Published:Updated:

qwerty, asdfgh, anbae diana... இப்படி பாஸ்வேர்டு எப்படியெல்லாம் யோசிச்சிருக்கீங்க? #EvolutionOfPassword

qwerty, asdfgh, anbae diana... இப்படி பாஸ்வேர்டு எப்படியெல்லாம்  யோசிச்சிருக்கீங்க? #EvolutionOfPassword
qwerty, asdfgh, anbae diana... இப்படி பாஸ்வேர்டு எப்படியெல்லாம் யோசிச்சிருக்கீங்க? #EvolutionOfPassword

நபர்1: எல்.ஐ.சி பில்டிங்கை உரிச்சுதான் சாப்பிடணும்... 
நபர்2: வாழப்பழத்துக்கு 14 மாடி” 

80கள்ல பொறந்த காமெடி கஜேந்திரன்கள் எல்லோருக்குமே இது தெரிஞ்சிருக்கும். ஒரு டி.வி நாடகத்துல வந்த இந்த டயலாக்தான் அப்போதைய வைரல். சென்னைக்குக் கடத்தல் பொட்டியோட வரும் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருத்தன், அதை இன்னொரு டூமாங்கோலிகிட்ட கைமாத்தி விடணும். அது வாட்ஸப்போ, வைபரோ இல்லாத டைம். அவங்க கைவசம் இருந்த ஒரே டெக்னிக் “பாஸ்வேர்டு”. மேலே சொன்ன எல்.ஐ.சி தான் லாக் இன் ஐடி. வாழைப்பழத்துக்கு 14 மாடின்றது அதுக்குப் பாஸ்வேர்டு. இரண்டும் மேட்ச் ஆனா, டீலிங் அரங்கேறும். பொட்டி கைமாறும். 

அந்த ஒரு பாஸ்வேர்டு பத்திதான் அப்போ எல்லோருக்கும் தெரியும். இப்ப ஒவ்வொருத்தர்கிட்டயும் மறந்து போகுற அளவுக்கு இருக்கு. ஆஃபீஸ்ல 10, பெர்சனலுக்கு 8, வீட்டுக்குள்ளயே நாலுன்னு எகிறி கிடக்கு நம்பர் ஆஃ பாஸ்வேர்ட்ஸ். பாஸ்வேர்டெல்லாம் ஒரு எக்ஸெல் ஃபைல்ல போட்டு, அதுக்கு ஒரு பாஸ்வேர்டு போட்டு வைக்கிற கதையெல்லாம் இப்ப சகஜம். 

பாஸ்வேர்டுடைய பரிணாம வளர்ச்சியை ஒரு படமாவே எடுக்கலாம். ஆரம்பத்துல ”ragav"ன்னு வச்சாலே ஓக்கே சொல்லிடும் சிஸ்டம். அடுத்தக்கட்டமா, உன் பேரு குட்டியா இருக்கேன்னு தலை சொரிஞ்சது. முழுப்பேரை வச்சா நல்லதுதான்னு “iamragavan" ஆக்கினோம். ம்ஹூம். கூட எதாவது நம்பர் சேருடா டோமர்ன்னு செக்யூரிட்டியை கூட்டினாங்க. சரின்னு iamragavan89ன்னு பொறந்த வருஷத்த சேர்த்தோம். கொஞ்ச நாள் போனதும் கேப்ஸ்லாக் விஷயம் அவங்களுக்கு ஞாபகத்து வர, அதை மாத்தினாங்க. சரின்னு, “IAMragavan89" ஆக்கினோம். அதுக்கு அப்புறம், கீபோர்டுல தண்டத்துக்கு ஸ்பெஷல் கேரக்டர்ஸ் இருக்கேன்னு அதுக்கும் ஸ்பேஸ் கொடுக்கச் சொன்னாங்க. “IAMragavan$89"ன்னு டீ சர்ட் ரேட்டு மாதிரி மாத்தினோம். இப்ப கடைசியா, மாசத்துக்கு ஒரு தடவ பாஸ்வேர்ட மாத்தணும் பாஸ்னு ஒரு ஆர்டினன்ஸ போட்டுட்டாங்க.அத்தனை பேருக்கு எங்கடா போவோம்? 

பாஸ்வேர்டுல பேருன்னதும் காதலிகள் ஞாபகத்துக்கு வர்றாங்க. லவ் பண்ண பொண்ணோட பேர பச்ச குத்தினதெல்லாம் காலாவதியாகி பாஸ்வேர்ட வைக்கிறதா மாறி 2 ஜெனெரேஷன் ஆச்சு. “உன் பாஸ்வேர்டை சொல். உன் கடைசி கேர்ள் ஃப்ரெண்ட் பேரைச் சொல்கிறேன்”ன்னு ட்விட்டர்ல அடிச்சு கெளப்பறாங்க ஃபிலாசபி பிரபாகரன்கள். “லவ்வுக்குப் பாஸ்போர்ட்டா வந்தவ.. மெயிலுக்குப் பாஸ்வேர்டா மாறிட்டா”ன்னு மதன் கார்க்கி பாட்டு எழுத வேண்டியது மட்டும்தான் பாக்கி. ஒரு சில கில்லாடிகள் பாஸ்வேர்டை கேட்டாலே பத்திட்டு வரும். “RanjiNithyaSindhuLekhaAll91". ஒருத்தன் பர்ஸ பாத்துப் பொறாமைப்படலாம். பாஸ்வேர்டு பாத்துலாமா பொறாமைப்பட முடியும்? 

சில பேங்குக்குப் போறதை நினைச்சாலே பக்கு பக்குன்னு இருக்கும் நமக்கு. மல்லையாவே கிளம்பி வந்து வாங்கின கடனை அடைக்குறேன்னு சொன்னா கூட “சாரி. லன்ச் டைம். அப்புறம் வாங்க”ன்னு சொல்ற டிஸிபிளின் டிஸோசாக்கள் வாழுற உலகம் அது. ஆனால், அந்தப் பேங்க்கோட ஆன்லைன் சைட், நிஜத்துக்கே சவால் விடுற மாதிரி இருக்கிறதுதான் ஹைலைட். ஞாபகத்துல இருகிற பாஸ்வேர்டை டைப் பண்ணுனா “இது போன மாசம். நான் கேட்கிறது இந்த மாசம்”னு சொல்லும். Forget password கொடுக்கலாம்ன்னா கண்ணுல தண்ணி வர்ற எமோஜி கணக்கா சிரிக்கும். பாஸ்வேர்டை மறந்துட்டா கூடப் பிரான்சுக்கு வாங்கன்னு சொல்வாங்க. பேங்குக்குப் போனா ஃபார்ம் ஃபில் பண்ணுன்னு சொல்வாங்க. ஆன்லைன் அக்கவுண்ட் ஆக்ஸஸ் பண்ண பிரான்சுக்குள்ளேயே ஒரு சிஸ்டம் வைக்காததுக்கு வேணும்ன்னா அவங்களுக்கு நன்றி சொல்லிக்கலாம். 

பாஸ்வேர்டுக்குள்ள டெக்னாலஜியை ஒளிச்சு வச்சிருக்கான் ஆண்ட்ராய்டுக்காரன். கேர்ள் ப்ரெண்டு கூட எடுத்த செல்ஃபி, பக்கத்து வீட்டு ஆன்ட்டி சாப்பிட்ட குல்ஃபியை எல்லாம் மொபைல்ல சேவ் பண்ணி வச்சா மாட்டுறதுக்கு வாய்ப்பு அதிகம். அதுக்காகவே ஒரு ஆப் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த ஆப் இன்ஸ்டால் பண்றப்ப ரெண்டு பாஸ்வேர்டு கேட்கும். 1234ன்னு டைப் பண்ணுனா, கால்குலேட்டரா ஓப்பன் ஆகுற ஆப், இன்னொரு சீக்ரெட் பாஸ்வேர்டு டைப் பண்ணுனா கேலரியா மாறும். உள்ள ஃபோட்டோக்களா ஓடும். வீட்டுல மனைவியோ, அல்லது கேர்ள் ஃப்ரெண்டு நம்பர் டூ வோ நம்ம மொபைலை செக் பண்ணுனாலும் மாட்டிக்காம இருக்க உதவுமாம் இந்த டபுள் பாஸ்வேர்டு ஆப். ஆபத்பாந்தவா.. அனாதரட்சகா.. பாஸ்வேர்டு பிதான்னு கை எடுத்து கும்பிடுறாங்க ஆல் பர்ப்பஸ் ரோமியோக்கள். 

பாஸ்வேர்டுல இவ்ளோ நல்லது பண்ற இதே உலகத்துல தான் பாம் வைக்கிறவங்களும் இருக்காங்க. பஸ்ல போறப்ப போரடிக்குதுன்னு, மொபைலுக்கு “Virus found"ன்னு பேரு வச்சிருவானுங்க. அடுத்தவன் மொபைல்ல இவன் மொபைல் டிடெக்ட் ஆனா எதோ வைரஸ் வந்துடுச்சுன்னு பதறிட்டு மொபைல் ஆஃ பண்ணி வைக்கணும். அதுல ஒரு குட்டி சந்தோஷம். பொண்ணு பொறந்தா முருகேசின்னு பேரு வைக்கச் சொன்ன கவுண்டமணி காலால ரெண்டு எத்து வாங்கினாதான் அடங்குவாங்க. எதிர்வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்தா அது பேர கண்டுபிடிக்கக் கூட இந்த டெக்னிக்தான் யூஸ் ஆகுது. “Ishubaby", "realrenu"ன்னு பேரு வச்சா எப்படிங்க? இந்த மாதிரி பேரு வைக்கிறவங்க பாஸ்வேர்டையும் இந்த அழகுலதான் வைப்பாங்கன்றதுதான் இண்டெர்நெட் தியரி. 

பாஸ் பண்ண சோம்பேறித்தனமா இருக்கலாம்.. பாஸ்வேர்டுல என்னய்யா சோம்பேறித்தனம்? கீபோர்டுல வரிசையா இருக்கிற qwerty, asdfgh, 123456ன்னு பாஸ்வேர்டு வைப்பாங்க. உலகத்துல அதிகமா யூஸ் பண்ணப்படுற பாஸ்வேர்டு எது தெரியுமா? qwerty தானாம். நமக்குச் சொத்து எதுவும் இல்லாம இருக்கலாம். சொந்தமா ஒரு பாஸ்வேர்டு கூடவா வச்சிக்கக் கூடாது? யோசிங்க பாஸ். புதுசா, இளசா, ரவுசா யோசிங்க. ஜிமெயில்ல ஐடி அவலைபிளான்னு பாத்துட்டுதான் குழந்தைக்கே இப்பெல்லாம் பேரு வைக்கிறாங்க. நாம பாஸ்வேர்டுக்காச்சும் கொஞ்சம் மெனக்கெடலாம் இல்ல?

நான் பலகாலமா யோசிச்சு, எனக்குன்னு வச்சிருக்கிற பாஸ்வேர்டு இதுதான் - ***********

- கார்க்கிபவா

ஓவியம் :கார்த்திகேயன் மேடி