Published:Updated:

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!
வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

ரு வீட்டின் தோற்றம் முழுமையடைவதில், நிறங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வண்ணங்கள், நம் வாழ்நாளின் முக்கியக் கதாபாத்திரமாகவே திகழ்கின்றன. யோசிக்கும் திறன், எதிர்வினை மாற்றங்கள் போன்ற செயல்களுக்கு நிறங்களின் பங்கு முக்கியமானது. ஒவ்வொருவரின் குணங்களுக்கும் நிறங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கின்றன. அந்த வகையில், உங்கள் வீட்டுக்குச் சரியான நிறங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்க்கலாம்.

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

புதுப்பிக்கவுள்ள வீடாகட்டும், புதிதாகக் கட்டப்பட்ட வீடாகட்டும், ஒரு கோட் `பெயின்டிங்' அந்த வீட்டின் பொலிவை மெருகேற்றிவிடும். வீட்டுக்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பு, பல காரணிகளை ஆராய்வது அவசியம். எப்போதும் `தரம்' எனும் ஒற்றை விஷயத்தை மட்டுமே பார்த்து `பெயின்ட்' வாங்கக் கூடாது. வீட்டின் அழகியலோடு சுவர்களைப் பாதுகாக்க உதவும் பண்புகளைப் பார்ப்பதும் அவசியம். லட்சக்கணக்கான வண்ணங்களில் சரியான ஷேடுகளைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்றாலும், வீட்டில் வசிக்கப்போகும் நபர்களின் விருப்பத்தையும் சரியாகக் கையாள்வது சவாலான ஒன்றுதான்.

தற்போதுள்ள காலகட்டத்தில் வெளிர் நிற ஷேடுகளைத்தான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். முன்பெல்லாம் அடர்ந்த மற்றும் பிரைட் நிறங்களில் வீட்டை அழகுபடுத்தினர். ஆனால் இப்போது, `டார்க்' ஷேடுகள் வெளிப்புறச் சுவர்களுக்கானது என்றும், `லைட்' அல்லது வெளிர் நிறங்கள் உள்பகுதிகளுக்குச் சரியானவை என்கிற பிம்பமும் தோன்றிருக்கிறது. அதிலும் சாம்பல், பீஜ், வெளிர் மஞ்சள், பச்சை, நீலம் போன்ற லைட் ஷேடு நிறங்கள் மட்டுமே பெரும்பாலானோரின் சாய்ஸ்.

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

ஒவ்வோர் அறைக்கான நிறத்தைத் தேர்வுசெய்யும்போது, கவனமாக இருப்பது அவசியம். நமக்குப் பிடித்த நிறத்தைவிட நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் நிறங்களைத் தேர்வுசெய்வதே சிறந்தது. அடர்ந்த நிறங்கள், அறையை முற்றிலும் இருளாக்கும். அதிலும், சிறியளவு அறைகளுக்கு அடர்ந்த நிறங்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். இது அறையை மேலும் சிறிதாகக் காண்பிக்கும். வெளிர் நிறங்கள், எப்போதும் அறையின் அளவை நன்கு விரிவுபடுத்திக் காண்பிக்கும்.

பொதுவாக, வீட்டின் உட்புறத்தில் தீட்டப்படும் பெயின்ட்களை டிஸ்டெம்பர் (Distemper), லஸ்டர் (Luster), எமல்ஷன் (Emulsion) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து, வீட்டை வெள்ளையடிக்கும் முறை டிஸ்டெம்பர். தண்ணீரில் கலக்கப்படாத எண்ணெய் சார்ந்த பெயின்ட், லஸ்டர். இது காய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் மற்றும் அதிகப்படியான வாசனையையும் கொடுக்கும். இருப்பதிலேயே, தண்ணீரைச் சார்ந்த எமல்ஷன்தான் பெஸ்ட் சாய்ஸ். மழைக்காலத்தின்போது பூஞ்சை பெருக்கத்தைத் தடுத்து நீண்ட நாள் அழியாமல் இருக்கும் பெயின்ட் வகை இதுவே.

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

வீடு மொத்தத்தையும் ஒரே நிறத்தில் நிரப்புவது, பழைய ஃபேஷன். பொது அறை முதல் சமையலறை வரை வித்தியாச நிறங்களால் அழகுபடுத்துவதுதான் இன்றைய இளைஞர்களின் விருப்பம். அந்த வகையில், விருந்தினர் நுழைந்ததும் நோட்டமிடும் லிவிங் ஏரியாவை வெளிர் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணங்களில் நிரப்புதன்மூலம் மற்றவர்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கலாம். இது, எந்த வகையான கட்டமைப்புக்கும் பொருந்தும்.

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

தங்களுக்கென தனிப்பட்ட உலகை உள்ளடக்கிய படுக்கை அறைக்கு, நிம்மதியாக ஓய்வெடுக்கவும், மனம்விட்டுப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் உதவும் நிறங்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில், லாவண்டர், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் லைட் ஷேடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இயற்கை விரும்பிகள் பச்சை அல்லது நீல நிறங்களையும், புதிதாக திருமணமானவர்கள் பிங்க் நிறத்தையும், அமைதியை விரும்புவோர் லாவண்டர் நிறத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

வண்ணங்களால் அழகாகும் வீடு... சரியான நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்!

எப்போதும் ஒரு பெயின்டின் நிறத்தைத் தேர்வுசெய்வதற்கு முன், இயற்கை வெளிச்சம் எந்த அளவுக்கு அறையில் உள்ளது என்பதைப் பார்ப்பதும் அவசியம். வெப்பம் அதிகமுள்ள சமையலறைக்கு, மனநிலையைக் கட்டுப்படுத்தும் சரியான நிறத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த வகையில் வெள்ளை அல்லது சாம்பல் நிற ஷேடுகள்தான் சரியான சாய்ஸ். இது மனநிலையை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. வெளிர் பிரவுன் மற்றும் மஞ்சள் நிறங்களை, பூஜை அறை அல்லது வயதானவர்கள் தங்கும் அறைகளுக்குத் தேர்வுசெய்யலாம். வீட்டின் உட்கூரையின் நிறம், சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும் நிறத்துக்கு எதிர்மறையாக நிரப்புவதே இப்போதைய ட்ரெண்டு.

வீட்டுக்குப் பயன்படுத்தும் நிறங்களுக்கு ஏற்றபடி, ஃபர்னிச்சர் மற்றும் அலங்காரப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு