Published:Updated:

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி
"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி

நாளுக்கு நாள் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் உலகில் இன்னும் பழைமை மாறாது வாழ்கின்றனர் குறிசொல்லும் பழங்குடிச் சமூகத்தினர். தங்கள் குலதெய்வமான ஜக்கம்மாவின் உத்தரவு பெற்று ஓர் ஊரில் ஆறுமாதம் தங்கும் இவர்கள், அப்போது அந்த ஊர் மக்களுக்குக் குறி சொல்கிறார்கள். வாழ்வை எண்ணிப் பயப்படுகிறவர்களிடம், ‘இனி, உன் வாழ்க்கை ஜொலிக்கும், நல்லாயிருப்ப!’ என்ற நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும்விதமாகக் குறிசொல்லி அவர்களுக்குள் நம்பிக்கை விதைகளை விதைக்கிறார்கள். மதுரை உசிலம்பட்டி எல்லைப்புறத்தில் ரயில்வே பாதையருகே கூடாரங்கள் அமைத்துத் தங்கியிருக்கும் குறிசொல்லிகளைச் சென்று சந்தித்தோம்.   

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி


“ஐதிகப்படி ஆறுமாசத்துக்கு ஒருக்க ஊர்மாறித் தங்குவோம். இது எங்க குலவழக்கம். எங்க குல தெய்வம் ஜக்கம்மா வாக்குசொன்னாத்தான் நாங்க இப்படி வருவோம்” என்கிறார், ஜக்கம்மா கோயில் பூசாரி அந்தோணி. 

அந்தோணி என்னும் அவர் பெயரைக் கேட்டதுமே, ஆச்சர்யமடைந்தோம். 

" அது ஒண்ணுமில்லைங்க, என் அப்பாவும் அம்மாவும் குடும்பத்தோடு குறிசொல்றதுக்காக ஊர் ஊராப் போய்கிட்டிருந்தாங்க. அப்ப, ஒரு நாள் நல்ல மழை. பக்கத்துல இருந்த தேவாலயத்துல போய் தங்கியிருக்காங்க. அப்போ, தேவாலயத்துலயே நான் பொறந்ததால, அந்த சாமி பேரையே வச்சிட்டாங்க. சாமி எதுவானா என்னங்க, எல்லாச் சாமியும் சனங்களைக் காக்க வந்ததுதான" என்றார் பூசாரி அந்தோணி. 
இவர்கள் வைத்திருக்கும், தற்காலிகமாக ஏற்படுத்தியிருக்கும் ஜக்கம்மா கோயிலில் வழிபாட்டுக்கென உருவம் ஏதுமில்லை; ஓலைப்பெட்டியும், மஞ்சள் பாவாடையும் மட்டுமே ஜக்கமாவின் வடிவம். 

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி

தினமும், காலையில் ஊருக்குள் சென்று குறிசொல்லிவிட்டு வருகிறார்கள். மதியம், ஓய்வு. இரவுகளில் சில ஆண்கள் மட்டும் சென்று, குறிப்பாக ஜக்கம்மா காட்டும் சில வீடுகளுக்கு மட்டும் சென்று குறிசொல்லுகின்றனர். 

“ராத்திரி ஒரு வீட்டுலபோய் குறிசொன்னா, ‘நேத்து எங்க வீட்டுக்கு வந்து என்னென்ன சொன்னீங்க அய்யா’ன்னு மறுநாள் வந்து கேட்பாங்க. கேட்டுட்டு மனசுக்குத் தக்கன காசு கொடுப்பாங்க” என்கிறார், அந்தோணி. 

எல்லோரும் அப்படிக் காசுகொடுத்துவிடுவதில்லை. சிலர், இதைப் பிச்சையெடுப்பதாகச் சொல்லிக் கடுகடுக்கிறார்கள். ஆனாலும், நம்பிக்கேட்கும் பலருக்காகத் தொடர்ந்து குறிசொல்லுகிறார்கள் இவர்கள். 

“எங்க வாக்குல, ரெண்டு மெய்யும் இருக்கும், ரெண்டு பொய்யும் இருக்குமுங்க. எப்பேர்பட்ட சோசியக்காரரா இருந்தாலும் ஒருத்தரோட ஜாதகத்தைச் சரியா, விளாவாரியா சொல்லிடவே முடியாது” என வெள்ளந்தியாக உண்மையைப் போட்டுடைத்தார் அந்தோணி.

வாக்கு சொல்வதைப் போலவே முத்துக்கள் போட்டும் குறிசொல்கின்றனர். ஒவ்வொரு எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பலன். மொத்த முத்துக்களும் கவிழ்ந்துவிட்டால், கேடுகாலம். ஆனால் அவற்றையும் முழுமையாய்ச் சொல்லி பயமுறுத்தாமல், நம்பிக்கை தரும் சொற்களைச் சொல்லி ' நல்லதே நடக்கவேண்டும்' என்று மனதார ஜக்கம்மாவையும் வேண்டிக்கொள்வோம் என்கிறார் அந்தோணி

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி

அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி திடீரெனக் கதறி அழத் தொடங்கினாள். தாய் அவளை என்ன ஏதென்று பார்த்து, ஒன்றும் விளங்காததால் அந்தோணியிடம் கூட்டிவந்தாள். அவர் சிறுமியை நிற்கவைத்து கொஞ்சம் சாம்பலை அள்ளி வயிற்றில் அப்பித் தேய்த்து, மேலிருந்து கீழாக  நீவிவிட்டார். விளையாடியதில் குடல் சுற்றிக்கொண்டு, வலி தந்திருக்கிறது போலும். சில நொடிகளில் குணமாகிச் சிரித்தாள், சிறுமி. இதுபோன்ற முதலுதவிகளை பூசாரியே செய்துவிடுகிறார். தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவமனையை அணுகுகிறார்கள். 

அந்தோணி, ஓர் இதய நோயாளி.

"5 வருசத்துக்கு முன்ன இருதய அடைப்பு வந்துச்சு. அப்புறம் கொஞ்ச காலம் தொழிலுக்குப் போகலை. உடம்பு முடியாதப்போவெல்லாம், படுத்துக்கிடுவேன். இந்தச் சின்னப் பிள்ளைங்கதான், 'நீ இரு, தாத்தா. நாங்க போயிட்டு காசு வாங்கிட்டு வர்றோம்’ன்னு சொல்லி தெருத் தெருவாப் போயி, வீடுவீடா நின்னு காசுகேட்டு வாங்கிட்டு வருவாங்க. வாங்கிட்டுவந்த காசை ‘இந்தா, தாத்தா’ன்னு அதுங்க  கொடுக்கும்போது என் கண்ணெல்லாம் கலங்கிடும்” எனச் சொல்லும்போதே உடைந்தே போனார் அந்தோணி.

குழந்தைகள் கூடாரங்களுக்கு வெளியே உள்ள திடலில் குதூகலமாக விளையாடிக்கொண்டிருந்தன.

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி

" இப்பவும், குழந்தைகளெல்லாம் காசு வாங்கப் போவாங்களா ?" எனக் கேட்டோம்.

வேகமாகத் தலையசைத்து மறுத்த அந்தோணி,

“இப்ப லீவு டயம்ல! அதான் இங்க கெடக்குதுங்க. பள்ளிக்கூடம் தெறந்துட்டதுனா ஊருல கொண்டு விட்டிருவோம். நாங்க திரும்ப ஊருக்குப் போற வரைக்கும் எங்க உறவுக்காரங்க பிள்ளைகளை வச்சுப் பார்த்துப்பாங்க. என்ன இருந்தாலும் படிப்புத்தான் நாளைக்கு அதுங்களுக்கு சொத்து” என்கிறார் அந்தோணி.
 

அவர் அருகேயே நின்றிருந்த 20 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர்
 

“நான் 9-வது வரைக்கும் படிச்சேன். அப்புறம் மண்டையில ஏறலை. அந்தோணி அய்யா நிறைய புத்தி சொன்னாரு. அடிச்சுக் கூடப் பார்த்தாரு. ஒன்னும் ஆகலை. அதான், நானும் குறிசொல்ல வந்துட்டேன்” என்றார். 

"நாங்க பிச்சையெடுக்கல... ஜக்கம்மா வாக்க சொல்லித்தான் கூலிவாங்குறோம்" - குறிசொல்லும் அந்தோணி


“பிள்ளைங்க எதுவும் பள்ளிக்கூடம் தாண்ட மாட்டிங்குதுங்க. எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது...  படிப்புதானே அதுங்களை மேல கொண்டு வரும். எப்படியாச்சும் இந்த புள்ளைங்க எல்லாம் காலேசுக்குப் போய் படிச்சுப் பெரியாளா வரணும்ன்னு தெனமும் ஜக்கம்மாவைக் கும்பிட்டுட்டுதான் இருக்கேன். எங்க பயலுக ரெண்டு மூணு பேரு, மத்த பயலுகளோட சேர்ந்து தண்ணி சிகரெட்டுன்னு பழகிட்டு தெனமும் தொல்லைபண்றாங்க. மருந்து மாத்திரையெல்லாம் கூடக் கொடுத்துப் பார்த்திட்டேன். ஒண்ணும் பிரயோஜனமில்லை. இவனுங்களை இந்தப் பழக்கத்திலிருந்து மீட்க யாரும் உதவுனா நல்லா இருக்கும்” என்று விரக்தியாடு பேசுகிறார், அந்தோணி. 

“எல்லா சாதிக்காரவுகளும் எங்களை மதிப்பா நடத்துவாங்க. எங்க வாயில விழுந்திடக்கூடாதுன்னும் பயப்படுவாங்க. ஆனா, அதெல்லாம் இனி உதவாதுங்க. இனிமேல் எங்க பிள்ளைங்களோட படிப்புக்கு எந்தத் தடையும் வந்திடக்கூடாது. அவ்வளவுதான் எங்க தேவை ” என்கிறார், அந்தோணி. 

இவர்களது வாழ்க்கையே இவ்வளவு போராட்டமாய் இருக்க, இப்போது வாழும் இடமும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. மதுரை - போடி அகலப்பாதை பணிகள் நடப்பதால் இடத்தைக் காலிசெய்யச்சொல்லி அதிகாரிகள் அழுத்தம் தருவதாகக் கூறுகின்றனர். 

“பரம்பரைப் பரம்பரையா இங்கதானுங்க குலத்தொழிலுக்காக வந்து தங்குவோம். பழைய ஸ்டேசன் இருந்தப்போவெல்லாம் நாங்க இங்கதான் இருந்தோம். இப்போ எங்களை விரட்டுறது நியாயமா? எங்க கோரிக்கையை அதிகாரிகளும் அரசாங்கமும் மதிக்கணும்” என வேண்டுகோள் விடுக்கிறார் அவர்கள் இன மக்களின் சார்பாக அந்தோணி. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு