Published:Updated:

வீடு, ஆபீஸை திருப்திப்படுத்த `கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர்' கச்சிதமா?

கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர்
கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர்

அலுவலக வேலையையும் குடும்பத்தையும் ஒருசேர நிர்வகிப்பது எப்படி என்ற குழப்பம் பெரும்பாலானோருக்கு ஏற்படுவது இயல்புதான்.

அலுவலக நேரத்தில் வீட்டு வேலை செய்வது அலுவலகத்துக்குத் தெரிந்தாலும் கெட்ட பெயர்; வீட்டிலிருந்து அலுவலக வேலையையே செய்துகொண்டிருந்தால் வீட்டிலும் கெட்ட பெயர். இத்தகைய இக்கட்டான சூழலில், "வேலையையும் குடும்பத்தையும் ஒருசேர நிர்வகித்து சிறப்பாகச் செயல்படுவது எப்படி...'' என்று டி.சி.எஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் நயீம் கான் விளக்குகிறார்...

வீட்டிலிருந்தே அலுவலக வேலையைச் செய்பவர்கள் தங்கள் வேலைக்கு முன்னுரிமை தருவதுபோல், குடும்பத்தினருக்கும் முன்னுரிமை தந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அலுவலக வேலையையும் குடும்பத்தையும் ஒருசேர நிர்வகிப்பது எப்படி என்ற குழப்பம் பெரும்பாலானோருக்கு ஏற்படுவது இயல்புதான்.

இந்தப் பிரச்னைக்கு நான் சொல்லும் முதல் தீர்வு CCC. அதாவது, கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர் (Corporate Clock Culture) என்ற வாழ்க்கை முறை.

இந்த வாழ்க்கை முறையைத் தேர்வு செய்து, இந்த முறையில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தை மூன்று எட்டு மணி நேரங்களாகப் பிரித்துக்கொள்வதுதான் கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர். இதில் முதல் எட்டு மணி நேரம் நம் தனிப்பட்ட வேலைகள் மற்றும் குடும்பத்துக்கானது. இரண்டாவது எட்டு மணி நேரம் அலுவலக வேலைகளுக்கானது. மூன்றாவது 8 மணி நேரம் நாம் உறங்கி ஓய்வெடுப்பதற்கானது.

எந்தக் காரணத்துக்காகவும் நாம் உறங்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. கட்டாயமாக எட்டு மணி நேரத்தை நாம் உறங்குவதற்கு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த எட்டு மணி நேரம் முழுக்க முழுக்க நமக்கானது, குடும்பத்துக்கானது.

நாம் குளிப்பது, சாப்பிடுவது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிப்பது போன்ற தனிப்பட்ட செயல்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். அடுத்த எட்டு மணி நேரத்தை முழுவதுமாக அலுவலக வேலைகளுக்கு ஒதுக்கலாம்.

கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர்
கார்ப்பரேட் கிளாக் கல்ச்சர்

வொர்க் ஃப்ரம் ஹோம் என்றால், 24 மணி நேரமும் லேப்டாப் முன்பே அமர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அதுபோல, எட்டு மணி நேரத்துக்கு மேல் அலுவலக வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப் போவதும் இல்லை. எனவே, நம்மிடம் இருக்கும் 16 மணி நேரத்தில் முழுமையாக 8 மணி நேரத்தை அலுவலக வேலைகளுக்காக நேர்மையாகச் செலவிடலாம்.

அலுவலகத்தில் செய்வதுபோல் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் வீட்டிலிருந்து வேலை செய்வது கஷ்டம்தான். இதைக் கொஞ்சம் சுலபமாக்க நம்மிடமுள்ள 16 மணி நேரத்தை 'அப்ரோச்-A', 'அப்ரோச்-B' என இரண்டுவிதமாகக் கையாளலாம்.

அப்ரோச் A & B குறித்து முழுமையாக அறியவும், திட்டமிடலில் சிறப்பாக ஈடுபடவும், 'வொர்க் ஃப்ரம் ஹோமா... வொர்க் ஃபார் ஹோமா?' என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், வெளிப்படைத்தன்மை அவசியத்தை உணரவும் முழுமையான வழிகாட்டுதல்களை நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையின் வழியாகப் பெற்றிட > வீடே அலுவலகம்... வேண்டாம் அலட்சியம்..! - ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வழிமுறைகள் Click Here https://bit.ly/3brwM5I

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு