Published:Updated:

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

Published:Updated:
அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

வ்வொரு ஊரிலும் ஜவுளி, நகை, காய்கறி என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி மார்க்கெட் இருக்கும். ஆனால், கோவையில் அப்படியில்லை. டவுன்ஹால் பகுதிக்கு வந்தால் கிடைக்காத பொருள்களே இல்லை. டவுன்ஹால்தான், கோவை மக்களின் அங்காடித்தெரு.  

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

நூறாண்டுகளுக்குமுன்...

பிரிட்டிஷ் காலத்தில், விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில், 1887-ம் ஆண்டில், கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. 1892-ம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் (நகர் மண்டபம்) என்று அழைக்கப்பட்டது. ஆனால், டவுன்ஹாலில் இருக்கும் ஒவ்வொரு சாலைக்கும் அதற்கு முன்பிருந்தே நீண்ட நெடிய வரலாறு உண்டு.

விஜயநகர பேரரசு காலத்தில், சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்தான் இந்தப் பெயருக்குக் காரணமான ஒப்பணக்காரர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது. அதேபோல, ராஜா ஊர்வலம் வரும் வீதி என்பதால் ராஜ வீதி என்றும் பெயர் வந்தது.

ஒப்பணக்கார வீதி

சென்னை சில்க்ஸ், கணபதி சில்க்ஸ், போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ், எஸ்.பி.பி சில்க்ஸ் என அனைத்துப் பெரிய கடைகளும் இருக்கும் கோவையின் மில்லியன் டாலர் ஏரியா இது.  ஜவுளிக்கடைகள் மூலமாகவே நாளொன்றுக்கு 8 கோடி ரூபாய் வரை புழங்கும் ஏரியா இது.

பெரிய கடை வீதி

கர்சீஃப் முதல் பட்ஸ் வரை தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இங்கு கிடைக்கும். தற்போது, இங்கு கவரிங் கடைகள் அதிகரித்து வருகின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

ராஜ வீதி

முன்பு நகைக்கடைகள் என்றாலே ராஜ வீதிதான். ஆனால், தற்போது ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் எனப் பல்வேறு பகுதிகளிலும் நகைக் கடைகள் முளைத்துவிட்டன. ஆனால், இப்போதும் கோவையில் நகைக்கடைகளுக்கு ஃபேமஸ் ராஜவீதிதான். நகைக்கடைகளுக்கு அடுத்ததாக புத்தகக் கடைகளுக்கும் ராஜ வீதிதான் ஃபேமஸ்.

ஃபைவ் கார்னர்

ஃபைவ் கார்னர் என்றழைக்கப்படும் அஞ்சு முக்கும், டவுன்ஹாலின் மற்றொரு முக்கியமானப் பகுதி. குறிப்பாக, ஸ்டேஷனரி பொருள்களுக்கு ஃபேமஸான ஏரியா. அதேபோல, பள்ளி பாடப் புத்தகங்களும் இங்கு கிடைக்கும்.

ரங்கே கவுடர் வீதி, தியாகி குமரன் மார்க்கெட்

காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களுக்கான ஏரியா. எப்போதும் மூட்டைகளுடனும், வேர்வைச் சகிதமாகவும் தொழிலாளர்கள் ரவுண்டு அடித்துக் கொண்டிருப்பதுதான் இதற்கு ஆஸ்தான அடையாளம். கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில்தான் டி.கே மார்க்கெட் என்று அழைக்கப்படும் தியாகி குமரன் மார்க்கெட் இருக்கிறது. கிட்டதட்ட 150-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் இங்கு உள்ளன. பொருள்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் இங்கு கிடைக்கும். நாள்தோறும் 50 லாரி லோடுகளில் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

சைனா பஜார்

டவுன்ஹால் ஒப்பணக்கார வீதியில் தவிர்க்க முடியாத மற்றொரு வியாபார ஸ்தலம் சைனா பஜார். கிட்டதட்ட 50 கடைகள் உள்ளன. முன்பு சைனா மொபைல்களுக்கு செம ஃபேமஸான ஏரியா. இப்போதும் மலிவு விலை மொபைல், ஐ-பேடுகள், கம்ப்யூட்டர், டெம்பர் கிளாஸ், இயர் போன், சார்ஜர், பேட்டரி போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மலிவாகக் கிடைக்கும் பகுதி.

 இது தவிர, வீட்டுக்குத் தேவையான பிரஸ்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பேப்பர் கப்கள் போன்ற ஃபேன்ஸி பொருள்களுக்கு தாமஸ் வீதி, சீப்பான ரேட்டில் ரெடிமேட் உடைகள் மற்றும் தையல் உபகரணப் பொருள்களுக்கு உப்புக்கடை சந்து, ஃபர்னிச்சர் பொருள்கள், அச்சகங்களுக்கு வெரைட்டி ஹால் சாலை, பழைய புத்தகங்கள் மற்றும் சீப்பான ரேட்டில்  உடைகள், உள்ளாடைகளுக்கு ஈஸ்வரன் கோயில் வீதி, என்.ஹெச் சாலை என்றழைக்கப்படும் நவாவ் ஹக்கீம் சாலை என இவை அனைத்துமே மார்க்கெட் ஏரியாதான்.

என்னடா இது இவ்வளவு பகுதிகளா என்று தலை சுற்றுகிறதா? இந்தப் பகுதிகள் அனைத்தும் டவுன்ஹாலின் ஸ்பெஷலே.

வழக்கறிஞரும், எழுத்தாளருமான முருகவேள், “முதலில் கோவையில் உற்பத்தி செய்யப்படும் டெக்ஸ்டைல்ஸ் மட்டும்தான் இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. பிறகு, மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெக்ஸ்டைல்ஸ் வியாபாரத்துக்காக ஏராளமானோர் இங்கு வந்தனர்.

அதன்பிறகு, நிறைய கடைகள் வந்துவிட்டன. ஆனால், இங்கு உள்ள பல நகைக்கடைகளில் டிசைனர்கள் கிடையாது. இதனால், மக்களின் தேவைக்கேற்ப டிசைன்களெல்லாம் கிடைப்பது கடினம். நகைக் கடைகளில் விற்கப்படும் நகைகளைக் கண்காணிப்பதற்காக எந்த அமைப்பும் இல்லை. இது ஒரு பெரிய பிரச்னை. பார்க்கிங் வசதியும் குறைவு” என்றார்.

இவ்வளவு பெரிய வியாபார ஏரியாவாக உள்ள டவுன்ஹாலில் பார்க்கிங்தான் பெரிய பிரச்னை. பெரும்பாலான சாலைகள் ஒன் வே என்பதால் பர்சேஸிங் வருபவர்களுக்குச் சிரமமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் சில வியாபாரிகள்.

இரா.குருபிரசாத்

படங்கள்: க.விக்னேஷ்வரன்

அங்காடித்தெரு! - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்!

பாரம்பர்யத்துக்கு வரவேற்பு!

ப்பணக்கார வீதியில் உள்ள கந்தசாமி அண்ட் கோ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான நிறுவனம். கந்தசாமி அண்ட் கோவின் உரிமையாளர்களில் ஒருவரான கிருஷ்ண பாரதியிடம் பேசினோம். “என் அப்பா கந்தசாமிதான் இதை ஆரம்பிச்சார். இப்போ நானும் என் அண்ணன் கனகசபாபதியும் கவனிச்சுட்டு இருக்கோம். பழைய கடைகளெல்லாம்  இப்ப இல்ல. எங்க கடையை  பெரிசா மாற்றம் ஏதும் செய்யாம பாரம்பர்யதோட நடத்திக்கிட்டு வர்றோம். அப்ப எல்லா மக்களும் துணி  எடுத்துத் தைக்க ஆர்வமா இருப்பாங்க. ஆனா, இப்ப மெட்டீரியல் மேல மக்களுக்கு ஆர்வம் குறைஞ்சிடுச்சு. ரெடிமேடையே விரும் பறாங்க. அதனால, இப்ப நாங்களும் ரெடி மேட் துணிகளை விற்க ஆரம்பிச்சுட்டோம்” என்றார். ஒப்பணக்கார வீதியில் ஜவுளிக் கடை வைத்திருக்கும் நிஸார் அகமது, “டவுன்ஹாலுக்கு திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். என்னதான் மால்கள், ஆன்லைன் வணிகம் வந்தாலும், கோவை மக்கள் நேரடியாக வந்து துணி எடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். எப்பவுமே நல்ல பிசினஸ் ஆகும் ஒரு ஏரியா இது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி-யாலதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்க கடைக்கு மட்டும், இதனால இந்த ஆண்டு 30 சதவிகிதம் நஷ்டம்” என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism