Published:Updated:

`வங்கிக் கணக்கில் குவிந்த 37 மில்லியன் டாலர்!'- ஒருநாள் கோடீஸ்வரரான அமெரிக்கப் பெண்

அமெரிக்கப் பெண்மணி - ரூத் பலூன்
அமெரிக்கப் பெண்மணி - ரூத் பலூன் ( Facebook / WILQ FM )

நான் மில்லியனராக இருந்தேன். அதற்கான ஸ்கிரீன் ஷாட் என்னிடம் உள்ளது.

ரூத் பலூன், தென்அமெரிக்காவிலுள்ள டல்லாஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்தவாரம் தன்னுடைய வங்கிக் கணக்கில் மீதத்தொகை மற்றும் பணப் பரிவர்த்தனை ஆகியவற்றை சரிபார்க்க சாதாரணமாக வங்கியின் ஆப்பில் லாக்-இன் செய்துள்ளார். தன்னுடைய கணக்கில் 37 மில்லியன் டாலர் பணம் அதிகமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Screenshot
Screenshot

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ரூத் அளித்த பேட்டியில், ``நான் மில்லியனராக இருந்தேன். அதற்கான ஸ்கிரீன் ஷாட் என்னிடம் உள்ளது. அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை ரியல் எஸ்டேட்டுக்கு பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``நான் டெக்ஸாஸ் வங்கியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். தொடர்புகொள்ள முடியவில்லை. என் கணவருக்கு ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பி இதுபற்றிக் கூறினேன். பின்னர், என்னுடைய கணவர் டெக்ஸாஸ் வங்கியை அணுகியபோது தவறுதலாக இந்தச் சம்பவம் நடந்துவிட்டது என்று தெரிவித்தனர். 37 மில்லியன் டாலர், கிறிஸ்துமஸ் மிராக்கிளாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கடைசியில் வங்கி ஊழியரின் பிழையாக மாறிவிட்டது” என்றார் வேதனையுடன்.

Bank
Bank

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டெக்ஸாஸ் வங்கி நிர்வாகத்தினர், ``வெளிநாட்டுக் கரன்ஸிகளைப் பரிவர்த்தனை செய்யும்போது பணமதிப்பு காரணமாக வங்கி ஊழியர்கள் தகவல்களை உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். ஒரு வாடிக்கையாளர் பணத்தைச் செலுத்த வந்தபோது, எங்களுடய பிரதிநிதி தொகையை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக வங்கிக் கணக்கு எண்ணைத் தட்டச்சு செய்துவிட்டார். இதனால், இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. இதுகுறித்து, வாடிக்கையாளர் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது இந்த நிகழ்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு