Published:Updated:

ஏர்போர்ட்டில் பயணிகளை வரவேற்கும் பன்றிக்குட்டி 'லிலு'!

உலகின் முதல் 'ஏர்போர்ட் தெரபி பிக்' (Airport Therapy Pig) எனும் சிறப்புடன் வலம்வரும் பன்றிக்குட்டி.

பன்றிக்குட்டி 'லிலு'
பன்றிக்குட்டி 'லிலு' ( medium.californiasun.co sfchronicle.com winkgo.com )

தீம் பார்க்கில் ஒவ்வொரு முறையும் ராட்டினத்தில் ஏறும்போது, வயிற்றைக் கலக்கும் அளவுக்கு பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அதேபோல், முதன் முதலாக விமானத்தில் பயணிப்பவராக இருந்தாலும், பலமுறை பயணம் செய்தவராக இருந்தாலும், பலருக்கும் 'பதற்றம்' என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

நாய்க்குட்டிகளுடன் 'லிலு'
நாய்க்குட்டிகளுடன் 'லிலு'
instagram.com/lilou_sfpig/

விமானப் பயணத்துக்கு முன்பான பதற்றத்தைப் போக்கும் விதமாக, நாய்க்குட்டிகளின் மூலம் பயணிகளைக் கவரும் வழக்கம், சான் ஃபிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஏர்போர்ட்டில் நாய்க்குட்டிகளை உலவவிட்டு, பயணிகளுடன் பழகவிட்டு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவை வலுப்படுத்தும் நோக்கத்திலும், விலங்குகளின் மீதான பயத்தை விரட்டும் எண்ணத்திலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, SPCA (Society For Prevention of Cruelty to Animals) எனும் அமைப்பு.

பயணிகளுடன் விளையாடும் 'லிலு'
பயணிகளுடன் விளையாடும் 'லிலு'
abcnews.go.com

சமீபத்தில், இந்த அமைப்பில் புது வரவாக இணைந்துள்ளது, ஒரு பன்றிக்குட்டி. மற்ற பன்றிகளைப் போல் இல்லாமல், அளவில் சிறியதாகவும் நாய்க்குட்டிகளைப் போன்று உடல் முழுவதும் புசுபுசு ரோமத்துடன் குட்டியாக இருக்கும் இந்த 'ஜூலியானா' இன பன்றிக்குட்டியின் பெயர், லிலு.

விதவிதமான உடை, கால் நகங்களில் சிவப்பு நிறச் சாயம் , தலையில் பைலட் தொப்பி அணிந்து, உலகின் முதல் 'ஏர்போர்ட் தெரபி பிக்' (Airport Therapy Pig) எனும் சிறப்புடன் சான்ஃபிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் மிடுக்குடன் வலம்வருகிறது, லிலு.

View this post on Instagram

Fun SFO visit report: 1) Happy Birthday 🎂 to darling 🐶 @sfowagbrigade colleague @bowtiebenga 2) ❤️ traveling musicians 🎶 like @mandybrooksband 🎸 & impromptu duets (🔉 on and listen to the lyrics) 3) catching up with beautiful @melissaabc7 - an @abc7newsbayarea episode will be airing soon 4) my handsome Wag Brigaders @jaggerdwagger @wrigley.murphy_newdles and @bombaythelab are really cool, tall and oh so handsome!! 😍 Check it out 😘💕🐽 - @flysfo @sfowagbrigade @sanfranciscospca - - - - - #sfpig #lilouthepig #lilou #therapypig #petpig #citypig #minipig #pigsofinstagram @thedodo @buzzfeedanimals @abc7newsbayarea @ktvu2 @kpixtv @theellenshow #buzzfeedanimals #abc7now #thedodo #therapyanimal #bayareabuzz #onlyinSF @onlyinsf @cutepetclub @peopletv @9gag #WagBrigade #animalassistedtherapy #airportfashion #airportlife #travelblogger #volunteer #charity #smileambassador #pigambassador #travelbug #airportstyle #spreadlove #spreadjoy #abc7now #filmmaker #interspeciesfriendship

A post shared by LiLou the Pig 🐽 San Francisco (@lilou_sfpig) on

புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் 'லிலு'
புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் 'லிலு'
instagram.com/lilou_sfpig/

தற்போது 5 வயதாகும் லிலு, 3 வயது குழந்தைக்கு இணையான அறிவுடையதாம். பயணிகளுடன் விளையாடுவது, பொம்மை பியானோவில் இசைத்து மகிழ்விப்பது, செல்ஃபி எடுக்கும் பயணிகளுக்கு விதவிதமாக போஸ் கொடுப்பது எனப் பயணிகளுடன் சுலபமாகப் பழகும் லிலுவுக்கு, ஏர்போர்ட்டில் ஏகப்பட்ட ரசிகர்களாம்.