Published:Updated:

ஸ்மார்ட்டாக வேலை செய்ய 5 விதிகள் ரொம்ப முக்கியம்! #MondayMotivation

ஸ்மார்ட்டாக வேலை செய்ய 5 விதிகள் ரொம்ப முக்கியம்! #MondayMotivation
ஸ்மார்ட்டாக வேலை செய்ய 5 விதிகள் ரொம்ப முக்கியம்! #MondayMotivation

சரியா பாதி கிணறு தாண்டியது மாதிரி பாதி மாதத்தில் இருக்கிறோம். இன்னும் சம்பள தேதிக்கு இரண்டு வாரம் இருக்கிறது. சரி அதுவரைக்கும் வேலை செய்தே ஆகவேண்டும் இல்லையா... ஆனால் சுலபமாகச் செய்யும் வேலையைக்கூட நம்மிடம் இருக்கிற சின்னச் சின்ன மொக்கையான பழக்கவழக்கத்தினால் நிறைய கஷ்டப்பட்டுச் செய்கிறோம். முதலில் நம்முடைய வேலை செய்யும் திறனை மேம்படுத்திக்கொள்ளும் 5 விதிகளை இன்றைய #MondayMotivation-ல்  பார்ப்போம். அதாவது, இனிமேலாவது திருந்தும் வழியைப்பார்ப்போம்.

 1 -  ஒரு வேலையை எடுத்தால், அது முடிவதற்கு குத்துமதிப்பாக எவ்வளவு நேரம் ஆகும் என்று உங்களுக்கே தெரியும். உதாரணத்துக்கு இந்த ஆர்ட்டிக்கிளை  முழுதாக டைப் அடிக்க 1 மணி நேரம் ஆகும். ஆனால், இடையில் ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு அங்கே ஒரு நடை, அப்புறம் ட்விட்டரில் ஏதாவது மென்சன் வந்திருக்கிறதா என அங்கே லைட்டா எட்டிப்பார்த்துவிட்டு, வாட்ஸப்பில் ஏதும் செய்தி வந்திருக்கிறதா என்றும் பார்த்து முடிக்க அரைமணி நேரம் ஆகிவிடும். இப்படி இருந்தால் ஒரு மணி நேரத்தில் முடியவேண்டிய வேலை 2 மணி நேரம் ஆகிடும்.  அதனால், உங்கள்  டீம் லீடர் என்ன டெட் லைன் கொடுக்கிறார் எனப் பார்த்து, நீங்களே உங்களுக்கு டெட் லைன் போட்டு அந்த வேலையை அதற்குள் செய்து முடிப்பது பெஸ்ட் சாய்ஸ். 

 2 - பெங்களூருவின் ஐடி நிறுவனங்களில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், அதிக நேரம் சீட்டில் உட்கார்ந்து வேலை செய்பவர்களைவிட, பொசுக்கு பொசுக்குனு எழுந்து போய் வருகிறவர்கள் அதிக வேலை செய்வதாக தெரியவந்திருக்கிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதும் உடல்நலனுக்குத் தீங்கானது. ஒரு சில நிமிடங்கள் அலுவலகத்துக்குள் நடந்துவிட்டு வந்தால், முன்னை விட அதிகம் வேலை செய்யமுடியும். அதற்காக ஆபீஸ் முன்னாடி இருக்கும் டீக்கடையில் யாரிடமாவது நின்று மொக்கை போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது.

3 - கணினி முன்னால் வேலை செய்யும் நிறையப் பேர் நினைப்பது, லன்ச் பாக்ஸை அவர்களின் டெஸ்க்குக்கே கொண்டுவந்து வைத்துக்கொண்டால் வேலை கெடாது என்று.முக்கியமாக  நிறையப் பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால், கண்டிப்பாக மதிய உணவை டெஸ்கில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. நீங்கள் உங்களின் உணவு நேரத்தில் வேலை பற்றிய சிந்தனை இல்லாமல் சாப்பிட்டால்தான் மீண்டும் வந்து வேலையைத் தொடங்கும்போது கவனம் ஒழுங்காக வேலையில் குவியும். 

4 - ’வேலை பார்க்கும் நேரத்தில் மீட்டிங் போட்டு ஏன் வேலை பார்க்கலைனு கேட்பார்கள்’ என்று ஒரு ஃபேமஸ் கார்ப்பரேட் ஜோக் உண்டு. உங்களின் டீம் தொடங்கி, உங்கள் அலுவலகத்தில் உங்களை இணைத்துக்கொள்ளும் மீட்டிங்கில் பங்கு கொள்வது இருக்கட்டும், அது எந்தளவுக்கு உங்கள் கரியருக்கு உதவியாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். சமயங்களில், அடுத்த டீம் வேலையை உங்கள் தலையில் கட்டக்கூட ஐஸ் வைத்து அழைத்துப்போகலாம். கார்ப்பரேட் அலுவலகங்களில் மீட்டிங் தவிர்க்க முடியாதுதான். ஆனால் கூப்பிட்டவுடன் போய் இரண்டு மணி நேரம் அங்கு இருந்துவிட்டு, ’இதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று சொல்லவேண்டாம். அழைப்பு வந்தவுடனே எதற்கு ஏன் என்று கேட்டு தேவையற்ற மீட்டிங்களைத் தவிர்த்துவிடுங்கள். 

5 - இதுதான் மிக முக்கியமான விஷயம். நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும்;  காலையில் போனவுடன் செய்யவேண்டிய வேலை எது என ப்ளான் செய்துகொள்வது மிகவும் அவசியம். அடுத்த நாளுக்கான 30 சதவிகித நேரத்தை முதல்நாள் செய்யும் ப்ளான் மிச்சப்படுத்திக்கொடுக்கும்.

ஓகே நண்பர்களே மேலுள்ள மாதிரி உங்கள் வொர்க்கிங் ஸ்டைலை மாற்றினீர்கள் என்றால், கீழே கமென்ட் பாக்ஸில் கண்டிப்பாகக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.