Published:Updated:

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!
மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

``யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு!"

உங்கள் எழுத்துக்கான வேரை, உண்மையை எங்கிருந்து பெறுகிறீர்கள். எந்த விதத்தில் அதைப் புனைவாக மாற்றுகிறீர்கள்?

``இதைக் கலையும் களமும்தாம் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன். புனைவு என்பது உண்மைக்கு மாறான ஒரு விஷயம் என நினைக்கிறோம், அதில் உண்மையில்லை. உண்மை என்று நாம் கருதுவது நம் ஒவ்வொருவரது கண்ணோட்டம்தான். என்னைப் பொறுத்தவரை புனைவு என்பது, நமது பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டி என நினைக்கிறேன்."

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

பாலினம், தேசம் போன்ற எல்லைகளைக் கடக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறீர்கள். அத்தகைய முயற்சி சாத்தியமா?

"மிகச் சிலர் இந்த எல்லைகளைக் கடக்கிறார்கள். மற்றபடி, எல்லோரும் நடப்பில் இருப்பவற்றோடு அப்படியே பழகிவிடு கிறார்கள். அந்த எல்லைகளை உறுதியாக்கும் முயற்சிகளைச் செய்யவே நினைக்கிறார்கள்."

- இலக்கியம், கூர்மையான அரசியல் விமர்சனம், களப் பணி என எழுத்தாளர்களின் முன்னுதாரணமாகத் திகழ்பவர் அருந்ததிராய். எழுத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் காரணம் தொடங்கி சமீபத்திய போர்ச்சூழல் வரை பலவற்றைக் குறித்த பார்வையை பதிவு செய்திருக்கும் அவரது "யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு!" எனும் ஆனந்த விகடன் நேர்காணலை முழுமையாக வாசிக்க

***** 

தமிழகத்தின் சூப்பர் 10 பெண்கள்!

> மருத்துவமனைக்கு வரவே அஞ்சும் பழங்குடிகள், குடிகாரக் கணவனிடம் அல்லல்பட்டு உளவியல் பாதிப்புக்குள்ளாகித் தவிக்கும் பெண்கள், போதிய ஊட்டச்சத்தில்லாமல் நோய்களோடு போராடும் குழந்தைகள்... இவர்கள் தாம் மருத்துவர் அனுரத்னா வின் இலக்கு. பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றும் அனுரத்னா, பணி நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் ஊர் ஊராகப் பயணிக்கிறார். 

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

> கதிராமங்கலமாகட்டும், பூந்தோட்டமாகட்டும்...  காவிரிப்படுகையின் வளத்தைச் சுரண்டத் துடிக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நடக்கும் எல்லாப் போராட்டங்களிலும் சத்தமில்லாமல் நிற்கிறார் சித்ரா ஜெயராமன். 

> பழங்குடி மக்களின் ஒளிவிளக்கு, பச்சையம்மாள். கல் குவாரியில் கொத்தடிமையாக வேலை செய்த அண்ணனைப் பார்க்கச் சென்றபோது, அவர் வாங்கிய கடனுக்காக பச்சையம்மாளையும் கொத்தடிமையாக்கினார் ஆண்டை. அதிலிருந்து மீண்டு,  இதுவரை கொத்தடிமைகளாக இருந்த 103 பேரை மீட்டு, அவர்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்திருக்கிறார். 

> மேற்குத்தொடர்ச்சி மலையில் 20 ஆண்டு களுக்கும் மேலாக வன உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் சூழலியல் ஆய்வாளர் சுபத்ரா தேவி. 

- இவர்களுடன் வெவ்வேறு துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பெண்களைப் பட்டியலிட்டுள்ள அவள் விகடன் 'சூப்பர் 10 பெண்கள் - தமிழகம்' பகுதியை முழுமையாக வாசிக்க

*******

இந்தியாவின் சூப்பர் 10 பெண்கள்!

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியான முதல் வழக்குரைஞர், விதை வங்கி மூலம் மரபு விதைகளைக் காப்பாற்றிய விதைத் தாய், போர் விமானத்தை, தனித்து இயக்கிய முதல் பெண் விமானி, உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண், இந்தியாவின் முதல் பழங்குடியின ராணி பட்டம் வென்ற பெண், உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் ஆறாவது முறை சாம்பியன் பட்டம் வென்ற பெண், நாஸ்காமின் முதல் பெண் தலைவர், `இருப்பு சமரத்தை' வெற்றிகரமாக நடத்திய சமூக ஆர்வலர், ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அதிகாரி மற்றும் இருபாலர் தொழுகையை முன்னின்று நடத்திய முதல் இஸ்லாமியப் பெண்...

*******

உலகின் சூப்பர் 10 பெண்கள்! 

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

நடியா முராத்: இராக்கின் சிஞ்சர் மாவட்டத்தில் வசித்துவந்த 19 வயது மாணவி நடியா. 2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று இவர் கிராமத்தைச் சுற்றிவளைத்த ஐ.எஸ் அமைப்பு நூற்றுக் கணக்கானோரைக் கொன்று குவித்தது. இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து, அடிமைகளாக இழுத்துச் சென்றது. தன் மொத்தக் குடும்பத்தையும் தொலைத்து அநாதையான நடியா, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கைதியாக அடைக்கப்பட்டார். கடும் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானார். நவம்பர் மாதம் அங்கிருந்து தப்பினார். பெல்ஜியப் பத்திரிகை ஒன்றுக்குத் தன் கதையைத் துணிவுடன் சொல்ல, இராக்கில் நடைபெறும் கொடுமைகள் உலகின் கவனம்பெற்றன. `போரிலோ, பேரிடரிலோ, எந்தக் காலத்திலும் பெண்ணே அதிக இன்னலுக்கு ஆளாகிறாள்' என்பதைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த நடியா, `நடியாஸ் இனிஷியேட்டிவ்' என்ற அமைப்பைத் தொடங்கி, இராக்கின் குர்து இன மக்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். சூப்பர் பெண் நடியாவுக்கும், டென்னிஸ் முக்வேகேக்கும் அமைதிக்கான நோபல் பரிசு 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

- இவரைப் போலவே உலக அளவில் வெவ்வேறு துறைகளில் கவனம் ஈர்க்கும் சமகால பெண்களைப் பட்டியலிட்டு, அவர்கள் குறித்து விவரித்திருக்கும் அவள் விகடனின் 'சூப்பர் 10 பெண்கள் - உலகம்'  பகுதியை முழுமையாக வாசிக்க

********

புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!

ஓர் உண்மையை ஒப்புக்கொள்வோம். நம் குடும்பங்களின் முதலீட்டு முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக, ஆனால் மறைமுகமாக உள்ளது. வீட்டின் தலைவருக்கு போனஸ் வந்தால், அதில் குறைந்தபட்சம் 50 சதவிகிதத்துக்குத் தங்கம் வாங்குவதைப் பார்க்கையில் இந்தக் கருத்து மேலும் வலுப்படுகிறது. டெல்லிக்கு ராஜா ஆனாலும், அம்மாவுக்குப் பிள்ளை; மனைவிக்குக் கணவன்; மகளுக்குப் பாசமான அப்பா ஆயிற்றே! பெண்கள் சொல்வதைக் கேட்காமல் ஆண்களால் இருக்க முடியாதே!

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

இன்றைக்கு எல்லாவிதமான படிப்புகள், வேலைகள், துறைகளிலும் பெண்கள் ஜொலிக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என்று இறங்கிவிட்டால், ஆண்களைவிட பெண்கள் 4-6%  கூடுதலாகச் சம்பாதிக்கிறார்கள் என்று ஜெர்மனியின் காம்டைரெக்ட் பேங்க் தன் சர்வேயில் குறிப்பிடுகிறது. ஆனால், சராசரிப் பெண்களுக்கு, குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு இன்னும் பழைய முதலீட்டு முறைகளில்தான் நம்பிக்கை உள்ளது. தங்கம், நிலம், வங்கி என இவை தவிர, வேறெதிலும் முதலீடு செய்ய அவர்கள் இப்போதும் தயாரில்லை. 

- 'இன்றைக்கு புதிய முதலீட்டு முறைகளுக்குக் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இந்த எண்ணிக்கை மிக விரைவாக உயர வேண்டும் என்பதே நம் விருப்பம்' என்று கூறும் சுந்தரி ஜகதீசன், நாணயம் விகடனில் எழுதியிருக்கும் சிறப்புக் கட்டுரை மிக முக்கியமானது. 'புதிய முதலீட்டு முறைகளுக்கு மாற வேண்டிய பெண்கள்!' எனும் அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க


******

சட்ட தேவதைகள்

2019-ம் ஆண்டு மகளிர் தினத்துக்கான கருப் பொருளாக இருப்பது #BalanceforBetter என்பதுதான். பாலினச் சமத்துவத்தைச் சீர்செய்வது, உறவைச் சமத்துவத்தோடு கையாள்வது போன்றவற்றை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. சமத்துவத்தை அடைவதற்குப் பெண்களுக்கான உரிமைகள் சட்ட ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா போன்ற பன்மைச் சமூகச் சூழல்கொண்ட நாடுகளில் சட்டங்கள் மட்டும் இல்லையென்றால், எவையெல்லாம் பெண்களுக்கான உரிமைகள் என்றுகூடப் பலர் அறிந்திருக்க முடியாது.  

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது இதை மனதில்கொண்டே செயல்பட்டார். பெண்களின் உரிமை, கல்வி, மேம்பாடு அனைத்தையும் கணக்கில்கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் 15 பெண்களும் இடம்பெறும்படி செய்தார். இந்த மகளிர் தினத்தில் அவர்களை நினைவுகூர்வது மிக அவசியம்.

1950-ம் ஆண்டு, 389 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம்வகித்த 15 பெண்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பங்குகொண்டார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, மகளிர் மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த 15 பெண்களும் செயல்பட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகத் துணைபுரிந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிய ஓர் அறிமுகம் தரும் 'சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்!' எனும் அவள் விகடன் சிறப்புப் பார்வையை முழுமையாக வாசிக்க

******

பணிபுரியும் பெண்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள்

ஆயுள் காப்பீடு எடுப்பதன் முக்கிய அம்சம், பாலிசிதாரரின் எதிர்பாராத மரணம், பண ரீதியில் அன்பிற்கு உரியவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. வேலை பார்க்கும் பெண்கள் அவர்களின் வயது, பணி ஆகியவற்றுக்கேற்ப பொருத்தமான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பதுபோல், தங்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினரை நிதி விஷயத்தில் பாதுகாக்க முடியும்.  

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

உங்களுடைய பெயரில் அடமானக் கடனோ, வேறு  கடனோ இருக்குமென்றால், முதல் வேலையாக அந்தத் தொகைக்கு இணையாகக் கூடுதல் தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். அப்போதுதான் உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்,  அந்தச் சொத்தினைப் பாதுகாக்க முடியும்.

- தற்போதைய சூழலில், குடும்பத்தை வெற்றி கரமாக நடத்திச் செல்வதில் கணவருடன்  இணைந்தோ அல்லது தனித்தோ சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும், வங்கி வைப்புநிதி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதித் திட்டங்களில் பெண்கள் முதலீடு செய்யும் அளவுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதுகுறித்து விரிவான புரிதலை அளிக்கும் நாணயம் விகடன் இதழின் 'பணிபுரியும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டிய டேர்ம் பிளான்!' எனும் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க


*******

சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!

"எனக்கு 47 வயசு, என் மகளுக்கு 27 வயசு. போன வருஷம் பிப்ரவரி மாசம் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சோம்; பரீட்சை எழுதினோம். இப்போ ஜோடியா பாஸாகிட்டோம். எனக்குப் பொது சுகாதார மருந்தகத் துறையிலும், என் பொண்ணு தேன்மொழிக்கு இந்துசமய அறநிலையத்துறையிலும் வேலை கிடைச்சிருக்கு'' - தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சாந்தலெட்சுமியின் குரலில் மகிழ்வும் நெகிழ்வும். கணவரின் இழப்பு, மூன்று பெண் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மகளுக்குண்டான தன் கடமைகள் என்று அனைத்தையும் கடந்து சாந்தலெட்சுமி பெற்றிருக்கும் வெற்றி இது.

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

- தன்னம்பிக்கையூட்டும் இந்த அனுபவப் பகிர்வு, ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ளது. "சேர்ந்து படிச்சோம்! சேர்ந்து ஜெயிச்சோம்!'' எனும் அந்த நெகிழ்ச்சிக் கட்டுரையை முழுமையாக வாசிக்க 


*******

விகடன் ஃப்ளாஷ்பேக்: பெண்களின் உலகம்!

'பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு... கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு!' என்று ஆண்களுக்கு... பெண்களைக் கண்டால் பசியும் கவலையும் மறந்துபோவது, அவளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பதால்தான்!

சாலையில் எதிர்ப்படும் பெண்களை எல்லாம் ரசித்துவிட்டுச் செல்லும் ஆண்களுக்கு, பெண்ணின் மனம் புரியாத புதிர்தான். பெண் மனம் ஆழம்... அவ்வளவுதான் சமூகத்தின் புரிதல். அவளை நெருங்கி, அவள் மனதின் அடியாழத்தைப் புரிந்துகொண்டால், அவளை ரசிக்க முடியாது. மாறாக, அதிசயிக்கத் தோன்றும்!

மகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்!

ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் மொழியப்படாமல் இருக்கும் வாக்கியங்கள் எத்தனை என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

சுலபமாக ஒரு பெண்ணைக் குறித்து 'மொக்கை ஃபிகர்', 'சுமார் ஃபிகர்', 'சூப்பர் ஃபிகர்' என்று மதிப்பெண் அளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... நெருங்கி, பேசி, பழகி உணர்ந்த பிறகு, 'மொக்கை ஃபிகர்' என்று முன்னர் பட்டமளிக்கப்பட்ட பெண், உங்களுக்குப் பேரழகியாகத் தோன்றும் அதிசயம் அனுபவித்தது உண்டா? அவளது ஒரு புன்சிரிப்புக்காக, 'சாப்டியா?' என்ற ஒற்றை விசாரிப்புக்காக ஏங்கித் தவித்த அனுபவம் உண்டா? இறுக்கம் தவிர்த்து உருக இலகுவாக இருங்கள்... உணர்வீர்கள்!

யார் கண்டது? நீங்கள் தினமும் பார்க்கும் பெண்களில் ஒருத்தி கள்ளிப் பாலுக்குத் தப்பியவளாக இருக்கக்கூடும். அல்லது ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பு கதையாக, வீட்டில் சகோதரனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டவளாகவோ, கணவனால் துரத்தப்பட்டவளாகவோ, சுதந்திரம் வேண்டி கணவனை விவாகரத்து செய்தவளாகவோ, குடும்ப நிர்பந்தம் காரணமாக உயிருக்கு உயிராகக் காதலித்தவனை மறந்து, வீட்டில் பார்த்தவனை மணம் முடித்து, துயரத்தைச் சுமந்து வாழ்பவளாகவோ இருக்கக்கூடும். ஏழ்மை நசுக்க வாழ்வின் ரணங்களை அனுபவித்தவளாகவோ, அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' கதையில் வருவதுபோலத் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தோசைகளைச் சுட்ட அனுபவம் உள்ளவளாகவோ...  இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்!

- 23/03/2011 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான 'பெண்களின் உலகம்!' எனும் சிறப்புக் கட்டுரையின் ஆரம்பப் பகுதி இவை. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மார்ச் 8. இந்தக் காலக்கட்டத்தின் மாற்றங்களை உள்வாங்கியிருப்பீர்கள். அந்தப் பார்வையுடன் நீங்கள் முழுமையாகப் படித்து, ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய விகடன் ஃப்ளாஷ்பேக் பகுதி இது.

அடுத்த கட்டுரைக்கு