Published:Updated:

``தனி யானைகிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சேன்!" - ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் வைல்டு லைஃப் போட்டோகிராபி

``தனி யானைகிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சேன்!" - ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் வைல்டு லைஃப் போட்டோகிராபி
News
``தனி யானைகிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சேன்!" - ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் வைல்டு லைஃப் போட்டோகிராபி

``தனி யானைகிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சேன்!" - ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் வைல்டு லைஃப் போட்டோகிராபி

நேர்மையான அதிகாரியாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர், அமுதா ஐ.ஏ.எஸ். இவர் ஒரு வைல்டு லைஃப் போட்டோகிராபர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன் போட்டோகிராபி அனுபவங்களைத் துள்ளலுடன் பகிர்கிறார்.

``இளமைப் பருவத்திலிருந்தே பறவைகள் மீது தனிப் பிரியம். அவற்றை போட்டோ எடுத்து ரசிப்பேன். ஒருகட்டத்தில் பறவைகளைத் தாண்டி, வனவிலங்குகள் மீதும் ஆர்வம் உண்டானது. 2010-ம் ஆண்டு, முதுமலை சரணாலயத்தில் வனவிலங்குகளை போட்டோ எடுக்கப் போனேன். அந்த அனுபவம் வைல்டு லைஃப் போட்டோகிராபி மீது பெரும் உற்சாகத்தை உண்டாக்கிச்சு. எட்டு வருஷமா இந்த போட்டோகிராபியில் ஆர்வமா தொடர்ந்துட்டிருக்கேன். இதுக்காக, மாதத்தில் சில நாள்களை ஒதுக்கிடுவேன். அதிக வேலைப்பளுவால் வெளியூர் சரணாலயங்களுக்குப் போகமுடியாதபோதும், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விசிட் அடிச்சுடுவேன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இப்போ பூத்திருக்கு. அதனால், சீக்கிரமே நீலகிரிக்குப் போய் போட்டோ எடுக்கணும். நிக்கான் D500 மற்றும் நிக்கான் 7000 மாடல் கேமராகளைப் பயன்படுத்தறேன். 2015-ம் ஆண்டு, கர்நாடகாவின் நாகர்ஹோளே புலிகள் சரணாலயத்துக்கு என் கணவருடன் போயிருந்தேன். ஒரு தனி யானை எங்க காரை வழிமறிச்சு நின்னுடுச்சு. அப்படியே ரிவர்ஸ்ல வந்து, பாதுகாப்பா வேறு இடத்துக்குப் போயிட்டோம். இப்படி நிறைய மறக்கமுடியாத அனுபவங்கள் நடந்திருக்கு. என்னோட ஸ்டெரஸ் பஸ்டரும் (Stress Buster) போட்டோகிராபிதான். இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பல சரணாலங்களுக்கு போட்டோ எடுக்கப் போயிருக்கேன். சீக்கிரமே கென்யாவின் சரணாலயங்களுக்குப் போய் வனவிலங்குகளை கேமராவில் க்ளிக் பண்ணிட்டு வரணும்னு" எனப் புன்னகைக்கிறார் அமுதா ஐ.ஏ.எஸ்