Published:Updated:

''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' - ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay

''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' -  ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay
''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' - ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay

''ரெண்டு காலிலும் மூட்டு மாற்று ஆப்ரேஷன் பண்ணியிருக்கு. கூடவே பைபாஸ் சர்ஜரியும். இவ்வளவையும் தாண்டி தான் அம்மா உழைச்சிட்டு இருக்காங்க.''

கிரிக்கெட் டீம் கேப்டன், நீச்சல் வீராங்கனை என்று துள்ளித் திரிந்தது ஒரு காலம்.  தண்டுவடப் பிரச்னையால் கழுத்தின் கீழே செயலற்றுப் போனது வீல் சேரில் முடங்கியது ஒரு காலம். ஆனால், அம்மாவின் சொற்படி தன்னைப் போலவே தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பை ஆரம்பிக்கிறார் ப்ரீத்தி சீனிவாசன். தற்போது 38 வயதாகிற ப்ரீத்திக்கு கடந்த 20 வருடங்களாக அம்மாதான் எல்லாமே... அன்னையர் தினத்துக்காக உங்கள் அம்மா விஜயலஷ்மியைப் பற்றிச் சொல்லுங்கள் என்றோ. அம்மாவைப் பற்றி பேசுனும்னா, எப்ப வேணும்னாலும் எவ்வளவு நேரம்னாலும் பேசுவேன் என்றபடி பேச ஆரம்பித்தார் ப்ரீத்தி சீனிவாசன். 

''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' -  ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay

''என்னோட இன்ஸ்பிரேஷனா, மோட்டிவேஷனா மட்டுமல்லாமல் என் கை, கால்களும் அம்மா தான். அவங்க இல்லன்னா நான் இல்லைங்க. அவங்க நைட்ல தொடர்ந்து எட்டு மணி நேரம் தூங்கி இருபது வருஷமாயிடுச்சு. 4 மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது என்னை எழுப்பி பக்கவாட்டில் திருப்பி விடணும். இல்லன்னா, படுக்கைப் புண் வந்துடும். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிச்சு என்னை ரெஸ்ட் ரூம்ல விடுறது மாதிரியான உதவிகள் வரைக்கும் அம்மாதான் செஞ்சுக்கிட்டிருக்காங்க. டாக்டர்ஸ்கூட , 'இத்தனை வருஷமா நடமாட்டம் இல்லாம இருக்கீங்க. உங்களுக்கு யூரினரி டிராக் இன்ஃபெக்‌ஷன் வராம இருக்கிறதெல்லாம் மெடிக்கல் மிராக்கிள்'னு சொல்வாங்க. அந்த அதிசயத்துக்கு அம்மான்னு பேர். அந்த அளவுக்கு ஹைஜீன், கேர் எடுத்துக்கிறது அவங்க தான். என் உடம்புல எங்கே எண்ணெய் போடணும், எங்கே மருந்துப்போடணும்னு பார்த்துப் பார்த்து பண்ணிக்கிட்டிருக்கிறதாலதான் என் உடம்பு வாழ்ந்துக்கிட்டிருக்கு. என்னோட உடம்புக்கு உணர்ச்சியே கிடையாது; அதனால நகர முடியாது. அதுக்கு வலிக்கிதுனாகூட வேர்த்துக் கொட்டும், அவ்வளவுதான்.  எங்க வலிக்கிதுன்னுகூட எனக்கு சொல்லத் தெரியாது. எங்கம்மா மட்டும் இல்லைன்னா, வீல் சேரில் முடங்கின ஒண்ணு ரெண்டு வருஷத்துல நான் இருந்திருப்பேனான்னுக்கூட  தெரியலை.  என்னோட இந்த நிலைமையிலேயும், என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களுக்காக சோல் ஃப்ரீ ஆரம்பிச்சதுக்குக் காரணம் அம்மா தான். நான் காலேஜ் படிக்கணும்னு முயற்சிப் பண்ணப்போ, 'எங்க காலேஜில் லிஃப்ட் இல்ல'; 'நீங்க எல்லாம் ஏன் படிக்க வர்றீங்க'ன்னு கேட்டாங்க.ஆனா, இப்ப நான் சென்னை ஐ.ஐ.டி.யில் பிஹெச்டி பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்கு ஊக்கம் கொடுத்ததும் அம்மா தான். சக்கர நாற்காலியில நான் உட்கார்ந்துட்டதுக்கு அப்புறம் அப்பாவும் அம்மாவும் சேர்ந்துப் பார்த்துக்கிட்டாங்க. அப்பா தவறினதுக்குப் பிறகு, அம்மா மட்டும்தான் கடந்த 12 வருஷமா என்னை பார்த்துக்கிட்டிருக்காங்க. எனக்கு 90 வயசுல ஒரு பாட்டி இருக்காங்க. அவங்களையும் அம்மாதான் பார்த்துக்கிறாங்க. வீட்டு வேலை, வெளி வேலை, என்னோட வேலை, சோல் ஃப்ரீயோட வேலை, சமையல் வேலைன்னு பல பேரோட வேலையைப் பார்த்துக்கிறாங்க. ஒரு 66 வயசு மனுஷியால இவ்வளவு வேலையையும் பார்க்க முடியுமான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும்'' என்றவர் தொடர்ந்தார்.  

''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' -  ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay

''நான் மூணு வயசுல ஸ்விம்மிங் கத்துக்கப் போனேன். நாலு வயசுல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். எங்கம்மா கட்டுப்பாடு விதிச்சிருந்தா நான் யாருக்குமே உதவாம போயிருப்பேன்.   

உங்களுக்கெல்லாம் ஒண்ணு தெரியுமா?  போன ஜனவரி மாசம்,  எங்கம்மாவோட வலது காலில் மூட்டு மாற்று ஆபரேஷன் நடந்துச்சு. இப்ப சமீபத்துல இடது காலிலும் மூட்டு மாற்று ஆபரேஷன் செஞ்சாங்க. இதைத் தவிர, அம்மாவுக்கு பைபாஸ் சர்ஜரியும் நடந்திருக்கு. கை ஃபுல்லா கிழிச்சு நரம்பெடுத்து, கால் ஃபுல்லா கிழிச்சு நரம்பெடுத்து இந்த ஆபரேஷனை செஞ்சிருக்காங்க. அவ்வளவையும் தாங்கிக்கிட்டு ஓயாம உழைச்சுக்கிட்டிருக்காங்க.

''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' -  ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay

நான் அம்மாகிட்டே அடிக்கடி சொல்வேன், 'உனக்கு எதாவது ஆகப் போகுதுன்னு தெரிஞ்சுட்டா அதுக்கு முன்னாடி என் வாழ்க்கையை முடிச்சிடும்மா'ன்னு சொல்லுவேன். என்னோட பெண் தெய்வம் அம்மாதான்'' - ப்ரீத்தி குரல் அன்பில் கரைந்து கண்ணீராகப் பெருக்கெடுக்கிறது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு