாரச் சந்தையில், உற்பத்தியாளர்களே நேரடியாகத் தங்களின் தயாரிப்புகளைக் கொண்டுவந்து, மொத்த விற்பனையில் ஈடுபடுகிறார்கள். இதனால் கொள்முதல் செய்ய வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள், ஏஜென்ட்டுகள், புரோக்கர்கள் போன்ற எந்தவொரு கமிஷன் பேர்வழிகளின் தொந்தரவுகளுக்கும் ஆளாகாமல், நிம்மதியாகக் குறைந்த விலைக்குப் பொருள்களை வாங்கிச் செல்ல முடிகிறது.

- தி.ஜெயப்பிரகாஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

குறைந்த விலையில் ஜவுளி ரகங்கள்! 

னி மார்க்கெட் தினசரி வியாபாரிகள் சங்கச் செயலாளர் சேகர் பேசும்போது, “இந்த மார்க்கெட்டில் வாரச் சந்தை வியாபாரிகளுக்கு 740 கடைகளும், தினசரி வியாபாரிகளுக்கு 360 கடைகளும் உள்ளன. கனி மார்க்கெட் என்றால் தமிழகம் முழுவதுமுள்ள ஜவுளி வியாபாரிகளின் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளது. பெரும்பாலும், உற்பத்தியாளர்களே இங்கு கடையமைத்து தங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். சாதாரணமாக வாரச் சந்தையன்று நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.40 லட்சம் வரை இங்கு வியாபாரம் நடந்துவந்தது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி-க்குப் பிறகு இப்போது ரூ.10 லட்சத்தை எட்டுவதே சிரமமாக இருக்கிறது. ஈரோடு கனி மார்க்கெட்டுக்குச் சென்றால் மிகக் குறைந்த விலையில் ஜவுளி ரகங்களை வாங்கலாம் என்ற எண்ணம் காலங்காலமாக மக்கள் மனதில் பதிந்துவிட்டது. எனவே, அந்த எண்ணம் மட்டும் என்றுமே மாறிவிடக்கூடாது என்பதற்காகவே, எங்களின் லாபம் குறைந்தாலும் பரவாயில்லை என்று வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.

அங்காடித் தெரு! -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்!

இரவு சந்தை ஏன்?

னி மார்க்கெட்டின் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் நம்மிடம் பேசும்போது...

“ஈரோடு ரயில் நிலையத்துக்கு மிக அருகிலேயே இந்த மார்க்கெட் அமைந்திருப்பதால், வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்ய வரும் வாடிக்கையாளர்களால் எளிதாக இங்கே வந்துவிட முடிகிறது.

ஆனால், வாரச் சந்தை பகல் நேரத்தில் இருக்கும்பட்சத்தில், இங்கு கூட்ட நெரிசல் அதிகமாகி, மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிவிடும். இதனால் ஒட்டுமொத்த மாநகரும் பாதிப்புக்குள்ளாகும். அதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவே கடந்த 35 ஆண்டுகளாக நாங்கள் வாரச் சந்தையை இரவில் நடத்துகிறோம். மேலும், கொள்முதல் செய்ய வரும் வெளியூர் வாடிக்கையாளர்கள் இரவிலேயே தங்களின் வேலையை முடித்துக்கொண்டால், பகலில் தங்களின் ஊருக்குத் திரும்பி, வியாபாரத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும். அதன்மூலம் அவர்களுடைய ஒருநாள் வியாபாரம்கூட விரயமாகாமல் தடுக்க முடியும்” என்றார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism