Published:Updated:

வாசிப்பு முக்கியம் பாஸ்! - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan

வாசிப்பு முக்கியம் பாஸ்! - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan
வாசிப்பு முக்கியம் பாஸ்! - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan

டீக்கடைகளுக்கு அடுத்தபடியாக அரசியல் பேசும் இடங்களில் சலூன் கடையும் ஒன்று. சினிமா நடிகர்கள் படங்கள், அரசியல் விவாதம் ஏதுமின்றி, தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, சலூன் கடைக்குள் நூலகத்தை அமைத்துள்ளார், தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் மாரியப்பன்.

வாசிப்பு முக்கியம் பாஸ்! - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ளது, இவரது லைப்ரரி சலூன். கடைக்குள் நாளிதழ்கள், வார இதழ்களுடன் கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், பண்பாடு, நாவல் ஆகியவற்றில் சுமார் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாரியப்பன், தன் உழைப்பில் ஒதுக்கிய பணத்தில் வாங்கியவை. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வமுடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

வாசிப்பு முக்கியம் பாஸ்! - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan

சினிமா பாடல்கள் சத்தமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சத்தம் மட்டுமே கேட்கிறது. தலைக்குமேல் வளர்ந்துள்ள முடி திருத்தப்படும் போது, தலைக்குள்ளேயும் அறிவு திருத்தப்படுகிறது. செல்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் மூழ்கிக்கிடக்கும் தன் வாடிக்கையாளர்களுக்காக நூலகத்தைத் தொடங்கியதாகக் கூறுகிறார், மாரியப்பன். இதைக் கேள்விப்பட்டு, கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதுடன், தங்கள் கைவசமுள்ள புத்தகங்களையும் நூலகத்திற்காகக் கொடுத்துச் செல்கிறார்கள் பல நல்ல உள்ளம் கொண்டவர்கள்.