Published:Updated:

விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் உறவுக்கார வாண்டுகளைச் சமாளிக்க யோசனைகள்!

விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் உறவுக்கார வாண்டுகளைச் சமாளிக்க யோசனைகள்!

பசங்க எப்பவாவது போர் அடிக்குதுன்னு அடுத்த விளையாட்டுக்காக யோசனை பண்றப்ப நீங்க பண்ற சமையலுக்கு காய்கறி நறுக்க, தேங்காய் துருவல் திருகன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொருத்தரை அப்பாயின்ட் பண்ணி அந்த வேலையவே ஒரு கேம்  மாதிரி மாற்றிடுங்க. அப்புறம் பாருங்க, போட்டி போட்டுக்கிட்டு வேலை நடக்கும், உங்களுக்கும் சமையலும் சட்டுபுட்டுன்னு முடியும்!

விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் உறவுக்கார வாண்டுகளைச் சமாளிக்க யோசனைகள்!

பசங்க எப்பவாவது போர் அடிக்குதுன்னு அடுத்த விளையாட்டுக்காக யோசனை பண்றப்ப நீங்க பண்ற சமையலுக்கு காய்கறி நறுக்க, தேங்காய் துருவல் திருகன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொருத்தரை அப்பாயின்ட் பண்ணி அந்த வேலையவே ஒரு கேம்  மாதிரி மாற்றிடுங்க. அப்புறம் பாருங்க, போட்டி போட்டுக்கிட்டு வேலை நடக்கும், உங்களுக்கும் சமையலும் சட்டுபுட்டுன்னு முடியும்!

Published:Updated:
விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் உறவுக்கார வாண்டுகளைச் சமாளிக்க யோசனைகள்!

கோடை விடுமுறை தொடங்கியாச்சு! இனி அவங்கவங்க வீட்டு வாண்டுகளை உறவுக்காரங்க வீட்டுக்குத் தள்ளிவிடுறது வழக்கம்போல நடக்கும். அப்படி வரும் வாண்டுகளைச் சமாளிக்கிறது தனிக்கலை! அடிக்கடி நம் பிபி-யை எகிறவைப்பாங்க! ஹவுஸ் ஓனர்கிட்ட பிரச்னையில் மாட்டவைப்பாங்க! இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாம அவங்களைச் சமாளிக்கிறது தனிக்கலை! இரண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் முறையா? இந்த நேரம் பார்த்து அண்ணன் பசங்க, நாத்தனார் பசங்கன்னு கோடை விடுமுறைக்கு வந்து குவிஞ்சுட்டாங்களா. ஒண்ணும் பதற்றப்படாதீங்க. பொதுவா குழந்தைகள் கட்டாயத்தின்பேர்லதான் குளிப்பாங்க. அப்படி கட்டாயப் படுத்தாமல் விட்டாலே தண்ணீர் மிச்சம்தான்!

ஹவுஸ் ஓனர் கொஞ்சம் கெடுபிடியான மனிதரா இருக்காரா. அவர் கண்ணுல படுற மாதிரி வீட்டுக்கு வெளியில அத்தனை பேர் செருப்பையும் வைக்காதீங்க. அந்த எண்ணிக்கையை வச்சுத்தான் ஹவுஸ் ஓனர்கள் கவுன்ட் பண்றதே! துணி துவைச்சு காயப்போடுறப்பவும் எல்லாத்தையும் மொட்டைமாடியிலேயே காயப்போடாதீங்க. ஹவுஸ் ஓனர்களுக்கு இந்த விஷயத்துல ஐக்யூ லெவல் ஜாஸ்தி!

இப்பல்லாம் ஓடியாடி விளையாடுறதெல்லாம் மாறிடுச்சு. பப்ஜி கேம் மாதிரி குரூப்பா செல்போன்ல விளையாடுறதுதான் பசங்க பொழுதுபோக்கே. அதனால பீச்சு, சினிமான்னு கூட்டிட்டுப் போகணுமோன்னு செலவை நினைத்துப் பயப்பட வேண்டாம். செல்போனை கையில எடுத்தாங்கன்னா கண்டுக்காம விட்டுடுங்க. துணியில தூசிகூட ஒட்டாமல் நாள் முழுக்க உட்கார்ந்த இடத்திலிருந்தே விளையாடுவாங்க. தடதடன்னு ஓடுற சத்தம் கேட்டு ஹவுஸ் ஓனர் வார்னிங் பண்ண வர மாட்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஐபிஎல் சீஸன். டிவியில ஐபிஎல் பார்த்த வேகத்துல,  பசங்க எல்லாரும் தெருவுல இறங்கி கிரிக்கெட் விளையாடணும்னு ஆர்வமா இருப்பாங்க. தெருவுல இறங்கி விளையாடினால் பக்கத்து வீட்டுக் கண்ணாடி ஜன்னல், நிறுத்திவெச்சிருக்கிற பைக் மிரர்னு என்னத்தையாவது உடைச்சுட்டு அல்ரெடி பக்கத்து வீட்டோட இருக்கிற வாய்க்கால் வரப்புச் சண்டையைப் பெருசாக்க அதிக வாய்ப்பு இருக்குது. அதனால கிரிக்கெட் விளையாடணும்னா புக் கிரிக்கெட் விளையாடு, ஹேண்ட் கிரிக்கெட் விளையாடு அல்லது செல்போன்லயே விதவிதமான கிரிக்கெட் விளையாடுன்னு சாத்வீகத்துக்கு மாத்தவேண்டியது நம்ம பேச்சுத் திறமையிலதான் இருக்கு! சம்மர் டைம்கிறதால அடிக்கடி கரன்ட் கட்டாகிக் கடுப்பேத்தும். செல்போனிலும் டிவியிலும் பொழுதுபோக்கும் சிறுவர்களுக்கு செம எரிச்சலாகிவிடும். எனவே, முன்கூட்டியே பவர் பேங்குக்கு சார்ஜ் ஏற்றிவைப்பது நல்லது. 

அடிக்கடி பசங்களுக்குள்ள பஞ்சாயத்து நடக்கும். யாரு தப்பு, யாரு சரின்னு நாட்டாமை பண்ண வேண்டியிருக்கும். அடிவாங்கிட்டு அழுதுட்டே யாராவது ரிப்போர்ட் பண்ணிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல பிரஸ்மீட்ல பிரேமலதா படபடத்த மாதிரி டென்ஷனாகிடாதீங்க. மோடி மாதிரி எதையும் கண்டுக்காம கம்முன்னு இருங்க. அவங்களே சமாதானம் ஆகிப்பாங்க!

அத்தனை பேருக்கும் ஒருத்தரே சமைச்சுக்கொட்ட வேண்டியிருக்கேன்னு சலிச்சுக்காதீங்க. பசங்க எப்பவாவது போர் அடிக்குதுன்னு அடுத்த விளையாட்டுக்காக யோசனை

பண்றப்ப, நீங்க பண்ற சமையலுக்குக் காய்கறி நறுக்க, தேங்காய்த் திருகன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொருத்தரை அப்பாயின்ட் பண்ணி அந்த வேலையவே ஒரு கேம் மாதிரி மாற்றிடுங்க. அப்புறம் பாருங்க, போட்டிபோட்டுக்கிட்டு வேலை நடக்கும். சமையலும் சட்டுபுட்டுன்னு முடியும். அதேபோல சப்பாத்தி, பூரி பண்றப்ப அவங்கவங்களுக்கு இஷ்டப்பட்ட டிசைனை உருட்டித் தரச் சொல்லுங்க. க்ரியேட்டிவ்வாவும் இருக்கும் வேலையும் முடிஞ்சாப்ல இருக்கும். சமையலும் ஒரு கலைதானே!

சமையல் ஒரு கலைன்னு சொல்றப்பதான் உங்களுக்குள்ள இருக்கும் சமையல் ஆர்வம் வெளில எட்டிப்பார்க்குதா... விதவிதமா ஸ்நாக்ஸ், சமையல் அயிட்டம் செஞ்சுப்பார்க்கணும்னு உங்களுக்கு உள்ளுக்குள்ள ஆசை இருக்கும். ஆனா, செஞ்சது சரியில்லைன்னா வீட்டுக்காரர் நக்கலடிப்பாரோன்னு இம்புட்டு நாளா வெளியில காட்டாம இருந்திருப்பீங்க. இப்ப வந்திருக்கிற பசங்கள டெஸ்டிங் எலியா மாத்திட்டாப்போகுது! யூடியூப்லயோ, அவள் விகடன் மாதிரி புத்தகங்களிலோ வர்ற சமையல் குறிப்புகளை செஞ்சுபார்க்க சரியான நேரம் இதுதான். தினசரி ஒரு ரெசிப்பிய பசங்க விருப்பப்படியே செலக்ட் பண்ணி செஞ்சிடுங்க. அப்பதான் தப்பாப்போனாலும் பசங்க மேல பழியப் போட்டுடலாம். நீங்களும் நாலு ரெசிப்பி கத்துக்கலாம்! 

விடுமுறைக்கு பசங்க மட்டும்தான் என்ஜாய் பண்ணணுமா என்ன? நீங்களும் வேலை முடிஞ்சதும் பசங்களோடு பசங்களா இணைஞ்சிடுங்க. செல்போன் கேமை தூர வெச்சிட்டு, குட்டிக்குட்டிக் கதைகள், க்விஸ், அந்தாக்‌ஷரின்னு ஒவ்வொரு நாளும் வெரைட்டியா கலக்குங்க. பரமபதம், தாயம், பல்லாங்குழின்னு பழைய விளையாட்டுகளை பசங்களுக்கு அறிமுகப்படுத்துங்க. உங்க வீட்டுக்கு வந்ததுக்கு நாலு புது விளையாட்டு கத்துக்கிட்டதாகவும் இருக்கட்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism