Published:Updated:

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

ஐடியா புதுசுஇந்துலேகா சி.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

ஐடியா புதுசுஇந்துலேகா சி.

Published:Updated:
பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

‘உயரமா இருக்கிறவங்க பின்னாடி நில்லுங்க...’

‘கொஞ்சம் லெஃப்ட் சைடு தள்ளி நெருக்கமா நில்லுங்க சார்...’

‘டேய் குட்டிப் பையா, முன்னாடி வந்து உக்காருப்பா...’

‘ம்... எல்லாம் ஓகே! எல்லாரும் இங்கே பாருங்க... ஸ்மைல் ப்ளீஸ்!’

- புகைப்படக்காரரின் இந்த மந்திரச் சொற்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நிற்போம். ஆம், ஒவ்வொரு திருமண நிகழ்ச்சி முடிந்ததும், மண்டபத்தில் கடைசியாக எடுக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தின் புகைப்படம் என்பது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் அளவுக்கு, அனைவரது மனதுக்கும் மிகவும் நெருக்கமானது.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

அப்பா, சித்தப்பா, அத்தை என ஒரு குடும்பத்தின் அனைத்துத் திருமண வைபவங்களுக்கும் ஒரே புகைப்படக்காரர் என்ற நிலையெல்லாம் மாறிவிட்டது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்துக்கும் போட்டோ ஸ்டுடியோக்காரர்களைத் தேடிப்போன காலம்போய், திருமணத்துக்கெனப் பிரத்யேகப் புகைப்படக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அதிலும் ஒவ்வொருவரும் தனித்திறமையோடு மிளிர்வதால், அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது சற்றுக் கடினமாகவே உள்ளது. ஆனால், இதைச் சுலபமாக்கித்தரும் வேலையைச் செய்துவருகிறது கோயம்புத்தூரில் உள்ள ‘போர்ட்ரெய்ட்ஸ்’ நிறுவனம். அதன் உரிமையாளர் தீபிகாவிடம் பேசினோம். நிறுவனத்தை ஆரம்பித்த சூழல் மற்றும் நோக்கம் பற்றிப் பகிர்ந்தார்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

“சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்ங்கிறது என்னோட கனவு. ஆனாலும், எல்லாரையும் மாதிரி டிகிரி முடிச்சுட்டு நைன் டு ஃபைவ் வேலையைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். லைஃப் ரொம்ப ரொட்டீனா போயிட்டு இருந்துச்சு. ஒருகட்டத்துல யாருக்காகவோ, யாரோட கம்பெனியிலேயோ வேலைபார்த்திட்டு இருக்கோமேன்னு யோசனையா இருந்துச்சு. சொந்த கம்பெனியை ஆரம்பிக்கிற நேரம் வந்துடுச்சு போலன்னு உணர்ந்தேன்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

அந்த நேரத்துலதான் என் கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அடுத்தடுத்து கல்யாணம் நடக்க ஆரம்பிச்சது. ஒவ்வொரு வெடிங்லேயும் நான் கவனிச்ச விஷயம்... இன்றைய தேதியில் பல பிசினஸ்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமா திருமணம் முகம் மாறியிருக்கு என்பதைத்தான். அதில் ஒரு பிசினஸை நான் எடுத்துச் செய்யலாம்னு நினைச்சேன். கல்யாண ஏற்பாடுகளைச் செய்து தரும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் ஏற்கெனவே நிறைய இருக்கு. மேலும் அது பெரிய ஏரியா, நிறைய கான்டாக்ட்ஸ் தேவைப்படும் என்பதால் நிதானமா யோசிச்சேன். ஒரு குறிப்பிட்ட துறைக்கான விஷயங்களை மட்டும் ஃபோகஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணி, வெடிங் போட்டோகிராபியை மட்டும் கையில் எடுத்தேன்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

‘`ஆரம்பத்துல வெடிங் போட்டோகிராபி துறையில் இருக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்படி சேகரிச்ச நபர்களில் யாரெல்லாம் பெஸ்ட்டா வேலை செய்றாங்க, அவங்க வேலை கஸ்டமர்களை எந்தளவுக்கு, என்னென்ன வகைகளில் திருப்திபடுத்தியிருக்கு என்பது மாதிரி பலவிதமான அலசல்களுக்கு அப்புறம் ‘பெஸ்ட் போட்டோகிராபர்கள்’னு ஒரு லிஸ்ட்டை ரெடி செய்தோம். அவங்களைச் சந்திச்சு, ‘திருமண வீட்டினரின் பட்ஜெட் மற்றும் ரசனையைப் பொறுத்துத் திறமையான போட்டோகிராபர்களை பரிந்துரைக்கும் ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கோம். விருப்பமிருந்தால் இதில் இணையலாம். இதன் மூலம் உங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும்’னு புரியவெச்சோம். எங்களோட அணுகுமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதுல எங்களுக்கே ஆச்சர்யம்தான்” என்பவர் கிட்டத்தட்ட 400 திருமணப் புகைப்படக்காரர்களுடன் கைகோத்திருக்கிறார்.

“ஒரு கஸ்டமரோடு டேஸ்ட், எதிர்பார்ப்பு, பட்ஜெட் போன்ற விஷயங்களை அடிப்படையா வெச்சு, அவங்களுக்குப் பொருத்தமான புகைப்படக்காரர்கள் அடங்கிய லிஸ்ட் மற்றும் அவங்களோட வேலைப் பற்றின விவரங்களைக் கொடுப்போம். அதிலிருந்து கஸ்டமருக்கு யாரைப் பிடிக்குதோ, அந்த போட்டோகிராபரை ஃபிக்ஸ் செய்துக்கலாம். கஸ்டமரோட எதிர்பார்ப்பு என்னன்னு, போட்டோகிராபரிடம் தெளிவா சொல்லிடுவோம். கஸ்டமர் சர்வீஸுடன், தனித்துவமான வேலைத்திறன் இருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காம இருக்கிற புகைப்படக்காரர்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இதில் எங்க நோக்கம்’’ எனும் தீபிகா, ‘கான்செப்ட் போட்டோகிராபி’ என்கிற சுவாரஸ்யமான விஷயத்திலும் கலக்கி வருகிறார்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

“வெடிங் போட்டோகிராபி, ப்ரீ வெடிங், போஸ்ட் வெடிங் போட்டோகிராபின்னு பிஸியா இருந்தாலும், புதுசு புதுசா ஏதாச்சும் பண்றதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதனால கான்செப்ட் போட்டோ ஷூட்ல  புதுமையான விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சிருக்கோம். குறிப்பா, நம்மளோட கலாசாரம், பாரம்பர்யம் சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கான்செப்ட்டுகள். உதாரணத்துக்கு, வெளிநாட்டுல வேலை செய்ற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு ஃபாரினுக்குப் போய் செட்டில் ஆகும் பொண்ணுங்க, அவங்களோட அம்மா அப்பா, கூடப் பொறந்தவங்க எல்லாரையும் வருஷத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துக்கலாம். ஆனா, அவங்களோட ஃப்ரெண்ட்ஸ், கஸின்ஸ்னு ஒரே வயசுப் பொண்ணுங்களுக்கான ‘கேர்ளி கேர்ளி’ விஷயங்களைப் பேச, சிரிக்க, கொண்டாட மீண்டும் எல்லோரும் ஒன்று சேரும் தருணம் அமையறது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த ஏக்கத்துக்காக, ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து இருந்த அந்த ஸ்வீட் மெமரீஸை அப்படியே போட்டோக்களா ஃப்ரீஸ் பண்ற ஒரு கான்செப்ட் ஷூட் ப்ளான் பண்ணினோம். இதேமாதிரி மாப்பிள்ளையும் அவர்  ஃப்ரெண்ட்ஸோட கான்செப்ட் ஷூட் செய்துக்கலாம்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

சமீபத்துல, பாரம்பர்ய விளையாட்டுகள், வீட்டு வேலைகளை ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து செய்யுற மாதிரியான ஒரு  போட்டோ ஷூட் பண்ணினோம். பல்லாங்குழி, பரமபதம் விளையாடுறது, கோலம் போடுவது, பூ கட்டுவது, மருதாணி போட்டுக்கறதுன்னு உயிரோட்டமா இருக்கும் புகைப்படங்கள் அவை. நம்ம கலாசாரம், பாரம்பர்யத்தை ஃபாரின்ல போய் செட்டில் ஆகும் பொண்ணுங்க அடுத்த தலைமுறைக்கு அந்தப் புகைப்படங்கள் மூலமா கொண்டுபோய் சேர்க்குற மாதிரி இந்த கான்செப்ட்டை பிடிச்சோம். போட்டோஸ் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு பாராட்டு குவியுது” எனத் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்ட தீபிகாவிடம், ‘திருமணத்துக்குப் புகைப்படம் எடுக்க இவ்வளவு தொகையா எனும் பேச்சு மக்கள் மத்தியில் இருக்கிறதே..?’ என்றோம்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

“திருமணத்துக்கு வந்திருக்கும் உறவினர்களை மட்டும் படம்பிடிக்கறதுக்கு ஒரு கேமரா, ஒரு கேமராமேன் இருந்தாலே போதும். இது அந்தக் காலத்து நடைமுறை. ஆனா, இப்போ வெடிங் போட்டோகிராபியில பொண்ணு, மாப்பிள்ளையை ஹீரோ, ஹீரோயினா பாவிச்சு சினிமா லெவலுக்கு அவுட்புட் கொடுக்குறாங்க. அதைத்தான் மக்களும் விரும்பறாங்க. ஆனா, அதை அவ்வளவு ஈஸியா பண்ணிட முடியாது.

சடங்குகளைப் படம்பிடிக்க, வந்திருக்கும் உறவினர்களைப் படம்பிடிக்க, மணமேடையில் நிகழும் சந்தோஷம், ஆனந்தக் கண்ணீர், ஆச்சர்யம், பெருமிதம்னு ஒவ்வொருத்தரின் எமோஷனையும் மிஸ் பண்ணாம படம் பிடிக்க, குறைந்தபட்சம் ஐந்து பேர் தேவைப்படுறாங்க. இது தவிர ப்ரீ வெடிங், போஸ்ட் வெடிங், அவுட்டோர் ஷூட்னு புதுப்புது விஷயங்கள் வந்துடுச்சு.  நல்ல தரமான புகைப்படங்களும், வீடியோவும் எடுக்கிறதுக்குத் தேவையான கேமரா, லைட்ஸ், தொழில்நுட்ப சாதனங்கள்னு இவையெல்லாம் இருந்தாதான் கஸ்டமர் எதிர்பார்க்கிற அவுட்புட் கிடைக்கும். அதுக்கான பட்ஜெட் என்னவோ அதை தெளிவா எடுத்துச் சொல்லி புரியவெச்சுதான் வேலையை கமிட்  செய்றோம்.

பாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

இவற்றையெல்லாம் தாண்டி, வெறுமனே படங்களைச் சுட்டுத் தள்ளாம, ஒவ்வொரு நிகழ்வையும் வித்தியாசமான கோணத்தில், வித்தியாசமான கற்பனைத் திறனோட போட்டோ எடுக்குறதுக்கு ஒவ்வொரு புகைப்படக்காரரும் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கு. அதனாலதான், ஒரே போட்டோகிராபர் எடுக்கும் ரெண்டு வெவ்வேறு திருமண நிகழ்ச்சியோட போட்டோக்களும் ஒரே மாதிரி இல்லாம வித்தியாசமா இருக்கு. அந்தத் தரத்துக்கு ஏற்ற பட்ஜெட்டை ஃபிக்ஸ் செய்யுறோம்” - தொழில் நேர்த்தியாக விளக்கம் சொல்கிறார்.

தீபிகாவின் அடுத்த இலக்கு திருமணம் மட்டும் இல்லாமல், வளைகாப்பு, குழந்தை எனத் திருமண வாழ்க்கை சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் கான்செப்ட் ஷூட் செய்வது.

வாழ்த்துகள்!