Published:Updated:

'அம்மாவின் அன்பு'- மாற்றுத்திறன் மாணவர்களுக்காக உணவு சமைத்து, பரிமாறிய 'அவள் விகடன்' வாசகிகள்!

அவள் விகடன், சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி இணைந்து வழங்கிய 'அம்மாவின் அன்பு', சப்போர்டடு பை சவோரிட் சேமியா, ஆஸ்ட்ரோ ஹியரிங் கேர்.

அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'

சென்னை, சாந்தோம் சாலையில் மைலாப்பூர் சி.எஸ்.ஐ சிறப்புப்பள்ளி அமைந்துள்ளது. காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி அது.

அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'
அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள் 2019

அந்தப் பள்ளியில் அவள் விகடன் சார்பில் அவள் விகடன் வாசகிகள், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகிகள் கலந்துகொண்டு இந்த மாணவர்களுக்காக சைவ, அசைவ உணவு வகைகள் தயாரிப்பதில் வெகு உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.

'அம்மாவின் அன்பு - அன்னம் படைத்து அன்பை பரிமாறுவோம்' என்ற அன்பு வாசகத்தோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் வாசகிகள், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'

சிறப்பு விருந்தினர்களாக சுட்டி அரவிந்த், விக்னேஷ் காந்த், நடிகை மோனிகா, ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களையும் விகடன் வாசகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

வாசகிகளுக்கு உதவும் வகையில் செஃப் தேவகுமார் உணவுத் தயாரிப்பை மேற்பார்வையிட்டு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வழிநடத்தினார். விழாவின் தொடக்க நிகழ்ச்சி பள்ளியின் விளையாட்டு மைதானத்திலும், தாய்மார்களின் சமையல், கூடத்திலும் நடைபெற்றது.

தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா! - அவள் விகடன் கிச்சன் `யம்மி விருதுகள்'
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'

இன்றைய இந்த நிகழ்வு குறித்து வாசகிகள் கூறும்போது, "வீட்டில் மூணு, நாலு பேருக்குச் சமைக்கவே எங்களுக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா இங்கே இத்தனை மாணவர்களுக்குச் சமைக்கிறோமேங்கிறதை நினைத்துப் பெருமையாவும் ரொம்ப மகிழ்ச்சியாவும் உணர்றோம். கஷ்டம்கூடத் தெரியலை. இவங்க எல்லோரும் எங்கள் பிள்ளைங்கங்கிற உணர்வில நாங்க இந்த உணவைத் தயாரிக்கிறோம்" என்றனர் உள்ளத்திலிருந்து.

காலை 10 மணிக்குத் தொடங்கிய உணவுத் தயாரிப்பு நிகழ்ச்சி மதியம் வரை நடைபெற்றது. சேமியா, கீமா, மட்டன் பிரியாணி, பாயசம், பனீர் பட்டர் மசாலா, ரைத்தா என உணவு வகைகளை ஒவ்வொரு கட்டமாக வாசகிகள் ஆர்வத்தோடு தயாரித்துக் கலக்கினர்.

Vikatan
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'
அவள் விகடன் 'அம்மாவின் அன்பு'

பின்னர் மாணவர்கள் அனைவரும் அமர்ந்து உணவு உண்டனர். வாசகிகள் பரிமாறியதோடு மட்டுமன்றி, தாங்களும் உடன் அமர்ந்து மாணவர்களுக்கு ஊட்டிவிட்ட காட்சி, அத்தனை நெகிழ்ச்சி!