Published:Updated:

இந்த வீக்-எண்டை உற்சாகமாக்கும் 6 டிப்ஸ்! #WeekEndRecharge

ஒரே வீக் எண்ட்தான். ஆனால், அந்த நாள் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அதை எப்படி சுவாரஸ்யமாக்கலாம்னு நாங்க வழிகாட்டுறோம்.

1
ஒய்வு

இந்த வாரம் நாம இங்க இருக்கணும், இங்க போகணும், இதெல்லாம் செய்யணும் என வீக் எண்டை லிஸ்ட் போட்டு அனுபவிப்பவர்கள் ஒருபக்கம்... 9 மணிக்கு பெட் காபியோட எந்திருச்சு, அப்டியே 2 மணிக்கு திரும்ப ஒரு குட்டித்தூக்கம் போட்டு, திரும்ப சாயங்காலம் எந்திருச்சு `இந்த சண்டே ரொம்ப போரடிக்குதே!' எனப் புலம்புபவர்கள் ஒருபக்கம். இப்படி, ஒரே வீக் எண்ட்தான். ஆனால், அந்த நாள் எல்லோருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை.

அந்த நாளை சுவாரஸ்யமாக்குவதும், சாதாரணமாக கடப்பதும் கைகளில்தான் இருக்கிறது. அப்படி வீக் எண்டை சுவாரஸ்யமாக்க, விகடனின் சில பரிந்துரைகள் இங்கே...

2
ஆர்மி க்ராலிங்

திரும்பவும் தவழலாமா?

இதுவரைக்கும் நீங்கள் தினமும் எந்த உடற்பயிற்சியும் செய்யாமலே கூட இருந்திருக்கலாம். அதை இந்த எளிய தவழ்தல் பயிற்சியின் மூலம் மாற்றலாம்.

``உடலை வலுவாக்கப் புதிய புதிய ஃபிட்னெஸ்முறைகளும் கருவிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தில் நம்மையும் அறியாமல் செய்த பயிற்சி ஒன்று உண்டு. அதுதான் தவழ்தல். குழந்தை தவழ்வதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தவழ்தல் பயிற்சிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. இயந்திரங்கள் இன்றி நம் உடல் எடையை மட்டுமேகொண்டு நம்மை வலுவாக்கும் பயிற்சிகள் இவை. உடலின் முக்கிய தசைகளை (Core muscles) வலுவாக்கும் இந்தப் பயிற்சிகள், உடலின் சமநிலையை மேம்படுத்தி சிறந்த நெகிழ்வுத் தன்மையைத் தருகின்றன." என்கிறார் விளையாட்டு மருத்துவத்துறை பேராசிரியர் ஃபிட்னெஸ்கே.ஏ.தியாகராஜன்.

இந்த எளிமையான பயிற்சி குறித்த விரிவான வழிகாட்டலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

3
Travel

பிடித்த ஊருக்குப் பயணப்படுங்கள்!

``பயணங்கள் கொடுக்கும் அனுபவங்கள், அதி அற்புதமானவை. பேருந்தில் ஜன்னலோர இருக்கை, இசைஞானியின் பாடல், மெல்லிய சாரல், மண்வாசனை அனைத்தும் ஒருசேர வாய்ப்பது வரம். உடல் நோய் முதல் உளநோய் வரை குணப்படுத்தும் சக்தி பயணங்களுக்கு உண்டு. பல்வேறு நாடுகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தவையும், பல்வேறு கலாசாரங்களை உள்வாங்க வழிகாட்டியாக இருப்பவையும் பயணங்களே. வாஸ்கோடகாமா, கொலம்பஸ் எனப் பலரும் புதிய இடங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தப் பயணங்களே உதவின. நாடோடியாகத் திரிந்த மனித சமுதாயம், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்றதற்குக் காரணமும் பயணங்களே!" மருத்துவர் வி.விக்ரம்குமார்.,MD(S)

இப்படி நீங்கள் ஏன் பயணம் செய்யவேண்டும் என்பதை மருத்துவ ரீதியாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் பண்ணுங்க.

இதை ஏன் படிக்கணும்னு கேக்குறீங்களா? விஷயம் அடுத்த பத்தில இருக்கு.

4
வால்பாறை

எங்க டூர் போறதுன்னுதானே யோசிக்கிறீங்க?! ஒரு நிமிஷம்

ஏன் பயணம் போகணும்னு இப்போ தெரிஞ்சிருக்கும். அடுத்து எங்க போகலாம்னுதான யோசிக்கிறீங்க?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருக்கும் பல்வேறு சிறப்புகள் கொண்ட சுற்றுலாத் தளங்களை இங்க பட்டியலிட்டிருக்கோம். எல்லாம் படிங்க... மனசு எங்க சொல்லுதோ, அங்க கிளம்பலாம்!

5
chicken

மதியம் செம விருந்து இருக்கு..!

போட்டோ பார்க்கும்போதே எச்சில் நாக்கில் ஊறுதா? இதுமாதிரி சில சுவையான நான் வெஜ் ரெசிபிக்களை உங்களுக்காக தயார் பண்ணி வச்சிருக்கோம். உங்க மதியம் மெனுல இதையும் சேர்த்து சமைச்ச, செம விருந்தா இருக்கும்..!

அந்த ரெசிபிக்களை படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க.

6
காளிதாஸ் திரைப்படத்தில் பரத்

சினிமாவும் இருக்கு..!

வீக்கெண்ட்ல பலரது லிஸ்ட்லயும் இருக்குற ஒரு பொழுதுபோக்கு அம்சம், சினிமா. இந்த வாரம் என்னென்ன படம்லாம் ரிலீஸ் ஆயிருக்கு, அதுல என்ன ஸ்பெஷல்? விரிவாக இங்க தெரிஞ்சுக்கலாம் வாங்க.

7
Car

காரை கொஞ்சம் அப்டேட் பண்ணலாம்!

உங்க காரை ரொம்பவே நேசிக்குறீங்களா? இந்த வீக்கெண்ட் அதை இன்னும் மெருகேத்தலாம். அதிக வசதிகளோடு அப்டேட் செய்யலாம். அதற்கு வழிகாட்டுது இந்தக் கட்டுரை.

அடுத்த கட்டுரைக்கு