Published:Updated:

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!
பிரீமியம் ஸ்டோரி
வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

வண்ணக் கனவுகள்

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

வண்ணக் கனவுகள்

Published:Updated:
வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!
பிரீமியம் ஸ்டோரி
வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!
வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

திருமணத்துக்கான புகைப் படங்கள் இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாய்ச் சலில், ரசனையில் மெரு கேறிக்கொண்டிருக்கின்றன. இதில் ‘கேண்டிட் போட்டோகிராபி’ களத்தில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்துவருகிறார், சென்னையில் உள்ள ‘ஸ்மைலி மீடியா’வின் உரிமையாளர் சாரதா.

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சென்னைப்பெண் நான். சின்ன வயசிலிருந்தே கேமராவைப் பார்க்கும்போதெல்லாம், தூரத்து நிலா மேல இருக்கிற ஒரு காதல் வரும். அதுவே என் வாழ்க்கை முழுக்க ஒளிவீசப்போகுதுனு நினைச்சுக்கூடப் பார்த்த தில்லை. இன்ஜினீயரிங்ல க்ளாஸ் டாப்பராக இருந்தாலும், என் எண்ணம், சிந்தனையெல்லாம் கேமரா மேலதான் இருந்தது. ‘இந்தப் படிப்பு எனக்கு வேண்டாம். டிஸ்கன்டின்யூ பண்ணிட்டு அடுத்த வருஷம் விஸ்காம்ல சேர்ந்து படிக்கப்போறேன்’னு வீட்ல சொன்னேன். பயங்கர எதிர்ப்பு. `எதிர்ப்பை எதிர் கொள்கிறதா... ஏமாற்றத்தை ஏத்துக்கிறதா’னு ஒரு மனப் போராட்டம். எதிர்ப்பை `டிக்' அடிச்சேன். ‘பணம் போச்சு... ஒரு வருஷம் வேஸ்ட் ஆகிடுச்சு’னு நிறைய அழுத்தங்கள் என்மீது வைக்கப்பட்டன. ‘நான் தேர்ந்தெடுத்த பாதையில ஜெயிச்சுக் காட்டுறேன்’ என்ற நம்பிக்கை நிறைஞ்ச பதிலை, என்னை நோக்கிய எல்லா கேள்விகளுக்கும் தந்தேன்.

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

எதிர்ப்புகள், எச்சரிக்கைகள், கேலிகளுக்கு மத்தியில, மறு வருடம் லயோலா கல்லூரியில் பி.எஸ்ஸி விஸ்காம் சேர்ந்தேன். முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும்போதே கனவுகள் பட்டாம் பூச்சியா மனத்தோட்டத்தில் பறந்து, பிடிச்ச விஷயத்தைச் செய்கிற சந்தோஷம்னா என்னன்னு உணரவெச்சது. போட்டோகிராபி, போட்டோ எடிட்டிங், ஃபிலிம் மேக்கிங், போட்டோஷாப்னு ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா கோர்ஸ்களையும் படிச்சேன். மூணு வருஷ முடிவில் என் கனவு நிறுவனமான ‘ஸ்மைலி மீடியா’ உதயமானது.

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

என் கணவர் மணியும் போட்டோகிராபர்  என்பதால், நிறைய ஆலோசனைகள் செய்து எதையும் தவறவிடாத வகையில் திட்டமிடுவோம். என் திருமணத்துக்கு முன், முழு நிகழ்ச்சியையும் நான்தான் கவர் பண்ணுவேன். சாதாரண கேமராதான் அப்போ என்கிட்ட இருந்தது. உயிரைக் கொடுத்து ரசிச்சு ரசிச்சு நாம் எடுக்குற படங்கள், சில கஸ்டமர்களுக்குப் பிடிக்காது. அந்த ரசனையை அவங்களுக்குப் புரியவைக்கவும் முடியாது. அதனால, அவங்க எதிர்பார்க்கிற அம்சங்கள் கொண்ட புகைப்படங்களையும் மிஸ் ஆகாமல் எடுத்துடுவேன். பெண் என்பதால் சில நேரங்களில் பேமென்ட்டுகளில்கூட இறுக்கமா பேசுவாங்க; இழுத்தடிப்பாங்க. அதுபோன்ற நேரங்களில் எல்லாம் எனக்கான ஆறுதல், என் கேமராதான்.

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

அதுதான் எல்லா சோர்வுகளின்போதும், ‘சாரதா வா வா... பெரிய வெற்றிகளையெல்லாம் இனிதான் நான் உனக்குக் காட்டப்போறேன்’னு எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு'' என்கிற சாரதாவின் பலம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு புது கான்செப்ட் யோசிப்பதுதான்.

வேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு!

``சமீபத்தில், மீனவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது மாதிரி போட்டோஸ் வேணும்னு கிருத்திகா-கெளதம் தம்பதி கேட்டிருந்தாங்க. அவங்களை பீச்சில் வைத்து, மீனவர்கள்போலவே உடைகள் தயார்செய்து போட்டோ ஷூட் செய்தோம். படங்கள் நாங்க எதிர்பார்த்ததைவிட ரொம்ப அழகாக வந்திருந்தது. வேலையை வேலையாகப் பார்ப்பதற்கும், ரசிச்சு செய்யறதுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒவ்வொரு முறையும் ரிசல்ட்டில் நாங்க உணர்றோம்; டானிக் ஏத்திக்கு றோம். சிலர், `வெடிங் போட்டோ கிராபினாலே லட்சங்களில் கட்டணம் கேட்பாங்க; மிடில் கிளாஸுக்கு இது சாத்தியமா?'னு யோசிப்பாங்க. பட்ஜெட்டுக்குள் க்ளிக் செய்றதுதான் எங்களின் இன்னொரு சிறப்பம்சம்!” என்கிற சாரதாவின் நிறுவனத்தில் இன்று 40 பேர்  பணிபுரிவதே, அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

கனவுகள் விரியட்டும்!

- சு.சூர்யா கோமதி